பணிவெளி மெய்நிகராக்கம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

பணிவெளி மெய்நிகராக்கம் (Workspace virtualization) என்பது ஒரு கணினியில் பயன்படும் மென்பொருள்கள் செயலிகளின் பயன்பாட்டு மெய்நிகராக்கம் தொடர்புடைய பயனீட்டுகணினிகளில் பயன்படுத்தும் ஒரு தொழில்சார்ந்த உத்தி ஆகும். பல பயன்பாட்டுச் செயலிகளின் தொகுப்பு பணிவெளி மெய் நிகராக்கம் எனப்படுகிறது.க ணினி பணிவெளியில் தனக்கென்று சிறப்பு செயலிகளை பிரித்து செயல் பொதிவுடன் இயங்கும்நிலை பணிவெளி மெய்நிகராக்கம் எனப்படுகிறது.

குறைவான பணிவெளியில் கெர்னல் கணித உட்கரு மற்றும் உட்கூறுகள் மெய் மூலங்கள் பயன்பாடுகள் தரவுகள் பின்னனி கதைக்களன் சிறப்புரிமை பெற்ற இயங்கு தளங்கள் போன்றவற்றை எளிதில் பணிவெளி மெய் நிகராக்கம் மூலம் செயல்படுத்த முடியும். பணிவெளி மெய்நிகராக்கத்தின் இயங்குதள அளவானது சிறப்பு பெற்ற மேம்படுத்தப்பட்ட மேசைத்தளகணினியின் இயங்குதள அளவைவிட மிகமிகக் குறைவானதாகும். பணிவெளி மெய்நிகராக்கம் மூலம் பணிவெளியில் உள்ள பயன்பாடுகள் ஒன்றுடன் ஒன்று இனைந்தும். ஒன்றுடன் ஒன்று இடைவினைப்பட்டும். பயனாளிகளின் தேவைகளைப் பூர்த்தி செய்யும் விதத்தில் புதிய வெளிபாடுகளைக் கொடுக்கின்றன.

மைக்ரோசாப்ட் செய்பணித்தாள் மைக்ரோசாப்ட் ஆவணம் போன்ற பல்வேறு செயல்களை ஒன்றுடன் ஒன்று இணைத்துப் பதித்து செயல்படுத்துவது பணிவெளி மெய்நிகராக்கத்தில் எளிது. பணிவெளி மெய்நிராக்கத்தின் மூலம் ஒரு கணினியிலிருந்து இயங்குதளம் பயன்பாட்டு செயல்பாடுகள் பயனரின் தரவுகள் செயல் பின்ன்னி போன்றவற்றை மற்றொறு இயங்கு அமைப்பு தளத்திற்கோ அல்லது மற்றெரு கணினிக்கோ எளிதில் மாற்ற இயலும். மேலும் இவற்றை ஒரே கணினி அலகில் சேமிக்கவும் இயலும் கெர்னல் வழி பணிவெளி மெய்நிகராக்க கணினிப் பொறி (WVE) மூலம் அனைத்து வகையான செயல்களையும் முழுமையக முன்னுரிமை குறீயீட்டு தொகுப்புகள் முலம் வேறு ஒரு செயல் கணிப்பொறிக்கு மாற்ற முடியும்.[1]

பணிவெளி மெய்நிகராக்கம் மற்றும் பயன்பாட்டு மெய்நிகராக்கம் இவற்றுக்கிடையே உள்ள வேறுபாடு[தொகு]

பணிவெளி மெய்நிகராக்கத்தின் முலம் தனி பயன்பாடுகளையும் பின்ணனி அமைப்புகளையும் கட்டமைப்புகளையும் மற்றொரு அமைப்புடன் ஒருங்கிணைக்கவும் இடைவினைப்படுத்தவும் முடியு. இச்செயல்பாடு பயன்பாட்டு மேய்நி கராக்கத்தில் இல்லை. பயன்பாட்டு மேய்நிகராக்கத்தில் தனிச் செயல்பாடுகள் முழுமையக பாதுகாக்கபடுகின்றன. ஒரு பயன்பாட்டுடன் மற்றொரு பயன்பாடு இணைவதில்லை. ஒரு பயன்பாடு மற்றொரு பயன்பாட்டிற்கு ஒரு வகை கணினி நச்சு நுண்மமாக செயல்படுகிறது.[2]

மேற்கோள்கள்[தொகு]

  1. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்" இம் மூலத்தில் இருந்து 2014-10-14 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20141014085223/http://virtualization.sys-con.com/node/761326. 
  2. Wolf, By Chris; 09/01/2009. "Workspace Virtualization Grows Up -" (in en-US). https://virtualizationreview.com/articles/2009/09/01/workspace-virtualization-grows-up.aspx.