பட்டியல் (திரைப்படம்)
| பட்டியல் | |
|---|---|
| இயக்கம் | விஷ்னுவர்த்தன் |
| தயாரிப்பு | புன்னகைப் பூ கீதா |
| இசை | யுவன் சங்கர் ராஜா |
| நடிப்பு | ஆர்யா பரத் பூஜா பத்மப்பிரியா கொச்சி ஹனீஃபா |
| ஒளிப்பதிவு | நீரவ் ஷா |
| வெளியீடு | 2006 |
| நாடு | இந்தியா |
| மொழி | தமிழ் |
| மொத்த வருவாய் | ₹7.4 கோடி |
பட்டியல் என்பது தமிழில் வெளிவந்த அதிரடித்திரைப்படம் ஆகும். இப்படத்தை விஷ்ணுவர்தன் எழுதி இயக்கினார். புன்னகைப் பூ கீதா தயாரித்தார். இதில் பரத், ஆர்யா, பூஜா உமாசங்கர், பத்மப்ரியா ஜானகிராமன் ஆகியோர் முதன்மை வேடங்களில் நடித்துள்ளனர். கொச்சின் ஹனீபா, சந்தான பாரதி ஆகியோர் துணை வேடங்களில் நடித்துள்ளனர். இந்த படம் தாதாக்களின் பிரச்சினையைப் பற்றியதாக உள்ளது. இது 1999 ஆம் ஆண்டு தாய் திரைப்படமான பாங்காக் டேஞ்சரஸ் என்ற படத்தை அடிப்படையாகக் கொண்டது.[1]
கதை
[தொகு]கதைச்சுருக்க எச்சரிக்கை: கதைச்சுருக்கம் மற்றும்/அல்லது கதை முடிவு விவரங்கள், கீழே தரப்பட்டுள்ளன.
சிறுவயதிலேயே அனாதைகளாகி விடும் கோஷி (ஆர்யா) மற்றும் செல்வா (பரத்) இருவரும் தங்களின் வாழ்க்கைக்குத் தேவையான பணத்திற்காக சிறுவயதிலிருந்து கொலை கொள்ளைகளில் ஈடுபடுகின்றனர். வாய் பேச இயலாத செல்வா தனது ஊரில் கடை நடத்திவரும் ஒரு பெண்ணை காதலிக்கின்றான். இதனைத்தெரிந்து கொண்டு அப்பெண்ணும் இவனைக் காதலித்தாள். பின்னர் ஒரு மாபெரும் கொலையப் பற்றிய திட்டத்தினை கோஷிக்கும் செல்வாவுக்கும் விளக்குகின்றார் அவர்களுக்குப் பணம் கொடுத்து வந்த முதலாளி. அவனின் பேச்சைக்கேட்டே செல்லும் அவர்களில் கோஷிமட்டும் சில காரணத்தால் அங்கு செல்லவில்லை. செல்வாவை அக்கொலையைச் செய்ய அனுப்பினான். பின்பு அக்கொலையினை முடித்தபின் கொலை செய்தவர்களையும் தீர்த்துக்கட்ட முடிவு செய்யப்பட்டதை செல்வாவும் கோஷியும் அறியவில்லை. பின்னர் ஏற்படும் பல பிரச்சனைகள் காரணமாக கோஷி கொல்லப்பட்டான். கொலையைச் செய்து முடித்து ஊர் திரும்பிய செல்வா பின்னர் அவனது முதலாளியின் கூட்டாளியினால் கொலை செய்யப்படுகின்றான்.
நடிகர்கள்
[தொகு]- பரத் - செல்வா
- ஆர்யா - கோசி
- பூஜா - சந்தியா செல்வா விரும்பும் பெண்
- பத்மபிரியா ஜானகிராமன் - சரோஜா கோசி விரும்பும் பெண்
- கொச்சி ஹனீஃபா - சாமி
- சந்தான பாரதி - அவிநாஷ் நாச்சிமுத்து கவுண்டர்
- கௌதம் சுந்தர்ராஜன் - அழகு
- பைவ் ஸ்டார் கிருஷ்ணா - கிருஷ்ணா
- வத்சலா ராஜகோபால் - சந்தியாவின் பாட்டி
- ஆர்த்தி - ஆர்த்தி
விமர்சனம்
[தொகு]ஆனந்த விகடன் வார இதழில் எழுதிய விமர்சனத்தில் "படம் முழுக்க பரத், ஆர்யா, பத்மப்பிரியா, பூஜா என யாருக்கும் மேக்-அப் இல்லாமல், கதையோடு ஒட்டி இயல்பாகக் காட்டி இருப்பதற்காகவும், சொல்ல நினைத்ததை நேர்த்தியான வசனங்கள், காட்சிகளில் சொல்லியிருப்பதற்காகவும் இயக்குநருக்குத் தனி ஷொட்டு" என்றும் "கத்தியின்றி ரத்தமின்றி, வன்முறையைச் சிரிப்பிலும், பார்வையிலுமே காட்டிவிடுகிறார் 'சாமி'யாக வரும் ஹனீபா" என்று எழுதி 41100 மதிப்பெண்களை வழங்கினர்.[2]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "சுட்ட படம்". ஆனந்த விகடன். 7 March 2016. Archived from the original on 19 July 2024. Retrieved 18 July 2024.
- ↑ "சினிமா விமர்சனம்: பட்டியல்". விகடன். 2006-04-09. Retrieved 2025-05-22.
வெளி இணைப்புகள்
[தொகு]- எம்.எஸ்.என் டாட் காமில் பட விமர்சனம் பரணிடப்பட்டது 2007-09-29 at the வந்தவழி இயந்திரம் (தமிழில்)