பட்டியாலா இல்லம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

பட்டியாலா இல்லம் (Patiala House ) என்பது புது தில்லியில் உள்ள பட்டியாலா மாகாராசாவின் முன்னாள் இருப்பிடமாகும். இது இந்தியாவின் மத்திய தில்லியில் இருக்கும் இந்தியா கேட்டுக்கு அருகில் அமைந்துள்ளது. பட்டியாலா இல்லம் சர் எட்வின் லூட்டியன்சால் வடிவமைக்கப்பட்டது[1]. இக் கட்டிடம் கூம்பு வடிவத்தின் மத்தியில் ஒரு வண்ணத்துப் பூச்சியின் வடிவத்துடன் மற்ற லூட்டியன்சு கட்டிடங்களைப் போல அமைந்துள்ளது[2][3]

வரலாறு[தொகு]

தில்லியில் உள்ள மற்ற இளவரசர்களின் வீடுகளைப் போல இல்லாமல் பட்டியாலா இல்லமானது மணற் கற்களின் தோற்றத்தில் அல்லாது வெள்ளை வண்ணத்தால் பூசப்பட்டிருந்தது.

1970 களில் இந்திரா காந்தி பிரதமமந்திரியாக இருந்தபோது அரசர்களின் இத்தகைய தனித்த வீடுகளை முடிவுக்குக் கொண்டுவந்தார். அரச குடும்பத்தினர் அவ்விடத்தை இந்திய அரசுக்கு விற்பனை செய்தனர்.

தில்லியில் இருந்த ஐந்து நீதிமன்றங்களில் ஒன்றாக இந்தியாவின் மாவட்ட நீதி மன்றத்தால் அவை பயன்படுத்தப்பட்டன. பட்டியாலா இல்ல நீதிமன்ற வளாகம் என்று இவ்விடம் அழைக்கப்பட்டது. இந்த அரண்மனையின் அசல் தோற்றம் பல நீட்சிகள் மற்றும் மாற்றங்களைக் கண்டது.

மேற்கோள்கள்[தொகு]

  1. Cultural History Of India By Om Prakash
  2. Delhi, a thousand years of building Lucy Peck, Indian National Trust for Art and Cultural Heritage
  3. Sharma, Manoj (2011-06-08). "Of princes, palaces and plush points". ஹிந்துஸ்தான் டைம்ஸ் இம் மூலத்தில் இருந்து 10 October 2013 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20131010152053/http://www.hindustantimes.com/India-news/NewDelhi/Of-princes-palaces-and-plush-points/Article1-707274.aspx. பார்த்த நாள்: 13 December 2013. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=பட்டியாலா_இல்லம்&oldid=3315814" இலிருந்து மீள்விக்கப்பட்டது