உள்ளடக்கத்துக்குச் செல்

பட்டாம்பி - 39

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
பட்டாம்பி - 39
ஜோதி
பேரினம்
ஒரய்சா
இனம்
ஒரய்சா சாட்டிவா
கலப்பினம்
பட்டாம்பி - 10 x ஐ ஆர் 8
வகை
புதிய நெல் வகை
காலம்
115 - 120 நாட்கள்
மகசூல்
2800 கிலோ
வெளியீடு
1974
வெளியீட்டு நிறுவனம்
மண்டல வேளாண் ஆராய்ச்சி நிலையம், பட்டாம்பி
மாநிலம்
கேரளம்
நாடு
 இந்தியா
ஜோதி அரிசி

பட்டாம்பி - 39 (PTB 39), வேளாண் பெயர்; ஜோதி (Jyothi), மலையாளம்: ജ്യോതി; முன்மொழிவு எண்: (IET 2700) எனப்படும் இந்த நெல்வகை இந்தியாவின் கேரளம் மாநிலத்தின் நெல் வகையாகும்.[1] 1974 ஆம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்ட,[2] குறுகியகால நெல் வகையாகும். 115 - 120 நாட்களில் அறுவடைக்கு வரக்கூடிய இந்த நெல் இரகம், பட்டாம்பி - 10 எனும் நெல் இரகத்தையும், ஐ ஆர் - 8 எனும் நெல் இரகத்தையும் இணைத்து உருவாக்கப்பட்ட நெல் வகையாகும். ஈர நிலப் பகுதிகளில் நன்கு வளரத் தக்க இந்த நெற்பயிர், குள்ளமாகவும், இதன் தானியங்கள், நீண்டு தடித்தும், செந்நிறத்திலும் காணப்படுகிறது. ஒரு எக்டேருக்கு சுமார் 2800 கிலோ வரை மகசூல் தரவல்ல இது, கேரள மாநிலத்தில் பெரும்பான்மையாக பயிரிடப்படுகின்றது.[3]

இவற்றையும் காண்க

[தொகு]
  • ஜோதி (இருவேறு தமிழ் திரைப்படங்கள்.)

சான்றுகள்

[தொகு]
  1. Paddy varieties of Kerala
  2. Released varieties from RARS Pattambi with AICRIP tested data - Sl. No. 5
  3. "Details of Rice Varieties: Page 1 - 39.Jyothi". drdpat.bih.nic.in (ஆங்கிலம்). 2017. Retrieved 2017-04-08.
"https://ta.wikipedia.org/w/index.php?title=பட்டாம்பி_-_39&oldid=4346257" இலிருந்து மீள்விக்கப்பட்டது