பட்டியலாக்கம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

பட்டியலாக்கம் (cataloguing) என்பது நூல்கள், இதழ்கள் உட்பட்ட பல்வேறு நூலக வளங்களைப் பற்றிய தகவல்களை அட்டவணை வடிவில் ஒழுங்குபடுதி விபரநிரலை உருவாக்குதல் . தற்காலத்தில் இது மேனிலைத் தரவுகளின் ஓர் அங்கமாக கொள்ளப்படுகிறது.

சீர்தரங்கள்[தொகு]

நூலகப் பயனர்கள் தமக்கு தேவையான வளங்களை இலகுவாக கண்டடைவதை நோக்கக் கொண்டும், இத்தகையை வளங்களையும் அவை பற்றிய தகவல்களைப் பராமரிப்பதை இலகுவாக்குவதை நோக்கக் கொண்டும் பல்வேறு அட்டவணைப்படுத்தல் சீர்தரங்கள் நடைமுறையில் உள்ளன.

தற்போது பல்வேறு சீர்தரங்கள் அனைத்துலக உசாத்துணைகள் விபரிப்பு சீர்தரத்தை (International Standard Bibliographic Description) ஒத்தவை அல்லது பின்பற்றுபவை. இவை ஒரு ஆக்கத்தைப் பற்றிய பின்வரும் தகவல்களை தொகுத்துத் தருகின்றன.

  • தலைப்பு, பொறுப்பு
  • பொருள் வகை
  • பதிப்பு, விநியோகம்
  • பெளதீக விபரிப்பு
  • தொடர்
  • குறிப்புகள்
  • சீர்தர இலக்கம் (ISBN)

ஆங்கில உலகில் மிகவும் அதிகம் பயன்படுத்தப்படும் சீர்தரம் Anglo-American Cataloguing Rules, 2nd Edition, or AACR2 ஆகும்.

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=பட்டியலாக்கம்&oldid=2563711" இலிருந்து மீள்விக்கப்பட்டது