பட்டாம்பி - 56
தோற்றம்
| பட்டாம்பி - 56 (PTB 56) |
|---|
| வேளாண் பெயர் |
| வர்சா (Varsha) |
| பேரினம் |
| ஒரய்சா |
| இனம் |
| ஒரய்சா சாட்டிவா |
| காலம் |
| 110 - 115 நாட்கள் |
| வெளியீடு |
| 2002 |
| வெளியீட்டு நிறுவனம் |
| மண்டல வேளாண் ஆராய்ச்சி நிலையம், பட்டாம்பி |
| மாநிலம் |
| கேரளம் |
| நாடு |
பட்டாம்பி - 56 (PTB 56), வேளாண் பெயர்; வர்சா (Varsha), முன்மொழிவு எண்; (IET 16709)[1] எனப்படும் இந்த நெல் வகை, தென்னிந்தியாவின் கேரள மாநில பாலக்காடு மாவட்டம், பட்டாம்பியில் அமைந்துள்ள "மண்டல வேளாண் ஆராய்ச்சி நிலையம்", 2002 ஆம் ஆண்டு வெளியிட்டது.[1] பொதுவாக வர்சா எனும் வேளாண் பெயரில் அழைக்கப்படும் இது, 110 - 115 நாட்களில் முதிர்வடையக் கூடிய குறுகிய கால நெற்பயிராகும். நீர்ப்பாசனம் உள்ள தாழ்வான பகுதிகளில் நேரடி விதைப்பு மற்றும் நடவு என இருவேறு முறையில் சாகுபடி செய்யக்கூடிய இதன் நெற்பயிர், நீல வண்டின் தாக்குதலுக்கு மிதமான எதிர்ப்புத் திறன் கொண்டது. மேலும் இந்த இரகத்தின் அரிசி, சிவப்பு நிறத்தில் நீண்டு மற்றும் தடித்து காணப்படுகிறது.[2]
சான்றுகள்
[தொகு]- ↑ 1.0 1.1 "PATTAMBI Regional Agricultural Research Station - Kerala Agricultural University Kerala - Recently released varieties - 22 Varsha(Ptb 56)" (PDF). www.icar-iirr.org (ஆங்கிலம்) - 2025. Retrieved 2025-09-16.
- ↑ "Paddy varieties of Kerala - Short duration varieties - Varsha (PTB 56)". www.icar-iirr.org (ஆங்கிலம்) - TNAU 2025. Retrieved 2025-09-16.