பட்டதாரி ஆசிரியர்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

பல்கலைக்கழகம் வழங்கும் ஏதாவது ஒரு பாடத்தில் இளங்கலை அல்லது இளம் அறிவியலில் பட்டம் பெற்று அதன் பின்பு கல்வியியல் கல்வியில் இளங்கலைப் பட்டம் பெற்றவர்கள் தமிழ்நாட்டிலுள்ள உயர்நிலைப்பள்ளி மற்றும் மேல்நிலைப்பள்ளிகளில் ஆறு முதல் பத்தாம் வகுப்பு வரை அவர்கள் பயிற்சி பெற்ற பட்டப்படிப்புகளுக்கு ஏற்ற பாடங்களுக்கு ஆசிரியர்களாக நியமிக்கப்படுகின்றனர். இவர்கள் பட்டதாரி ஆசிரியர் என்று அழைக்கப்படுகின்றனர். சில நடுநிலைப்பள்ளிகளிலும் குறைந்த அளவில் பட்டதாரி ஆசிரியர்கள் நியமிக்கப்படுகின்றனர்.

"https://ta.wikipedia.org/w/index.php?title=பட்டதாரி_ஆசிரியர்&oldid=857324" இலிருந்து மீள்விக்கப்பட்டது