பட்டாம்பி - 59
| பட்டாம்பி - 59 (PTB 59) |
|---|
| வேளாண் பெயர் |
| சம்யுக்தா (Samyuktha) |
| பேரினம் |
| ஒரய்சா |
| இனம் |
| ஒரய்சா சாட்டிவா |
| கலப்பினம் |
| M 210 X பட்டாம்பி - 28 |
| வகை |
| கலப்பினமாக்கல் மற்றும் தூயவழித் தேர்வு |
| காலம் |
| 112 - 117 நாட்கள் |
| மகசூல் |
| எக்டேருக்கு 3,600 கிலோ |
| வெளியீடு |
| 2010 |
| வெளியீட்டு நிறுவனம் |
| மண்டல வேளாண் ஆராய்ச்சி நிலையம், பட்டாம்பி |
| மாநிலம் |
| கேரளம் |
| நாடு |
பட்டாம்பி - 59 (PTB 59), வேளாண் பெயர்; சம்யுக்தா (Samyuktha), முன்மொழிவு எண்; (IET 22127) எனப்படும் இந்த நெல் வகை, M 210 மற்றும் பட்டாம்பி - 28 ஆகிய நெல் இரகங்களிருந்து, கலப்பினமாக்கல் மற்றும் தூயவழித் தேர்வு மூலம் உருவாக்கப்பட்ட கலாச்சாரம் C3-2 இலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரு தூய வரிசையாகும். தென்னிந்தியாவில் உள்ள கேரளாவின் நெல் வகையான இது, கேரள மாநிலத்தின் பாலக்காடு மாவட்டத்தில் உள்ள பட்டாம்பி மண்டல வேளாண் ஆராய்ச்சி நிலையம், 2010 ஆம் ஆண்டு வெளியிடப்பட்ட இந்நெல் வகையை, சம்யுக்தா என்ற பெயரிலும் அழைக்கப்படுகிறது.[1]
பின்னணி
[தொகு]குறுகிய கால அளவில் அறுவடை செய்ய, 112 - 117 நாட்களில் முதிர்வடைவதாக கருதப்படுகிறது. இந்நெல் இரகத்தின் அரிசி, குறுகிய மற்றும் தடித்த, சிவப்பு நிறமாகும்.[2] சம்பா சாகுபடி பருவத்தில் மேட்டு நிலங்களில் நேரடி விதைப்புக்கு ஏற்ற நெல் இரகமான இது, ஈரப்பத அழுத்தத்தை தாங்கும் தன்மை கொண்டது. மேலும் நீல வண்டு, தண்டு துளைப்பான் மற்றும் சுழல் புழுக்களுக்கு மிதமான எதிர்ப்புத் திறன் கொண்டதாகவும் கூறப்படுகிறது. சராசரியாக 123 செ. மீ உயரம் வரை வளரக்கூடிய இந்நெல் இரகம், கூட்டுமுண்டகன் (கூட்டு-முண்டகன் என்பது கேரளாவின் சில பகுதிகளில் செய்யப்படும் ஒரு தனித்துவமான நெல் சாகுபடி முறை ஆகும், இதில் "கூட்டு" என்பது முதல் பயிர் பருவத்தையும், "முண்டகன்" என்பது இரண்டாம் பயிர் பருவத்தையும் குறிக்கிறது.) முறையில் ஒரு எக்டேருக்கு 3,600 கிலோ வரை கூல மகசூல் தருவதாக கூறப்படுகிறது.[3]
சான்றுகள்
[தொகு]- ↑ "PATTAMBI Regional Agricultural Research Station - Kerala Agricultural University Kerala - Recently released varieties - 25 Samyuktha (Ptb 59) 2010" (PDF). www.icar-iirr.org (ஆங்கிலம்) - 2025. Retrieved 2025-09-13.
- ↑ Kerala Agricultural University (KAU) Short Duration - Samyuktha (PTB-59)
- ↑ "PTB 59 -'Samyuktha' a high yielding rice variety for kootumundakan system of cultivation in Kerala". jtropag.kau.in (ஆங்கிலம்) - 23-12-2013. Retrieved 2025-09-13.