பட்கை மலைகள்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
பட்கை மலை
பாங்சௌ கணவாயிலிருந்து தெரியும் பட்கை மலைகள்
மிக உயர்ந்த புள்ளி
கொடுமுடிசரமதி சிகரம்[1]
உயரம்3,826 m (12,552 ft)
புவியியல்
பட்கை மலைகள் is located in ஆசியா
பட்கை மலைகள்
ஆசியாவில் அமைவிடம்
அமைவிடம்இந்தியா, பர்மா
தொடரின் ஆள்கூறுகள்27°0′N 96°0′E / 27.000°N 96.000°E / 27.000; 96.000ஆள்கூற்று: 27°0′N 96°0′E / 27.000°N 96.000°E / 27.000; 96.000

பட்கை மலைகள் அல்லது பட்கை பம் என்பது இந்தியாவின் வட-கிழக்கில் பர்மா அல்லது மியான்மர் எல்லையில் உள்ளது. இம்மலையின் உயரமான புள்ளி சரமதி சிகரம் ஆகும்.

புவியியல்[தொகு]

பட்கை மலை தொடர்கள் இமயமலைகள் போல் கரடுமுரடாக காணப்படுவதில்லை மற்றும் இதன் சிகரங்கள் உயரம் குறைவாகவும் காணப்படுகின்றன. இம்மலைத் தொடர்கள் பொதுவாக கூம்பு வடிவிலான மலையுச்சிகள், செங்குத்தான சரிவுகள் மற்றும் ஆழமான பள்ளத்தாக்குகளுடன் காணப்படுகின்றன.

பட்கையின் கீழ் மூன்று மலைத்தொடர்கள் இருக்கின்றன. அவை பட்கை பம்[2] , காரோ-காசி-செயிந்தியா மற்றும் லுசாய் மலைகள் ஆகும். லுசாய் மலையின் உயரமான புள்ளி புவாங்பூய் திலாங், இதன் மற்றொரு பெயர் நீல மலைகள் ஆகும். காரோ-காசி-செயிந்தியா மலைகள் மேகாலயா மாநிலத்தில் அமைந்துள்ளது. இந்த மலைகளில் அமைந்துள்ள சிரபுஞ்சி மற்றும் மௌசின்ரம் ஆகிய இடங்கள் உலகிலேயே ஈரமான இடங்கள் ஆகும், இங்கு ஆண்டின் சராசரி மழை அளவு அதிகமாக இருக்கும்.

பாங்சௌ கணவாய் தான் பட்கை மலைகளுக்குள் செல்லும் வழியாக உள்ளது.

பட்கை மலைகள் காணப்படும் இந்திய மாநிலங்கள்[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

புற இணைப்பு[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=பட்கை_மலைகள்&oldid=2780484" இருந்து மீள்விக்கப்பட்டது