பட்டைய கெளப்பு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
பட்டைய கெளப்பு
இயக்கம்பொன்னம்பலம்
தயாரிப்புபொன்னம்பலம்
கதைபொன்னம்பலம்
இசைஇ. எல். இந்திரஜித்
நடிப்பு
ஒளிப்பதிவுஎன். டி. விமல்காந்த்
ஏ. விஜயாதவன்
படத்தொகுப்புபி. எஸ். வாசு
சலீம்
கலையகம்அன்னனை வண்ணம்மாள பிலிம்ஸ்
வெளியீடுசனவரி 15, 2008 (2008-01-15)
ஓட்டம்125 நிமிடங்கள்
நாடுஇந்தியா
மொழிதமிழ்

பட்டைய கெளப்பு (Pattaya Kelappu) என்பது 2008 ஆம் ஆண்டய தமிழ் அதிரடி நகைச்சுவைத் திரைப்படமாகும், இப்படத்தில் பொன்னம்பலம் இயக்குநராக அறிமுகமானார். இப்படத்தில் ஸ்ரீமன், பாயல், பொன்னம்பலம் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்தனர். ஜனகராஜ், தாமு, பாண்டு, வாசு விக்ரம், கசன் கான், கிரேன் மனோகர் ஆகியோர் துணை வேடங்களில் நடித்தனர். இப்படத்திற்கு இ. எல். இந்திரஜித் இசை அமைத்தார். இந்த படத்தின் தயாரிப்புப் பணிகள் 2004 இல் தொடங்கியது என்றாலும் 2008 இல் வெளியிடப்பட்டது. [1] [2]

கதை[தொகு]

அனந்தகிருஷ்ணன் ( ஸ்ரீமன் ) வேலையில்லாத இளம் பட்டதாரி. நகரத்தில் வேலை தேடிவருகிறான். சாமி ( தாமு ), நளன் ( வாசு விக்ரம் ), மனோ ( கிரேன் மனோகர் ) ஆகிய மூன்று நல்ல மனிதர்களை அனந்தகிருஷ்ணன் சந்திக்கிறான் . அவன் மீது அனுதாபம் கொண்ட மூன்று நண்பர்களும் அவனுக்கு உதவ முடிவு செய்கிறார்கள். அனந்தகிருஷ்ணன் பின்னர் அவர்களுடன் சென்று தங்குகிறான். அவர்கள் தங்கியுள்ள வீடு முதியவர் அருணாச்சலம் ( ஜனகராஜ் ) என்பவருக்கு சொந்தமானது, அவர் அவர்களுக்கு இலவசமாக தங்க இடமளித்துள்ளார். இதற்கிடையில், தனம் (பாயல்) நகரத்தில் தனது படிப்பை முடித்துவிட்டு தனது சொந்த ஊருக்கு திரும்புகிறாள். அவள் கிராமத்திற்கு வரும்போது, அவளுடைய மாமா ( கசான் கான் ) தனது தந்தையை ( விஜய் கிருஷ்ணராஜ் ) கொன்றதாகவும், அவளுடைய சொத்தை அடைவதற்காக அவளை திருமணம் செய்து கொள்ள தயாராக இருப்பதாகவும் அவளுடைய வேலைக்காரன் அவளிடம் கூறுகிறான். அதிர்ச்சியடைந்த தனம் பின்னர் மீண்டும் நகரத்திற்குத் திரும்புகிறாள். அவளுடைய தோழி தீபா ( மின்னல் தீபா ) அவளுக்கு தஞ்சமளிக்கிறாள்.

ஒரு நாள், அருணாச்சலத்திடமிருந்து ஆனந்தகிருஷ்ணனன் ஐந்து லட்சம் ரூபாய் கேட்பு வரைவைப் பெறுகிறான். அதைக்கொண்டு அனந்தகிருஷ்ணன் வங்கியில் பணத்தை எடுக்கிறான். அதன்பிறகு, ஆனந்தகிருஷ்ணன் ( பொன்னம்பலம் ) என்ற போக்கிரி, கேட்பு வரைவோலை தனக்கு சொந்தமானது என்று கூறி பணம் கேட்கிறார். ஆனால் அவர்கள் அந்த பணத்தையெல்லாம் செலவு செய்துவிட்டதாக கூறுகிறார்கள். கோபத்தில் ஆனந்தகிருஷ்ணன் எந்த விதமான தடயமும் இல்லாமல் தான் குறிப்பிடும் ஒரு நபரைக் கொல்லவேண்டும். அவ்வாறு செய்யாவிட்டால் அவர்களைக் கொன்றுவிடுவதாக மிரட்டுகிறார். அனந்தகிருஷ்ணனுக்கும் அவரது நண்பர்களுக்கும் என்ன செய்வது என்று தெரியாமல் தவிக்கின்றனர். அதிர்ஷ்டவசமாக, அந்த நபர் சில நாட்களுக்குப் பிறகு இறந்து கிடக்கிறார். அனந்தகிருஷ்ணன் அவர்கள் செய்த வேலைக்கு வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறார். மேலும் அவர்களுக்கு இன்னொரு பணியையும் வழங்குகிறார். அது தனத்தைக் கண்டுபிடித்து, தன்னிடம் அழைத்து வரவேண்டும் என்பதாகும். ஆனந்தகிருஷ்ணன் அவளை அவளது மாமாவிடம் ஒப்படைக்கும் திட்டதுடன் அவர்களுக்கு அப்பணியை ஒப்படைக்கிறார். தனம் வேறு யாருமல்ல அனந்தகிருஷ்ணனின் காதலி.

சாமி, நளன், மனோ ஆகியோர் அப்பாவி தனத்தை எளிதில் கடத்துகிறார்கள். ஆனந்தகிருஷ்ணனின் அடியாட்கள் தங்கள் மூடுந்தில் தனத்தை கொண்டு செல்லும்போது, அனந்தகிருஷ்ணன், ஒரு கைகுட்டையைக் கொண்டு முகத்தை மறைத்து, அவர்களின் மூடுந்தை மறித்து அவர்களை அடித்து உதைக்கிறான். பின்னர் அவளது காதலியைக் காப்பாற்றுகிறான். அனந்தகிருஷ்ணனும் தனமும் அவசரமாக திருமணம் செய்து கொள்ள முடிவு செய்கிறார்கள். ஆனால் ஆனந்தகிருஷ்ணன் அவர்களின் திருமணத்தைத் தடுத்து, தனம் அவளது சொத்தை கொடுக்க வேண்டி வற்புறுத்துகிறார். பின்னர், தனத்தின் மாமாவும் திருமணத்தை நிறுத்த முயற்சிக்கிறார். ஆனால் ஆச்சரியப்படும் விதமாக, ஆனந்தகிருஷ்ணன் திருந்தி, இளம் காதலர்களை சேர்த்து வைக்க முடிவு செய்கிறார். அவர்களது சண்டையின் போது, காவல்துறையினர் நிகழ்விடத்திற்கு வந்து, தனத்தின் மாமாவை சுட்டுக் கொல்கின்றனர். பின்னர் ஆனந்தகிருஷ்ணன் சொத்தை தனத்திடம் ஒப்படைத்து காவலர்களிடம் சரணடைகிறார். அனந்தகிருஷ்ணனும் பாயலும் திருமணம் செய்துகொள்வதுடன் படம் நிறைவடைகிறது.

நடிகர்கள்[தொகு]

தயாரிப்பு[தொகு]

2004 ஆம் ஆண்டில், துணை பாத்திரங்களில் முதன்மையாக நடித்துவந்த பொன்னம்பலம் தனது சொந்த தயாரிப்பு நிறுவனமான அன்னை வண்ணமதி பிலிம்ஸ் சார்பில் பட்டைய கெளப்பனும் படத்தின் தயாரிப்புப் பணியில் ஈடுபடத் தொடங்கினார். இந்தப் படத்தை நகர்ப்புற மற்றும் கிராமப்புற வெகுஜன ரசிகர்களை இலக்காகக் கொண்டு தயாரிக்கபட்டது என்று கூறினார். தெலுங்கு அதிரடி படமான தர்மா (2004) படத்தில் நாயகனாக நடித்த ஸ்ரீமன், இப்படத்தில் நாயகனாக நடிக்க ஒப்பந்தம் செய்தார். கதாநாயகி கதாபாத்திரத்தில் நடிக்க பாயல் தேர்வு செய்யப்பட்டார். இயக்குனர் பொன்னம்பலமும் முக்கிய துணை பாத்திரத்தில் நடித்தார். [3] [4]

இசைப்பதிவு[தொகு]

படத்திற்கான பின்னணி இசை, பாடல்களுக்கான இசையை திரைப்பட இசையமைப்பாளர் இ. எல். இந்திரஜித் மேற்கொண்டார். 2004 இல் வெளியான இந்த படத்தின் பாடல்களில், முத்து விஜயன் எழுதிய ஐந்து பாடல்கள் உள்ளன. [5] [6] [7]

எண் பாடல் பாடகர்(கள்) காலம்
1 "ஆகாய மேகம்" பிரசன்னா ராவ் 4:35
2 "பத்தொன்பது" மால்குடி சுபா 4:43
3 "ரூபா ரூபா" பிரமீளா 4:38
4 "தில்லாலங்கடி" பிரசன்ணா ராவ், பத்மலதா 4:09
5 "வதலகுண்டு" ஹரினி சுதாகர் 4:24

குறிப்புகள்[தொகு]

  1. "Jointscene : Tamil Movie Pattaiyakelappu". jointscene.com. மூல முகவரியிலிருந்து 18 July 2010 அன்று பரணிடப்பட்டது.
  2. "List of Tamil Films Released In 2008". lakshmansruthi.com.
  3. "Pal of Maduraiites". The Hindu (12 July 2004).
  4. "Mass movie". The Hindu (23 August 2004).
  5. "Pattaye Kilappu Songs". raaga.com.
  6. "Pattaye Kilappu - All Songs". saavn.com.
  7. "Pattaiyakelappu (2005) - Indrajith". mio.to.
"https://ta.wikipedia.org/w/index.php?title=பட்டைய_கெளப்பு&oldid=3093759" இருந்து மீள்விக்கப்பட்டது