பட்டாம்பி - 50
| பட்டாம்பி - 50 (PTB 50) |
|---|
| வேளாண் பெயர் |
| காஞ்சனா |
| பேரினம் |
| ஒரைசா |
| இனம் |
| ஒரைசா சட்டைவா |
| கலப்பினம் |
| IR 36 X பவிழம் |
| வகை |
| புதிய நெல் வகை |
| காலம் |
| 105 - 110 நாட்கள் |
| வெளியீடு |
| 1993 |
| வெளியீட்டு நிறுவனம் |
| மண்டல வேளாண் ஆராய்ச்சி நிலையம், பட்டாம்பி |
| மாநிலம் |
| கேரளம் |
| நாடு |
பட்டாம்பி - 50 (PTB 50), வேளாண் பெயர்; காஞ்சனா (Kanchana), முன்மொழிவு எண்; (IET 13636)[1] எனப்படும் இந்த நெல் வகை, IR 36 மற்றும் பவிழம் ஆகிய நெல் இரகங்களை ஒத்திசைவு அமைப்பு (HS) முறையில் இணைத்து உருவாக்கப்பட்டதாகும். இது, ஒரு கலப்பின புதிய நெல் இரகமாகும்.[2] தென்னிந்தியாவின் கேரள மாநில பாலக்காடு மாவட்டம், பட்டாம்பியில் அமைந்துள்ள "மண்டல வேளாண் ஆராய்ச்சி நிலையம்", 1993 ஆம் ஆண்டு வெளியிட்ட இந்த நெல் இரகமானது பொதுவாக காஞ்சனா எனும் வேளாண் பெயரில் அழைக்கப்படுகிறது.[1]
பின்னணி
[தொகு]குறுகிய கால அளவில் அறுவடைக்குத் தயாராகும் இந்த நெல் வகை, 105 - 110 நாட்களில் முதிர்வடைவதாக கருதப்படுகிறது. இந்நெல் இரகத்தின் அரிசி, நீளமானதாகவும் தடித்தும் சிவப்பு நிறத்துடனும் காணப்படுகிறது. சதுப்புநிலம் மற்றும் குட்டநாடு பகுதிகளுக்கு ஏற்றது. குலைநோய், தண்டு துளைப்பான் மற்றும் பித்தப்பை பூச்சிகளுக்கு எதிர்ப்புத் திறன் கொண்ட இது, அனைத்து பருவங்களுக்கும் ஏற்றது என கூறப்படுகிறது.[3]
சான்றுகள்
[தொகு]- ↑ 1.0 1.1 "PATTAMBI Regional Agricultural Research Station - Kerala Agricultural University Kerala - Recently released varieties - 16 Kanchana(Ptb 50)" (PDF). www.icar-iirr.org (ஆங்கிலம்) - 2025. Retrieved 2025-09-23.
- ↑ "Varieties Released - Ptb 50-Kanchana". kau.in (ஆங்கிலம்) - (List upto 2019). Retrieved 2025-09-23.
- ↑ "Paddy varieties of Kerala - Short duration varieties Season: Kanchana (PTB 50)". agritech.tnau.ac.in (ஆங்கிலம்) - 2025. Retrieved 2025-09-23.