உள்ளடக்கத்துக்குச் செல்

பட்னா உயிரியல் பூங்கா

ஆள்கூறுகள்: 25°35′47″N 85°05′57″E / 25.596513°N 85.099304°E / 25.596513; 85.099304
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
பட்னா உயிரியல் பூங்கா
பட்னா உயிரியல் பூங்கா
Map
25°35′47″N 85°05′57″E / 25.596513°N 85.099304°E / 25.596513; 85.099304
திறக்கப்பட்ட தேதி1973[1]
அமைவிடம்பட்னா, பிகார், இந்தியா
நிலப்பரப்பளவு152.95 ஏக்கர்கள் (61.90 ha)
விலங்குகளின் எண்ணிக்கை800 [2]
உயிரினங்களின் எண்ணிக்கைமரம்: 300 சிற்றினங்கள்[2]
விலங்குகள்: 70 சிற்றினங்கள்
Fish: 35 species
பாம்ப்: 5 சிற்றினங்கள்
ஆண்டு பார்வையாளர்கள்45-55 லட்சம்[3]
உறுப்புத்துவங்கள்மத்திய விலங்கு காட்சியக ஆணையம்[4]
வலைத்தளம்zoopatna.com

சஞ்சய் காந்தி ஜெய்விக் உத்யன் (Sanjay Gandhi Jaivik Udyan) என்பது சஞ்சய் காந்தி தாவரவியல் மற்றும் விலங்கியல் பூங்கா அல்லது பட்னா உயிரியல் பூங்கா என்றும் அழைக்கப்படுகிறது. இது இந்தியாவின் பீகார் மாநிலம் பட்னாவில் பெய்லி சாலையில் அமைந்துள்ளது.[5][6][7] இந்த பூங்கா 1973ஆம் ஆண்டு மிருகக்காட்சிசாலையாக பொதுமக்களுக்குத் திறக்கப்பட்டது. 2011[8] ஆண்டு புத்தாண்டு தினத்தன்று மட்டும் 36,000க்கும் அதிகமான பார்வையாளர்கள் வருகை தந்தனர். பாட்னாவில் உள்ள இந்த பூங்காவிற்கு அடிக்கடி சுற்றுலா பயணிகள் வரும் தலமாகும்.

வரலாறு

[தொகு]

இந்த பூங்கா முதன்முதலில் தாவரவியல் பூங்காவாக 1969-ல் நிறுவப்பட்டது. அப்போதைய பீகார் ஆளுநர் ஸ்ரீ நித்யானந்த் கனுங்கோ கிட்டத்தட்ட 34 ஏக்கர்கள் (14 ha) தோட்டத்துக்காக ஆளுநர் மாளிகை வளாகத்திலிருந்து நிலம் வழங்கினார். 1972-ல், பொதுப்பணித்துறை 58.2 ஏக்கர்கள் (23.6 ha) வழங்கியது. வருவாய்த் துறை 60.75 ஏக்கர்கள் (24.58 ha) ) நிலத்தினை பூங்கா விரிவாக்கத்திற்காக வனத்துறைக்கு வழங்கி உதவியது.

1973 முதல், இந்த பூங்கா ஒரு உயிரியல் பூங்காவாக உள்ளது. இது ஒரு தாவரவியல் பூங்காவை ஒரு விலங்குக் காட்சிச்சாலையுடன் இணைக்கிறது. பொதுப்பணித்துறை மற்றும் வருவாய்த்துறையிடம் இருந்து கையகப்படுத்தப்பட்ட நிலம் 8 மார்ச் 1983 மாநில அரசால் பாதுகாக்கப்பட்ட வனமாக அறிவிக்கப்பட்டது.

பாட்னா உயிரியல் பூங்காவில் ஒட்டகச்சிவிங்கி
A Resting Antelope at Patna Zoo
பாட்னா உயிரியல் பூங்காவில் ஓய்வெடுக்கும் மிருகம்

விலங்குகள் மற்றும் காட்சி பொருட்கள்

[தொகு]

இந்த மிருகக்காட்சிசாலையில் தற்போது புலி, சிறுத்தை, படைச்சிறுத்தை, நீர்யானை, முதலை, யானை, இமயமலை கருப்புக் கரடி, குள்ள நரி, புல்வாய், புள்ளிமான், மயில், இந்திய மூக்குக்கொம்பன, மலை மைனா, சொம்புமூக்கு முதலை, போன்ற 110 வகையான விலங்குகள் உள்ளன. காண்டாமிருகம், சிம்பன்சி, ஒட்டகச்சிவிங்கி, வரிக்குதிரை, ஈமியூ மற்றும் வெள்ளை மயிலும் காணப்படுகின்றன.

தாவரவியல் பூங்காவாகத் தொடங்கப்பட்ட இந்த பூங்காவில் தற்போது 300க்கும் மேற்பட்ட மரங்கள், மூலிகைகள் மற்றும் புதர்கள் உள்ளன. தாவர கண்காட்சிகளில் மருத்துவ தாவரங்களுக்கான நாற்றங்கால், ஆர்க்கிட், பன்னம், கண்ணாடி இல்லம் மற்றும் ஒரு ரோஜா தோட்டம் ஆகியவை அடங்கும்.

பூங்காவில் மீன் காட்சியகமும் உள்ளது. இது பொது நுழைவுக் கட்டணத்திற்குப் பிறகு மிகப்பெரிய வருவாய் ஈட்டக்கூடியது. மீன் காட்சியகத்தில் சுமார் 35 வகையான மீன்களும், பாம்பு பகுதியில் 5 சிற்றினங்களைச் சேர்ந்த 32 பாம்புகளும் உள்ளன.

பாட்னா உயிரியல் பூங்காவில் மீன்காட்சியகம்

பாதுகாப்பு

[தொகு]

பாட்னா உயிரியல் பூங்கா உலகெங்கிலும் உள்ள அழிந்து வரும் உயிரினங்களைப் பாதுகாக்கவும், இனப்பெருக்கம் செய்யவும் கணிசமான முயற்சிகளை மேற்கொள்கிறது. காட்சிசாலையில் காட்சிப்படுத்தப்படும் காட்டு விலங்குகளை இனப்பெருக்கம் செய்வது ஒரு கடினமான சவாலாக உள்ளது. இந்த மிருகக்காட்சிசாலை சில குறிப்பிடத்தக்க வெற்றிகளைச் சந்தித்துள்ளது.

செயல்பாடுகள்

[தொகு]
  • இந்திய மூக்குக்கொம்பன் கடந்த காலங்களில் பல முறை வெற்றிகரமாக இனப்பெருக்கம் செய்யப்பட்டது. 2008ஆம் ஆண்டில், பாட்னா உயிரியல் பூங்கா இதன் இனப்பெருக்க நுட்பங்களுக்காகப் பாராட்டைப் பெற்றது.[9]
  • 19 ஏப்ரல் 2001 அன்று மிருகக்காட்சிசாலையில் நீர்யானை முதல் முறையாக ஆண் நீர்யானை குட்டியினை ஈன்றது. 2007ஆம் ஆண்டு பிறப்பு உட்பட இன்னும் பல நீர்யானைகள் பிறந்துள்ளன.[10]
  • கடைசியாகப் பிறந்து 16 வருட இடைவெளிக்குப் பிறகு, 18 சூன் 2001 அன்று ஒரு சிறுத்தை இரண்டு குட்டிகளைப் பெற்றெடுத்தது.[ மேற்கோள் தேவை ] 
  • 29 சூன் 2001 அன்று மிருகக்காட்சிசாலையில் ஒரு முதலை முதன்முதலாக இனப்பெருக்கம் செய்தது. இதன் பிறகு கடந்த காலங்களில் பல முறை இங்குள்ள கரியல் அல்லது முதலைகளின் எண்ணிக்கை கடந்த ஐந்து ஆண்டுகளில் 13ல் இருந்து 129ஆக உயர்ந்துள்ளது.[11]
  • சூன் 12, 2001 அன்று மிருகக்காட்சிசாலையில் முதன்முறையாக முள்ளம்பன்றி வளர்க்கப்பட்டு இரண்டு முள்ளம்பன்றிகளைப் பெற்றெடுத்தது. 
    One Horned Rhino in Water Puddle during Summer at Patna Zoo
    [ மேற்கோள் தேவை ]பாட்னா உயிரியல் பூங்காவில் கோடை காலத்தில் தண்ணீர் குட்டையில் ஒரு கொம்பு காண்டாமிருகம்

முயற்சி

[தொகு]
  • நந்தன் கானன் உயிரியல் பூங்கா, புவனேசுவரத்திலிருந்து இந்த மிருகக்காட்சிசாலைக்கு மார்ச் முதல் வாரத்தில் வெள்ளைப்புலி வந்தது[எப்போது?] இதனால் உயிரியல் பூங்காவில் புலிகள் இனப்பெருக்கம் செய்வதற்கான வாய்ப்புகள் அதிகரித்துள்ளது.
  • தற்பொழுது மிருகக்காட்சிசாலையில் ஒற்றை ஆண் வரிக்குதிரை உள்ளது. விரைவில் பெண் வரிக்குதிரை ஒன்று இதனுடன் இணையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது[எப்போது?] மத்திய உயிரியல் பூங்கா ஆணையம் இந்த முன்மொழிவுக்கு ஒப்புதல் அளித்தால், ஒரு விரைவில் இது நடைபெறும்.

பறவைகள்

[தொகு]

இந்த இடம் பறவையியல் ஆர்வலர்களுக்கு ஒரு நல்ல இடமாக அமைந்துள்ளது.

படங்கள்

[தொகு]

மேலும் பார்க்கவும்

[தொகு]

மேற்கோள்கள்

[தொகு]
  1. "List of Zoos in India, from 1800 until now". kuchbhi.com. Kuchbhi. Archived from the original on 21 October 2011. பார்க்கப்பட்ட நாள் 4 July 2011.
  2. 2.0 2.1 "Sanjay Gandhi Biological Park". forest.bih.nic.in. Environment & Forest Dept., Government of Bihar. Archived from the original on 16 October 2010. பார்க்கப்பட்ட நாள் 11 June 2010.
  3. "Patna Zoo". zoopatna.com. Archived from the original on 27 September 2016. பார்க்கப்பட்ட நாள் 25 September 2016.
  4. "Search Establishment". cza.nic.in. CZA. பார்க்கப்பட்ட நாள் 4 July 2011.
  5. "Walk on Jan 1 not allowed in Patna zoo - The Times of India". The Times of India. http://timesofindia.indiatimes.com/city/patna/Walk-on-Jan-1-not-allowed-in-Patna-zoo/articleshow/28115939.cms. 
  6. "Patna zoo to get 14 new animals - The Times of India". The Times of India. http://timesofindia.indiatimes.com/city/patna/Patna-zoo-to-get-14-new-animals/articleshow/33754508.cms. 
  7. "Lone Patna zoo elephant to be shifted to Valmikinagar Tiger Reserve - The Times of India". The Times of India. http://timesofindia.indiatimes.com/City/Patna/Lone-Patna-zoo-elephant-to-be-shifted-to-Valmikinagar-Tiger-Reserve/articleshow/33584253.cms. 
  8. "Sanjay Gandhi Biological Park-Patna's most frequented picnic spot". தி டைம்ஸ் ஆஃப் இந்தியா இம் மூலத்தில் இருந்து 2013-12-30 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20131230233509/http://articles.timesofindia.indiatimes.com/2012-01-02/patna/30581076_1_patna-zoo-spoilsport-cloudy-weather. 
  9. ANI (28 April 2008). "Patna zoo on global map for rhino breeding". India Times. http://timesofindia.indiatimes.com/Earth/Flora__Fauna/Patna_zoo_on_global_map_for_rhino_breeding/articleshow/2991872.cms. 
  10. Kumar, Ajay (14 September 2007). "Newborn Hippo cheers animal lovers at Patna Zoo". India Travel Times. Archived from the original on 13 July 2011. பார்க்கப்பட்ட நாள் 11 June 2010.
  11. Mishra, Dipak (4 May 2008). "City zoo swarmed with ghariyals". தி டைம்ஸ் ஆஃப் இந்தியா இம் மூலத்தில் இருந்து 25 அக்டோபர் 2012 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20121025150759/http://articles.timesofindia.indiatimes.com/2008-05-04/patna/27743329_1_patna-zoo-ghariyals-zoo-authorities. 

வெளி இணைப்புகள்

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=பட்னா_உயிரியல்_பூங்கா&oldid=3742473" இலிருந்து மீள்விக்கப்பட்டது