பட்டாம்பி - 38
தோற்றம்
| பட்டாம்பி - 38 (PTB 38) |
|---|
| வேளாண் பெயர் |
| திரிவேணி (Triveni) |
| பேரினம் |
| ஒரய்சா |
| இனம் |
| ஒரய்சா சாட்டிவா |
| கலப்பினம் |
| அன்னபூர்ணா x பட்டாம்பி - 15 |
| வகை |
| புதிய நெல் வகை |
| காலம் |
| 95 - 110 நாட்கள் |
| மகசூல் |
| 6,000 கிலோ, 1 எக்டேர் |
| வெளியீடு |
| 1971 |
| வெளியீட்டு நிறுவனம் |
| மண்டல வேளாண் ஆராய்ச்சி நிலையம், பட்டாம்பி |
| மாநிலம் |
| கேரளம் |
| நாடு |
பட்டாம்பி - 38 (PTB -38), வேளாண் பெயர்; திரிவேணி (Triveni), முன்மொழிவு எண்; (IET 11747) என்பது; 1971 ஆம் ஆண்டுவாக்கில் அறிமுகப்படுத்தப்பட்ட, குறுகியகால நெல் வகையாகும்.[1] சுமார் 95 - 110 நாட்களில் அறுவடைக்கு வரக்கூடிய இந்த நெல் இரகம், அன்னபூர்ணா என்ற நெல் இரகத்தையும், பட்டாம்பி - 15 எனும் நெல் இரகத்தையும் இணை சேர்த்து உருவாக்கப்பட்ட நெல் வகையாகும். ஒரு எக்டேருக்கு சுமார் 6000 கிலோ மகசூல் தரவல்ல இதன் அரிசி, வெள்ளை நிறத்தில் குட்டையாக தடித்துக் காணப்படுகிறது. மேலும் இவ்வகை நெற்பயிர் கேரளா, மற்றும் பாண்டிச்சேரி மாநிலங்களில் அதிகளவில் பயிரிடப்படுகிறது.[2]
இவற்றையும் காண்க
[தொகு]சான்றுகள்
[தொகு]- ↑ Released varieties from RARS Pattambi with AICRIP tested data - 4, Triveni (Ptb 38), 1971, 11747
- ↑ "Details of Rice Varieties : Page 1 - 11 - Triveni (PTB-38)". drdpat.bih.nic.in (ஆங்கிலம்). 2017. Retrieved 2017-03-27.