பட்டாம்பி - 57
| பட்டாம்பி - 57 (PTB 57) |
|---|
| வேளாண் பெயர் |
| சுவேதா (Swetha) |
| பேரினம் |
| ஒரய்சா |
| இனம் |
| ஒரய்சா சாட்டிவா |
| கலப்பினம் |
| IR 50 X C 14 - 8 |
| வகை |
| கலப்பினமாக்கல் மற்றும் தூயவழித் தேர்வு |
| காலம் |
| 140 - 145 நாட்கள் |
| மகசூல் |
| எக்டேருக்கு 5,000 கிலோ |
| வெளியீடு |
| 2002 |
| வெளியீட்டு நிறுவனம் |
| மண்டல வேளாண் ஆராய்ச்சி நிலையம், பட்டாம்பி |
| மாநிலம் |
| கேரளம் |
| நாடு |
பட்டாம்பி - 57 (PTB 57), வேளாண் பெயர்; சுவேதா (Swetha), முன்மொழிவு எண்; (IET 14735)[1] எனப்படும் இந்த நெல் வகை, IR 50 மற்றும் C 14 - 8 ஆகிய நெல் இரகங்களிருந்து, கலப்பினமாக்கல் மற்றும் தூயவழித் தேர்வு மூலம் உருவாக்கப்பட்டதாகும்.[2] தென்னிந்தியாவில் உள்ள கேரளாவின் நெல் வகையான இது, கேரள மாநிலத்தின் பாலக்காடு மாவட்டத்தில் உள்ள பட்டாம்பி மண்டல வேளாண் ஆராய்ச்சி நிலையம், 2002 ஆம் ஆண்டு வெளியிடப்பட்ட இந்நெல் வகையை, சுவேதா என்ற பெயரிலும் அழைக்கப்படுகிறது.[1]
பின்னணி
[தொகு]நடுத்தர கால அளவில் அறுவடை செய்ய, 140 - 145 நாட்களில் முதிர்வடைவதாக கருதப்படுகிறது. இந்நெல் இரகத்தின் அரிசி, , குட்டையான மற்றும் தடித்த, வெள்ளை நிறமாகும்.[3] பாலக்காடு மாவட்டத்தில் உள்ள சித்தூர் வட்டத்தில் இரண்டாம் பயிராக நடப்படும் இந்நெல் இரகம், அப்பகுதியின் கருப்பு பருத்தி மண்ணுக்கு ஏற்றது என கூறப்படுகிறது.[4] பித்தப்பை பூச்சி மற்றும் தண்டு துளைப்பான்களுக்கு எதிர்ப்புத் திறன் கொண்டதும், இலையுறை கருகல் மற்றும் குலைநோய்க்கு மிதமான எதிர்ப்புத் திறனும் கொண்டது. நீர்ப்பாசன வசதியுள்ள தாழ்வான நிலங்களுக்கு ஏற்றதாக கருதப்படும் இது, முண்டகன் பருவத்தில் கரிம உரமிடும் முறையில், ஒரு எக்டேருக்கு 5,000 கிலோ வரை கூல மகசூல் தருவதாக கூறப்படுகிறது.[2]
சான்றுகள்
[தொகு]- ↑ 1.0 1.1 "PATTAMBI Regional Agricultural Research Station - Kerala Agricultural University Kerala - Recently released varieties - 23 Swetha(Ptb 57) 2002" (PDF). www.icar-iirr.org (ஆங்கிலம்) - 2025. Retrieved 2025-09-15.
- ↑ 2.0 2.1 "Rice (Oryza sativa) - Crop Varieties from Kerala Agricultural University - Page 10" (PDF). 14.139.185.57:8080 (ஆங்கிலம்) - KAUP 48/10/500/7/2013. Retrieved 2025-09-15.
- ↑ Kerala Agricultural University (KAU) Medium Duration - Swetha (PTB-57)
- ↑ Rice Variety information Chittor black soil - Second crop - Swetha (PTB-57):