படிக வளர்ப்பின் பொதுவான முறைகள்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

படிக வளர்ப்பு முறைகளை பொதுவாக மூன்று பெரும் பிாிவுகளாகப் பிாிக்கலாம். இவைகளை திண்மம், திரவம் மற்றும் வாயு ஆகிய நிலைகளில் இருந்து, படிக நிலைக்கான நிலைமாற்றங்களாக் கொள்ளலாம்.

திண்ம நிலை - படிக நிலை[தொகு]

திண்ம நிலையிலிருந்து படிக நிலைக்கான நிலைமாற்றத்திற்கு சிறந்த உதாரணமாக, திண்மப் பொருள்களில் உள்ள திாிபுகளையும், குறைகளையும் நீக்கும் பொருட்டு அதனைக் குறிப்பிட்ட வெப்பநிலைக்கு எடுத்துச் சென்று, பின்பு குளிர்விக்கப்படும் "சூடேற்றி ஆறவிடுதல்" என்னும் முறையினைக் குறிப்பிடலாம்.

திரவ நிலை - படிக நிலை[தொகு]

திரவ நிலையிலிருந்து படிகம் வளர்க்கும் முறைகளைப் பொதுவாக இரண்டு பிாிவுகளாப் பிாிக்கலாம். ஒன்று உருக்கிலிருந்து வளர்க்கும் முறை. மற்றொன்று, கரைசலிலிருந்து வளர்க்கும் முறை. கரைசலில் இருந்து வளர்க்கும் முறை மேலும் இரண்டு பிாிவுகளாகப் பிாிக்கப்படுகிறது. அதாவது உயர் வெப்பநிலைக் கரைசலிலிருந்து படிகம் வளர்த்தல் மற்றும் குறைந்த வெப்பநிலைக் கரைசலிலிருந்து படிகம் வளர்த்தல் என்பனவாகும்.

வாயு நிலை - படிக நிலை[தொகு]

வாயு நிலையிலிருந்து படிக நிலைக்கான நிலைமாற்றத்தில், பொதுவாக இரண்டு படிக வளர்ப்பு முறைகள் பின்பற்றப்படுகின்றன. ஒன்று இயற்பு-ஆவி முறை, இரண்டாவது வேதி-ஆவி முறை.

இவை ஒவ்வொன்றும், மேலும் படிகப் பொருளின் வேதியியல் மற்றும் இயற்பியல் பண்புகளைப் பொருத்து, பல உட்பிாிவு முறைகளாகப் பிாிக்கப்படுகிறது.

மேற்கோள்கள்[தொகு]