உள்ளடக்கத்துக்குச் செல்

பட்டாம்பி - 58

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
பட்டாம்பி - 58
(PTB 58)
வேளாண் பெயர்
அனட்வரா
(Anashwara)
பேரினம்
ஒரய்சா
இனம்
ஒரய்சா சாட்டிவா
கலப்பினம்
பட்டாம்பி - 20
வகை
KR காம்மா கதிர் நெல் தேர்வு
காலம்
125 - 130 நாட்கள்
வெளியீடு
2006
வெளியீட்டு நிறுவனம்
மண்டல வேளாண் ஆராய்ச்சி நிலையம், பட்டாம்பி
மாநிலம்
கேரளம்
நாடு
 இந்தியா

பட்டாம்பி - 58 (PTB 58), வேளாண் பெயர்; அனட்வரா (Anashwara), முன்மொழிவு எண்; (IET 17608)[1] எனப்படும் இந்த நெல் வகை, பட்டாம்பி - 20 நெல் இரக்கத்திலிருந்து KR காம்மா கதிரியக்கப்படுத்தப்பட்ட விதை உருவாக்க முறையில் உருவாக்கப்பட்டதாகும்.[2] தென்னிந்தியாவில் உள்ள கேரளாவின் நெல் வகையான இது, கேரள மாநிலத்தின் பாலக்காடு மாவட்டத்தில் உள்ள பட்டாம்பி மண்டல வேளாண் ஆராய்ச்சி நிலையம், 2006 ஆம் ஆண்டு வெளியிடப்பட்ட இந்நெல் வகையை, அனட்வரா என்ற பெயரிலும் அழைக்கப்படுகிறது.[1]

பின்னணி

[தொகு]

நடுத்தர கால அளவில் அறுவடை செய்ய, 125 - 130 நாட்களில் முதிர்வடைவதாக கருதப்படுகிறது. இந்நெல் இரகத்தின் அரிசி, நடுத்தர மற்றும் தடித்த, சிவப்பு நிறமாகும்.[3] குலைநோய், உறை கருகல், இலை மடிப்பு, தண்டு துளைப்பான் மற்றும் பித்த ஈ ஆகியவற்றை மிதமாக எதிர்க்கும் தன்மை கொண்ட இந்நெல் இரகம், சிறந்த சமையல் தரம் கொண்டதாக கருதப்படுகிறது.[1]

சான்றுகள்

[தொகு]
  1. 1.0 1.1 1.2 "PATTAMBI Regional Agricultural Research Station - Kerala Agricultural University Kerala - Recently released varieties - 24 Anashwara(Ptb 58) 2006" (PDF). www.icar-iirr.org (ஆங்கிலம்) - 2025. Retrieved 2025-09-14.
  2. "Indian Rice Varietal Information - Name of Variety, Parentage - PTB-58 (IET- 17608)". rice-garud.icar-web.com (ஆங்கிலம்) - 2025. Retrieved 2025-09-14.
  3. Kerala Agricultural University (KAU) Short Duration - Anashwara (PTB-58)
"https://ta.wikipedia.org/w/index.php?title=பட்டாம்பி_-_58&oldid=4342706" இலிருந்து மீள்விக்கப்பட்டது