பட்டறைப் பெரும்புதூர் தொல்லியற் களம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

பட்டறைப் பெரும்புதூர் தொல்லியற் களம் என்பது திருவள்ளூரில் இருந்து திருத்தணி செல்லும் சாலையில் 12 கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது.[1]

பட்டறைப் பெரும்புதூரில் நடந்த அகழ்வாராய்ச்சியில் 30 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே இப்பகுதியில் மனிதர்கள் வாழ்ந்ததற்கான தடயங்கள் கிடைத்துள்ளன. மேலும், உலகம் முழுக்க தமிழர்கள் கொண்டிருந்த வணிகத் தொடர்புகளுக்கான சான்றுகளும் தமிழர்கள் வணிகச் சிறப்பை பறை சாற்றுகின்றன.[2]

அகழ்வாராய்ச்சி நடைபெற்ற இடங்கள்[தொகு]

கொற்றலை ஆற்றுப் படுகையிலிருந்து சிறிது தூரத்தில் பட்டறைப் பெரும்புதூரில் உள்ள ஆனைமேடு, நத்தமேடு, இருளந்தோப்பு ஆகிய இடங்களில் மொத்தம் 12 ஆய்வுக் குழிகள் தோண்டப்பட்டு இந்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.[1]

மக்கள் வாழ்ந்த காலம்[தொகு]

தமிழ்நாட்டில் கிடைத்துள்ளவற்றிலேயே மிக அரிதாக கற்காலத்தைச் சேர்ந்த பொருட்களும் இந்த அகழ்வாய்வில் கிடைத்துள்ளன.அதன் அடிப்படையில் பார்த்தால் இப்பகுதியில் 30 ஆயிரம் ஆண்டுகளாக தொடர்ச்சியாக மனித இனம் வாழ்ந்து வருவதற்கான சாத்தியக்கூறுகள் இருப்பதாக அகழ்வாராய்ச்சியாளர்கள் கருதுகின்றனர். .[2]

அகழ்வாராய்ச்சியில் கிடைத்த பொருட்கள்[தொகு]

பழங்கற்காலத்தைச் சேர்ந்த இரு பக்க முனையுடைய கத்தி, புதிய கற்காலத்தைச் சேர்ந்த கோடாரிகள், சாம்பல் நிற மண்பாண்ட ஓடு, ரோமானிய மட்பாண்ட வகையான ரௌலட் மட்பாண்ட ஓடு, 23 உறைகளைக் கொண்ட உறை கிணறு,செப்புப் பொருட்கள், கல் மணிகள், யானைத் தந்தத்தால் ஆண ஆபரணம், தமிழ் பிரம்மி எழுத்துக் கொண்ட பானை ஓடுகள், கூம்பு வடிவ ஜாடிகள் ஆகியவை இங்கே கிடைத்திருக்கின்றன.[1]

ரோமானியர்களுடன் வர்த்தகம்[தொகு]

ரோமானிய மட்பாண்ட வகைகள் கிடைத்திருப்பதால் சங்ககாலத்தில் இந்த இடம் ரோமானியர்களுடன் வர்த்தகம் மேற்கொண்டிருக்கக்கூடிய ஒரு வர்த்தக மையமாக இருந்திருக்கக்கூடும் என அகழ்வாராய்ச்சியாளர்கள் கருதுகின்றனர்.[1]

மேற்கோள்கள்[தொகு]

  1. 1.0 1.1 1.2 1.3 "சென்னை அருகே 30 ஆயிரம் ஆண்டுகளாக மனிதர்கள் வாழ்ந்த இடம்". BBC தமிழ். பார்க்கப்பட்ட நாள் 7 சூலை 2016.
  2. 2.0 2.1 "தோண்டத் தோண்ட ஆச்சிரியங்கள்". புதியதலைமுறை இதழ்.[தொடர்பிழந்த இணைப்பு]