படியெடுத்தலுக்கு எதிரான சட்டம், 1992

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

படியெடுத்தலுக்கு எதிரான சட்டம் (The Anti-Copying Act, 1992) என்பது 1992 ஆம் ஆண்டில் உத்தரப் பிரதேச மாநிலத்தில் அப்போதைய மாநில முதலமைச்சராக இருந்த கல்யாண் சிங்கினால் இயற்றப்பட்ட சட்டமாகும்.[1] அப்போது ராஜ்நாத் சிங் கல்வி அமைச்சராக இருந்தார். இந்தச் சட்டம் பள்ளிக்கூடம் மற்றும் பல்கலைக்கழகங்களில் மாணவர்கள் தேர்வின் போது படியெடுப்பதை (பார்த்து எழுதுவதை) தடுப்பதற்காக அந்த மாநிலத்தில் ஏற்படுத்தப்பட்டது ஆகும். இந்தச் சட்டத்தின் மூலம் காவல் அதிகாரிகள் தேர்வு நடக்கும் வளாகத்தில் மாணவர்களை சோதனை செய்ய வழிவகை செய்தது.[2] ஆனால் 1993 ஆம் ஆண்டில் சமாஜ்வாதி கட்சி மற்றும் பகுஜன் சமாஜ் கட்சி ஆகியவை முலாயம் சிங் யாதவ் தலைமையில் ஆட்சி அமைத்த போது இந்தச் சட்டம் ரத்து செய்யப்பட்டது.[3][4]

சான்றுகள்[தொகு]