பட்டம்புதூர் அரசு உயர்நிலைப்பள்ளி
தோற்றம்
| பட்டம்புதூர் அரசு உயர்நிலைப்பள்ளி | |
|---|---|
| அமைவிடம் | |
| பட்டம்புதூர் விருதுநகர், தமிழ்நாடு, 626003 | |
| அமைவிடம் | 9°29′28″N 77°56′02″E / 9.4911°N 77.9338°E |
| தகவல் | |
| பள்ளி மாவட்டம் | விருதுநகர் மாவட்டம் |
பட்டம்புதூர் அரசு உயர்நிலைப்பள்ளி என்ற உயர்நிலைப்பள்ளி, இந்தியாவில் தமிழ்நாடு மாநிலத்தின் விருதுநகர் மாவட்டத்திலுள்ளது.
அமைவிடம்
[தொகு]பட்டம்புதூர் அரசு உயர்நிலைப்பள்ளி, கடல் மட்டத்திலிருந்து சுமார் 110.18 மீ. உயரத்தில், (9°29′28″N 77°56′02″E / 9.4911°N 77.9338°E) என்ற புவியியல் ஆள்கூறுகள் கொண்டு அமைந்துள்ளது.
விவரங்கள்
[தொகு]- இப்பள்ளியில் ஆறாம் வகுப்பு முதல் பத்தாம் வகுப்பு வரை செயல்பாட்டில் உள்ளன. தனியார் தொண்டு நிறுவனப் பங்களிப்புடன் 'ஸ்மார்ட்' வகுப்புகள், வண்ணக் கணினிகள், ஆய்வகம், சூரியக் குடும்பம் ஆகியவற்றின் முப்பரிமாண ஓவியங்கள் வரையப்பட்டுள்ளன.
- இயற்கை சார்ந்த வனவிலங்குகள், இயற்கைக் காட்சிகள், வானவில் ஓவியங்கள், பள்ளி சுவர்களில், வண்ண ஓவியங்களில் திருக்குறள் மற்றும் அவற்றின் விளக்கங்கள், வகுப்பறைகளில் நன்னெறி பதிவு ஓவியங்கள், ஸ்மார்ட் வகுப்பறைக்கு வெளிச் சுவர்களில் தொடருந்து பெட்டிகளின் ஓவியங்கள் ஆகியவை காணப்படுகின்றன.
- பள்ளி வளாகத்தில் செயற்கை நீரூற்று, நவீன அறிவியல் ஆய்வகம், சுகாதார ஆய்வகம், உணவருந்தும் இடம், கை கழுவும் குழாய்கள் அமைப்பு, அடிகுழாயுடன் கூடிய மழைநீர் சேகரிப்பு அமைப்பு, பல்வகை பழ மரக்கன்றுகளுடன் கூடிய தோட்டம் முதலியவை பள்ளியின் சிறப்புகள்.
- இப்பள்ளியில், தையல் கலைப் பயிற்சி, கூடை பின்னுதல், அழகு சாதன பொருட்கள் தயாரிப்புப் பயிற்சிகள், நெகிழி, உபயோகமற்ற பொருட்களிலிருந்து மாற்றுப் பொருட்கள் செய்வதற்கான பயிற்சிகள் கொடுக்கப்படுகின்றன.[1]
- பள்ளிக்கென வாகனங்கள், பள்ளியின் கொடிக்கம்பத்தைச் சுற்றி புல்வெளிகள், தோட்டம், தொடுதிரை வசதியுடன் புரொஜெக்டர் கொண்ட வகுப்பறை, நவீன அறிவியல் கணித உபகரணங்களுடன் ஆய்வகம் ஆகியவை இப்பள்ளியின் மற்ற சிறப்புகள்.[2]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "விருதுநகரில் இப்படியும் ஒரு அரசுப் பள்ளியா? எந்த பக்கம் பாத்தாலும் ஆச்சரியமா இருக்கே!" (in ta). https://tamil.samayam.com/city/virudhunagar/a-government-high-school-is-functioning-in-virudhunagar-instead-of-a-private-school/articleshow/99513405.cms.
- ↑ "செயற்கை நீரூற்று, டிஜிட்டல் வகுப்பறைகள்.. தனியார் பள்ளிகளுக்கே டஃப் கொடுக்கும் பட்டம்புதூர் அரசுப்பள்ளி!" (in ta). 2023-04-14. https://tamil.news18.com/virudhunagar/pattampudur-govt-school-has-artificial-fountain-digital-classroom-and-much-more-infrastructure-941074.html.