படின் மாவட்டம்
படின்
| |
|---|---|
மாவட்டம் | |
பாகிஸ்தான் நாட்டின் சிந்து மாகாணத்தில் தெற்கில் படின் மாவட்டத்தின் அமைவிடம் | |
| நாடு | |
| மாகாணம் | சிந்து மாகாணம் |
| கோட்டம் | ஐதராபாத் |
| நிறுவிய ஆண்டு | 1975 |
| தலைமையிடம் | படின் |
| அரசு | |
| • வகை | மாவட்டம் (நிர்வாகி-துணை ஆணையாளர்) |
| பரப்பளவு | |
| • மாவட்டம் | 6,858 km2 (2,648 sq mi) |
| மக்கள்தொகை (2023)[1] | |
| • மாவட்டம் | 19,47,081 |
| • அடர்த்தி | 280/km2 (740/sq mi) |
| • நகர்ப்புறம் | 4,29,849 (22.08%) |
| • நாட்டுப்புறம் | 15,17,232 (77.92%) |
| எழுத்தறிவு | |
| • எழுத்தறிவு % |
|
| நேர வலயம் | ஒசநே+5 (பாகிஸ்தான் சீர் நேரம்) |
| வருவாய் வட்டங்கள் | 6 |
படின் மாவட்டம் (Badin District), பாக்கித்தான் நாட்டின் தெற்கில் உள்ள சிந்து மாகாணத்தின் 30 மாவட்டங்களில் ஒன்றாகும். சிந்து மாகாணத்தின் தெற்கில் அமைந்த படின் மாவட்டத்தின் நிர்வாகத் தலைமையிடம் படின் நகரம் ஆகும். படின் நகரமானது, மாகாணத் தலைநகரான கராச்சிக்கு தென்கிழக்கே 213 கிலோமீட்டர் தொலைவிலும்; நாட்டின் தலைநகரான இசுலாமாபாத்துக்கு தெற்கே 1,379. கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ளது. இம்மாவட்டம் ஐதராபாத் கோட்டத்தில் உள்ளது.
மாவட்ட எல்லைகள்
[தொகு]படின் மாவட்டத்தின் வடக்கே தண்டோ அல்லாயார் மாவட்டம், வடமேற்கே ஐதராபாத் மாவட்டம், கிழக்கே மிர்பூர் காஸ் மாவட்டம் & தார்பார்க்கர் மாவட்டம், தெற்கே இந்தியாவின் கச்சு மாவட்டம் எல்லைகளாக அமைந்துள்ளது.
மக்கள் தொகை பரம்பல்
[தொகு]2023 பாக்கித்தான் மக்கள்தொகை கணக்கெடுப்பின்படி 397,892 குடியிருப்புகள் கொண்ட இம்மாவட்ட மக்கள் தொகை 19,47,081 ஆகும்.[3]. பாலின விகிதம் 100 பெண்களுக்கு 108.42ஆண்கள் வீதம் உள்ளனர்[1][4]. இதன் சராசரி எழுத்தறிவு 36.65% ஆகும். இதன் மக்கள்தொகையில் 10 வயதிற்குட்பட்ட குழந்தைகள் 625,549 (32.16%) ஆக உள்ளனர்.[5]நகர்புறங்களில் 429,849 (22.08%) மக்கள் வாழ்கின்றனர்.[1]
சமயம்
[தொகு]இம்மாவட்டத்தில் இசுலாம் சமயத்தை 74.45% மக்களும், இந்து சமயத்தை 25.11% மக்களும் மற்றும் பிற சமயங்களை 0.44% மக்களும் பின்பற்றுகின்றனர்.
மொழி
[தொகு]இம்மாவட்டத்தில் சிந்தி மொழியை 93.85% மக்களும், பஞ்சாபி மொழியை 2.75% மக்களும், இந்த்கோ மொழியை 1.11% மக்களும் மற்றும் பிற மொழிகளை 2.29% மக்கள் தாய் மொழியில் பேசுகின்றனர்.[6]
மாவட்ட நிர்வாகம்
[தொகு]
இம்மாவட்டம் 5 வருவாய் வட்டங்களையும்,[7], 49 ஒன்றியக் குழுக்களையும் கொண்டுள்ளது.
| வருவாய் வட்டம்[8] | பரப்பளவு
(km²)[9] |
மக்கள் தொகை
(2023) |
மக்கள்தொகை அடர்த்தி
(ppl/km²) (2023) |
எழுத்தறிவு %
(2023)[10] |
ஒன்றியக் குழுக்கள் |
|---|---|---|---|---|---|
| படின் வட்டம் | 1,816 | 490,386 | 270.04 | 37.70% | |
| மால்தி வட்டம் | 1,143 | 471,100 | 412.16 | 39.32% | |
| சாகீத் பசில் ரகு வட்டம் (கொலார்ச்சி வட்டம்) | 1,642 | 374,854 | 228.29 | 33.50% | |
| தல்ஹார் வட்டம் | 569 | 184,206 | 323.74 | 34.16% | |
| தண்டோ பாகோ வட்டம் | 1,688 | 426,535 | 252.69 | 36.17% |
கல்வி
[தொகு]- சிந்து பல்கலைக்கழகம், படின் வளாகம் [11]
- படின் இராணுவக் கல்லூரி[12]
- அரசு இசுலாமியப் பட்டப்படிப்பு கல்லூரி
- அரசு மகளிர் கல்லூரி[13]
- பாகிஸ்தான் அரசு கல்லூரி, படின்
- இராணுவப் பொதுப்பள்ளி, படின்
பொருளாதாரம்
[தொகு]இம்மாவட்ட மக்களில் ஏறத்தாழ 78% பேர் கிராமப்புறங்களில் வாழ்கின்றனர். கால்நடை வளர்த்தலே வாழ்வாதாரமாக உள்ளது. சிந்து ஆற்றின் பாசானக் கால்வாய்கள் இம்மாவட்டத்தின் வழியாகச் செல்வதால் கரும்பு, நெல், கோதுமை, சூரியகாந்தி எண்ணெய் வித்துக்கள் மற்றும் தக்காளி அதிகம் பயிரிடப்படுகிறது. இம்மாவட்டத்தில் 6 கரும்பாலைகளும், 30 அரிசி ஆலைகளும் உள்ளது. மேலும் பாகிஸ்தான் உற்பத்தி செய்யப்படும் கச்சா பெட்ரோலிய எண்ணையில் 50% இம்மாவட்டத்தில் உற்பத்தி செய்யப்படுகிறது.[14]
படின் நிலக்கரி வயல்கள்
[தொகு]படின் மாவட்டத்தில் 1,110 சதுர கிலோ மீட்டர் பரப்பளவில் ஏறத்தாழ 1.358 பில்லியன் மெட்ரிக் டன் நிலக்கரி இருப்பு உள்ளது[15].
தொடருந்து
[தொகு]படின் நகர தொடருந்து நிலையத்திலிருந்து கோட்டத் தலைநகரான ஐதராபாத்திற்கு நேரடி தொடருந்து வசதிகள் உள்ளது.[16]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ 1.0 1.1 1.2 "7th Population and Housing Census - Detailed Results: Table 1" (PDF). Pakistan Bureau of Statistics.
- ↑ "Literacy rate, enrolments, and out-of-school population by sex and rural/urban, CENSUS-2023, SINDH" (PDF).
- ↑ "7th Population and Housing Census - Detailed Results: Table 20" (PDF). Pakistan Bureau of Statistics.
- ↑ "7th Population and Housing Census - Detailed Results: Table 12" (PDF). Pakistan Bureau of Statistics.
- ↑ "7th Population and Housing Census - Detailed Results: Table 5" (PDF). Pakistan Bureau of Statistics.
- ↑ "7th Population and Housing Census - Detailed Results: Table 11" (PDF). Pakistan Bureau of Statistics.
- ↑ Local Govt. Department of Sindh - District of Badin பரணிடப்பட்டது 2006-02-20 at the வந்தவழி இயந்திரம்
- ↑ Divisions/Districts of Pakistan பரணிடப்பட்டது 2006-09-30 at the வந்தவழி இயந்திரம் Note: Although divisions as an administrative structure has been abolished, the election commission of Pakistan still groups districts under the division names
- ↑ "TABLE 1 : AREA, POPULATION BY SEX, SEX RATIO, POPULATION DENSITY, URBAN POPULATION, HOUSEHOLD SIZE AND ANNUAL GROWTH RATE, CENSUS-2023, SINDH" (PDF).
- ↑ "LITERACY RATE, ENROLMENT AND OUT OF SCHOOL POPULATION BY SEX AND RURAL/URBAN, CENSUS-2023, SINDH" (PDF).
- ↑ University, Sindh. "Laar Campus of University of Sindh". University of Sindh. Archived from the original on 12 December 2013. Retrieved 8 November 2013.
- ↑ Samoon, Muhammad Hashim Khan Bhurgari | Hanif (2016-07-17). "Badin to have Rs1.5bn cadet college soon, says Mandhro". DAWN.COM (in ஆங்கிலம்). Retrieved 2023-08-13.
- ↑ Report, Bureau (2008-09-25). "HYDERABAD: Admission to Badin college from 30th". DAWN.COM (in ஆங்கிலம்). Retrieved 2023-08-13.
{{cite web}}:|first=has generic name (help) - ↑ EconomyBadin, Economy. "Government of Sindh". Government of Sindh. Archived from the original on 10 October 2018. Retrieved 26 March 2019.
- ↑ Badin, Coal Field. "Coal Field Badin". Sindh Coal. Retrieved 8 November 2013.
- ↑ Badin railway station