பட்டுக்கோட்டை ராஜப்பா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்


பட்டுக்கோட்டை ராஜப்பா (பிறப்பு: சூலை 30, 1961)தற்காலத்தில் வாழும் தமிழ் இலக்கியவாதியும், சொற்பொழிவாளரும், மேலாண்மைப் பயிற்றுநரும், கவிஞரும் ஆவார்[1]. மெட்ராஸ் சிமெண்ட்ஸ் நிறுவனத்தில் (ராம்கோ சிமெண்ட்) இளநிலை விற்பனை மேலாளராகத் தற்பொழுது பணியாற்றி வரும் இவர், தமிழகத்திலும், இந்தியாவின் பிற மாநிலங்களிலும், வெளிநாடுகளிலுமுள்ள இலக்கிய அமைப்புக்களின் விழாக்களிலும், நிகழ்வுகளிலும் பங்கேற்றுப் பட்டிமன்ற நடுவராகவும், கவியரங்கத் தலைமையேற்றும் செயல்பட்டு வருகிறார். தமிழகத்தின் பிற முன்னணிப் பேச்சாளர்களுடன் இணைந்து சொற்பொழிவும், இலக்கிய விவாத மேடைகளில் விமர்சனங்களும் வழங்கி வருகிறார்.

தமிழ்நாடு திருச்சியில் வசித்து வரும் இவர் இளங்கலைப் பொருளாதாரத்தில் பட்டமும், சந்தை மேலாண்மையில் பட்டயமும் பெற்றவர். ஜெயா டிவி, கலைஞர் டிவி, சன் டிவி, பொதிகை போன்ற தமிழ்த் தொலைக்காட்சி ஊடகங்களில் இவரது நேர்காணல்களும், இலக்கிய நிகழ்ச்சிகளும் இடம்பெற்று வருகின்றன.

இயற்றி வெளிவரவுள்ள நூல்கள்[தொகு]

  • களத்தில் எய்த கணைகள்
  • தம்பியர் எழுவர்
  • தமிழ் இலக்கியங்களில் மேலாண்மைச் சிந்தனைகள்

பெற்ற பட்டங்கள்[தொகு]

  • சொல்லருவி
  • தேன்தமிழ்ச் சுரங்கம்
  • தீர்ப்புத் திலகம்

சென்று வந்த வெளிநாடுகள் குவைத்,ஸ்ரீலங்கா


மேற்கோள்கள்[தொகு]

http://www.indiansinkuwait.com/ShowArticle.aspx?ID=22336&SECTION=1