பட்டாம்பி - 60
| பட்டாம்பி - 60 (PTB 60) |
|---|
| வேளாண் பெயர் |
| வைசாக் (Vaishakh) |
| பேரினம் |
| ஒரய்சா |
| இனம் |
| ஒரய்சா சாட்டிவா |
| கலப்பினம் |
| பட்டாம்பி - 43 |
| வகை |
| மீள் தேர்வு முறை |
| காலம் |
| 117 - 125 நாட்கள் |
| வெளியீடு |
| 2010 |
| வெளியீட்டு நிறுவனம் |
| மண்டல வேளாண் ஆராய்ச்சி நிலையம், பட்டாம்பி |
| மாநிலம் |
| கேரளம் |
| நாடு |
பட்டாம்பி - 60 (PTB 60), வேளாண் பெயர்; வைசாக் (Vaishakh), முன்மொழிவு எண்; (IET 22128) எனப்படும் இந்த நெல் வகை, பட்டாம்பி - 43 நெல் இரகத்திலிருந்து மீள் தேர்வு முறையில் உருவாக்கப்பட்ட தென்னிந்தியாவில் உள்ள கேரளாவின் நெல் வகையாகும்.[1] கேரள மாநிலத்தின் பாலக்காடு மாவட்டத்தில் உள்ள பட்டாம்பி மண்டல வேளாண் ஆராய்ச்சி நிலையம், 2010 ஆம் ஆண்டு வெளியிடப்பட்ட இந்நெல் வகையை, வைசாக் என்ற பெயரிலும் அழைக்கப்படுகிறது. [2]
பின்னணி
[தொகு]நடுத்தர கால அளவில் அறுவடை செய்ய, 117 - 125 நாட்களில் முதிர்வடைவதாக கருதப்படுகிறது. இந்நெல் இரகத்தின் அரிசி, குறுகிய மற்றும் தடித்த, சிவப்பு நிறமாகும். சம்பா சாகுபடி பருவத்தில் மேட்டு நிலங்களில் நேரடி விதைப்புக்கு ஏற்ற நெல் இரகமான இது, ஈரப்பத அழுத்தத்தை தாங்கும் தன்மை கொண்டது. மேலும் நீல வண்டு, தண்டு துளைப்பான் மற்றும் சுழல் புழுக்களுக்கு மிதமான எதிர்ப்புத் திறன் கொண்டதாகவும் கூறப்படுகிறது.[2]
சான்றுகள்
[தொகு]- ↑ TABLE 4. List of drought-tolerant varieties developed through conventional breeding approaches. - Conventional and contemporary approaches for drought tolerance rice breeding: Progress and prospects - 49, Ptb-60-Vaishakh
- ↑ 2.0 2.1 "PATTAMBI Regional Agricultural Research Station - Kerala Agricultural University Kerala - Recently released varieties - 26 Vaishakh (Ptb 60) 2010 22128" (PDF). www.icar-iirr.org (ஆங்கிலம்) - 2025. Retrieved 2025-09-11.