படை முகில்
படை முகில் என்பது கீழ்ப்படைக்குரிய ஒருமுகில்வகை ஆகும். இது சீரான தளத்தைக் கொண்ட கிடையான படைகளினால் ஆனது. இது தரையிலிருந்து சுமார் 2000 மீட்டருக்குக் கீழான உயரத்தில் காணப்படும். இது வெப்ப உயர்வினால் ஏற்படும் மேற்காவுகை முகில்களுக்கு வேற்றானதாகும். குறிப்பாக படைமுகில் என்பது தாழ்மட்டத்தில் காணப்படுகின்ற தட்டையான, குறித்த உருவமற்ற நரை நிறத்திற்கும் வெள்ளைக்குமிடையிலான நிறங்கொண்ட முகில்களாகும். இம்முகில்கள் கட்டாயமாக தரை மூடுபனிக்கு மேலாகக் காணப்படுவதுடன் இவை மேல் நோக்கி நகரும் காலை மூடுபனி அல்லது வானின் தாழ்ந்த மட்டத்துக்கு பரவும் குளிர் காற்றினால் உருவாகலாம்.
உருவாகும் முறை[தொகு]
படை முகில் ஆனது ஈரமான வெப்பமடைந்த வளிப்படை தரையிலிருந்து எழுந்து மேலே ஒடுக்கமடையும் போது தோன்றுகின்றது. இதன்போது வெப்பநிலை மாறாமல் மறைவெப்ப குளிர்ச்சியை அடைவதால் சாரீரப்பதன் அதிகரிக்கின்றது.[1]
மேற்கோள்கள்[தொகு]
- ↑ "Stratus Clouds". Weather. USA Today. 16 October 2005. 28 ஜூலை 2019 அன்று மூலம் பரணிடப்பட்டது. 2 January 2014 அன்று பார்க்கப்பட்டது.