பட்டாம்பி - 41
| பட்டாம்பி - 41 (PTB 41) |
|---|
| வேளாண் பெயர் |
| பாரதி |
| பேரினம் |
| ஒரைசா |
| இனம் |
| ஒரைசா சட்டைவா |
| கலப்பினம் |
| பட்டாம்பி - 10 X பன்னாட்டு நெல் - 8 |
| வகை |
| புதிய நெல் வகை |
| காலம் |
| 120 - 125 நாட்கள் |
| வெளியீடு |
| 1974 |
| வெளியீட்டு நிறுவனம் |
| RARS, பட்டாம்பி |
| மாநிலம் |
| கேரளம் |
| நாடு |
பட்டாம்பி - 41 (PTB 41), வேளாண் பெயர்; பாரதி (Bharthi), முன்மொழிவு எண்; (IET 16707)[1] எனப்படும் இந்த நெல் வகை, பட்டாம்பி - 10 மற்றும் பன்னாட்டு நெல் - 8 ஆகிய நெல் இரகங்களை ஒத்திசைவு அமைப்பு (HS) முறையில் உருவாக்கப்பட்ட இது, ஒரு புதிய நெல் இரகமாகும்.[2] தென்னிந்தியாவின் கேரள மாநில பாலக்காடு மாவட்டம், பட்டாம்பியில் அமைந்துள்ள "மண்டல வேளாண் ஆராய்ச்சி நிலையம்", 1974 ஆம் ஆண்டு வெளியிட்ட இந்த நெல் இரத்தை பொதுவாக பாரதி எனும் வேளாண் பெயரில் அழைக்கப்படுகிறது.[1]
பின்னணி
[தொகு]நடுத்தர கால அளவில் அறுவடைக்கு தயாராகும் இந்த நெல் வகை, 120 - 125 நாட்களில் முதிர்வடைவதாக கருதப்படுகிறது. இந்நெல் இரகத்தின் அரிசி, நீண்ட மற்றும் தடித்த, சிவப்பு நிறமாகும். பழுப்பு நிறத் தத்துப்பூச்சியைத் தாங்கும் தன்மை கொண்ட இது, குலைநோய்க்கு மிதமாக எதிர்க்கும் தன்மை கொண்டது, மேலும் உலர் விதைப்புக்கு ஏற்றதாகவும் கூறப்படுகிறது..[3]
சான்றுகள்
[தொகு]- ↑ 1.0 1.1 "PATTAMBI Regional Agricultural Research Station - Kerala Agricultural University Kerala - Recently released varieties - 7 Bharathi(Ptb 41)" (PDF). www.icar-iirr.org (ஆங்கிலம்) - 2025. Retrieved 2025-09-28.
- ↑ "Varieties Released - 3 Ptb 41-Bharathy". kau.in (ஆங்கிலம்) - (List upto 2019). Retrieved 2025-09-28.
- ↑ "Paddy varieties of Kerala - Medium duration varieties Season: Bharathy (PTB 41)". agritech.tnau.ac.in (ஆங்கிலம்) - 2025. Retrieved 2025-09-28.