உள்ளடக்கத்துக்குச் செல்

பண்டார் உத்தாமா எம்ஆர்டி நிலையம்

ஆள்கூறுகள்: 3°8′47.92″N 101°37′7.49″E / 3.1466444°N 101.6187472°E / 3.1466444; 101.6187472
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
 KG09   SA01  பண்டார் உத்தாமா
| எம்ஆர்டி | எல்ஆர்டி
நிலையத்தின் வெளிப்புறக் காட்சி.
பொது தகவல்கள்
வேறு பெயர்கள்Bandar Utama MRT Station
Stesen MRT Bandar Utama
万达镇站
அமைவிடம்பண்டார் உத்தாமா, சிலாங்கூர், மலேசியா
ஆள்கூறுகள்3°8′47.92″N 101°37′7.49″E / 3.1466444°N 101.6187472°E / 3.1466444; 101.6187472
உரிமம் எம்ஆர்டி நிறுவனம்
பிரசரானா
இயக்குபவர்Rapid_KL_Logo ரேபிட் ரெயில்
தடங்கள்9  காஜாங் 
11  சா ஆலாம் வழித்தடம்  (கட்டுமானத்தில்)
நடைமேடை2 பக்க நடை மேடைகள்
இருப்புப் பாதைகள்2
இணைப்புக்கள்எதிர்கால நிலையம்  SA01 
கட்டமைப்பு
கட்டமைப்பு வகைஉயர்த்தப்பட்ட நிலை
நடைமேடை அளவுகள்3
தரிப்பிடம்Parking 500 Motorbike 245
துவிச்சக்கர வண்டி வசதிகள் இல்லை
மாற்றுத்திறனாளி அணுகல்ஊனமுற்றவர் அணுகல் உண்டு
மற்ற தகவல்கள்
நிலையக் குறியீடு KG09   SA01 
வரலாறு
திறக்கப்பட்டது KG09  (MRT) 16 திசம்பர் 2016
திறந்தது SA01  (LRT) 31 திசம்பர் 2025
சேவைகள்
முந்தைய நிலையம்   ரேபிட் கேஎல்   அடுத்த நிலையம்
   
முத்தியாரா எம்ஆர்டி
குவாசா டாமன்சாரா
 
காஜாங் வழித்தடம்
 
துன் டாக்டர் இசுமாயில்
காஜாங் நிலையம்
முடிவிடம்
 
சா ஆலாம் வழித்தடம்
 
துன் டாக்டர் இசுமாயில்
காஜாங் நிலையம்
அமைவிடம்
Map
நிலையத்தின் ஒருங்கிணைவு பக்கதளம்

பண்டார் உத்தாமா எம்ஆர்டி நிலையம் (ஆங்கிலம்: Bandar Utama MRT Station; மலாய்: Stesen MRT Bandar Utama) என்பது மலேசியா, சிலாங்கூர், பண்டார் உத்தாமா நகர்ப்பகுதிக்குச் சேவை வழங்கும் ஒரு விரைவுப் போக்குவரத்து நிலையம் ஆகும். இந்த நிலையம் எம்ஆர்டி காஜாங் வழித்தடத்தில் அமைந்துள்ளது.[1]

இந்த நிலையம் பண்டார் உத்தாமா நகர்ப்பகுதி; மற்றும் டாமன்சாரா-பூச்சோங் விரைவுச்சாலையின் இரு மருங்கிலும் அமைந்துள்ள தாமான் துன் டாக்டர் இசுமாயில் குடியிருப்பு பகுதிக்கும் சேவை செய்கிறது. இந்த நிலையம் 2016 டிசம்பர் 16 அன்று எம்ஆர்டி காஜாங் வழித்தடத்தின் முதல் கட்ட நடவடிக்கைகளின் கீழ் திறக்கப்பட்டது.[2]

இந்த நிலையம் கிள்ளான் பள்ளத்தாக்கின் மிகப்பெரிய வணிக வளாகங்களில் ஒன்றான 1 உத்தாமா வணிக வளாகத்திற்கு (1 Utama Shopping Centre) அடுத்து அமைந்துள்ளது.[3] நிலையத்திற்கு அருகிலுள்ள பிற பிரபலமான அடையாளங்கள் செரி பெந்தாஸ் (Sri Pentas) (மீடியா பிரைமாவுக்குச் சொந்தமான தொலைக்காட்சி சேவைகளின் தலைமையகம்), ஒன் வேர்ல்ட் தங்கும் விடுதி (One World Hotel), பிளாசா ஐபிஎம் (Plaza IBM) மற்றும் கேபிஎம்ஜி கோபுரம் (KPMG Tower) ஆகியவை ஆகும். இவை ஒரு பாதசாரி இணைப்புப் பாலம் வழியாக நிலையத்துடன் இணைக்கப்பட்டுள்ளன.

இந்த நிலையம் எதிர்கால சா ஆலாம் வழித்தடத்துடன் ஒரு பரிமாற்ற நிலையமாக செயல்படும். இது தற்போது கட்டுமானத்தில் உள்ள ஓர் இலகு விரைவு போக்குவரத்து (LRT) நிலையமாகும், இது பண்டார் உத்தாமா நகர்ப்புறத்தை கிள்ளானில் உள்ள ஜொகான் செத்தியா எல்ஆர்டி நிலையத்துடன் இணைக்கும்.[4]

நிலைய அம்சங்கள்

[தொகு]

இந்த நிலையம் பண்டார் உத்தாமாவில் உள்ள செரி பெந்தாஸ் கட்டிடத்திற்கு நேர் பின்னால் டாமன்சாரா-பூச்சோங் விரைவுச்சாலைக்கு (LDP) அருகில் அமைந்துள்ளது. நிலையத்தின் ஆதரவு தூண்கள் டாமன்சாரா-பூச்சோங் விரைவுச்சாலைக்கும்; விரைவுச்சாலைக்கு இணையாக இயங்கும் நீர் கால்வாய்க்கும் இடையில் அமைந்துள்ளன.

காஜாங் வழித்தடத்திற்கான உயர்த்தப்பட்ட நிலைய வடிவமைப்பைக் கொண்டுள்ள இந்த நிலையம், இரண்டு ஒருங்கிணைவு பக்க தளங்களுக்கு (Concourse Level) மேலே உள்ளது. இருப்பினும், மற்ற உயர்த்தப்பட்ட நிலையங்களைப் போலல்லாமல், நிலையத்தை நேரடியாக தரை மட்டத்துடன் இணைக்கும் நகரும் படிகள், மின்தூக்கிகள் அல்லது படிக்கட்டுகள் இல்லை. மேலும் நிலையத்திற்கு நேர் கீழே தரை மட்டத்தில் பேருந்துகள், டாக்சிகள் மற்றும் சீருந்துகளுக்கான எந்த இடவசதியும் இல்லை.

நிலைய அமைப்பு

[தொகு]
L2 நடைமேடை தளம் பக்க நடைமேடை
நடைமேடை 1 9  காஜாங்  (→) காஜாங்  KG35  (→)
நடைமேடை 2 9  காஜாங்  (←) குவாசா டாமன்சாரா  KG04  (←)
பக்க நடைமேடை
L1 இணைப்புவழி கட்டணப் பகுதிக்கான நுழைவாயில்கள், நடைமேடைகளுக்கான நகரும் படிக்கட்டுகள், கட்டண இயந்திரங்கள், வாடிக்கையாளர் சேவை அலுவலகம், நிலையக் கட்டுப்பாடு, கடைகள்
G தரை தளம் அவசர சேவைகளுக்காக வாகனங்கள் நிறுத்துமிடம்

வெளியேறும் வழிகள் - நுழைவாயில்கள்

[தொகு]
 காஜாங்  வழித்தட நிலையம்
நுழைவாயில் இடம் இலக்கு தோற்றம்
A 1பவர் அவுஸ் கட்டிடத்திற்கு பாதசாரி இணைப்பு பாலம் பேருந்து நிற்குமிடம், கட்டண வாகன நிறுத்துமிடம், 1பவர் அவுஸ், பெர்சியாரான் பண்டார் உத்தாமா
B 1 உத்தாமா வணிக வளாகத்திற்கு பாதசாரி இணைப்பு பாலம் 1 உத்தாமா வணிக வளாகம், ஒன் வேர்ல்ட் தங்கும் விடுதி, ஐபிஎம் கோபுரம், கேபிஎம்ஜி கோபுரம், 1 முதல் அவென்யூ, செரி பெந்தாஸ்

பேருந்து சேவைகள்

[தொகு]
பேருந்து தொடக்கம் இலக்கு பயணவழி இணைப்பு
T811 [5]  KG09  பண்டார் உத்தாமா (நுழைவாயில் A) கம்போங் சுங்கை காயூ ஆரா
பண்டார் உத்தாமா BU11-12
முத்தியாரா துரோபிக்கானா
பெர்சியாரான் பண்டார் உத்தாமா
லெபோ பண்டார் உத்தாமா
பெர்சியாரான் துரோபிக்கானா
ஜாலான் துரோபிக்கானா செலாத்தான்
ஜாலான் மஸ்ஜீத், கம்போங் சுங்கை காயூ ஆரா
முடிவிடம்
T812 [6]  KG09  பண்டார் உத்தாமா (நுழைவாயில் A) தாமான் துன் டாக்டர் இசுமாயில்
கம்போங் சுங்கை பெஞ்சாலா
பெர்சியாரான் பண்டார் உத்தாமா
டாத்தாரான் பண்டார் உத்தாமா
லெபோ பண்டார் உத்தாமா
ஜாலான் புர்கானுடின் எல்மி
ஜாலான் டத்தோ சுலைமான்
ஜாலான் சுங்கை பெஞ்சாலா
டாமன்சாரா-பூச்சோங் விரைவுச்சாலை
முடிவிடம்

பிற பேருந்துகள்

[தொகு]
பேருந்து தொடக்கம் இலக்கு பயணவழி இணைப்பு
506  பண்டார் உத்தாமா பேருந்து முனையம்  KT3  PY36  புத்ராஜெயா சென்ட்ரல்  KG09  பண்டார் உத்தாமா (நுழைவாயில் A) (பண்டார் உத்தாமா)
டாமன்சாரா-பூச்சோங் விரைவுச்சாலை E11
டாமன்சாரா உத்தாமா
 KJ24  கிளானா ஜெயா எல்ஆர்டி நிலையம்
 SP24  பூச்சோங் ஜெயா எல்ஆர்டி நிலையம் / ஐஓஐ வளாகம்
 SP25  பண்டார் பூச்சோங் எல்ஆர்டி நிலையம்
பூச்சோங் உத்தாமா
புத்ரா ஜெயா-சைபர் ஜெயா விரைவுச்சாலை 29
451 , P108, T508, T508B, T509, T510, T511, T512, T512B, T513, T513B, T514B, T523, T591B
802 [7] கிளானா ஜெயா எல்ஆர்டி நிலையம் செக்சன் 11, கோத்தா டாமன்சாரா டாமன்சாரா-பூச்சோங் விரைவுச்சாலை
பெர்சியாரான் பண்டார் உத்தாமா
 KG09  பண்டார் உத்தாமா (நுழைவாயில் A)
Lebuh பண்டார் உத்தாமா
பெர்சியாரான் சூரியன்
 KG08  முத்தியாரா டாமன்சாரா எம்ஆர்டி நிலையம்

 KG07  சூரியன் எம்ஆர்டி நிலையம்
பெர்சியாரான் மகோகனி

T808 

காட்சியகம்

[தொகு]

பண்டார் உத்தாமா எம்ஆர்டி நிலையம்

நுழைவாயில் A, பேருந்து வாகன நிறுத்துமிடம்

[தொகு]

மேலும் காண்க

[தொகு]

மேற்கோள்கள்

[தொகு]
  1. "Bandar Utama MRT Station | mrt.com.my". mrt.com.my. Retrieved 7 September 2025.
  2. "Bandar Utama MRT station near One Utama shopping mall & 1Powerhouse". klia2.info. 29 January 2019. Retrieved 7 September 2025.
  3. "Top 10 attractions near latest MRT stations" (in en). Thestar.com.my. 2016-12-17. https://www.thestar.com.my/metro/community/2016/12/17/top-10-attractions-near-mrt-stations-starmetro-takes-a-look-at-points-of-interest-around-the-station//. 
  4. "All systems go for LRT3 in 2020" (in en). Thestar.com.my. 2016-12-17. https://www.thestar.com.my/news/nation/2016/11/09/all-systems-go-for-lrt3-in-2020-line-expansions-will-service-over-two-million-commuters///. 
  5. RapidKL Bus Route 811
  6. RapidKL Bus Route 812
  7. "RapidKL Bus Route 802". Archived from the original on 2017-07-28. Retrieved 2018-03-04.

வெளி இணைப்புகள்

[தொகு]