பண்டம் (கோழி)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
செப்ரைட் ஒரு உண்மையான பண்டம் கோழி இனமாகும்
ஜப்பானிய பண்டம் குஞ்சு (இடது) ஆர்பிங்டன் குஞ்சுடன் ஒப்பிடப்படுகிறது

பண்டம் (bantam) என்பது கோழி அல்லது வாத்து போன்ற சிறிய வகைக் கோழிகள் ஆகும். பெரும்பாலான பெரிய கோழி இனங்கள் மற்றும் வாத்து இனங்கள் பண்டம் இனத்துடன் தொடர்பு கொண்டுள்ளன. இது நிலையான அளவிலான கோழியை விட மிகச் சிறியது.

சொற்பிறப்பியல்[தொகு]

இந்தோனேசியாவின் மேற்கு சாவகம் தீவில் உள்ள பண்டம்[1] துறைமுக நகரத்தின் பெயரிலிருந்து பண்டம் என்ற சொல் உருவானது. ஐரோப்பிய மாலுமிகள் கடல் பயணங்களுக்காக உயிருள்ள கோழிகளைப் பயன்படுத்தும் போது தென்கிழக்கு ஆசியாவினை பூர்வீகமாகக் கொண்ட கோழி இனங்கள் பயனுள்ளதாக இருப்பதைக் கண்டறிந்தனர். இத்தகைய சிறிய கோழிகள் பண்டம் என்று அழைக்கப்பட்டன. 

தொடர்புடையன[தொகு]

  • கோழி இனங்களின் பட்டியல்
  • அமெரிக்க பண்டம் சங்கம்
  • கால் வாத்து - வாத்துகளின் பண்டம் இனம் முதலில் காட்டு வாத்துகளை துப்பாக்கியுடன் வேட்டையாடுபவர்களின் வரம்பிற்குள் ஈர்ப்பதற்காக வளர்க்கப்பட்டது, இப்போது செல்லப்பிராணிகளாக வளர்க்கப்படுகிறது.
  • கோழிகளில் குள்ளத்தன்மை

மேற்கோள்கள்[தொகு]

  1. "Online Etymology Dictionary". Etymonline.com. பார்க்கப்பட்ட நாள் 2012-08-13.
"https://ta.wikipedia.org/w/index.php?title=பண்டம்_(கோழி)&oldid=3460852" இலிருந்து மீள்விக்கப்பட்டது