படா (திரைப்படம்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
படா
இயக்கம்கமல் கே.எம்.
தயாரிப்புமுகேசு ஆர். மேத்தா
ஏ.வி.அனூப்
சி.வி.சேசாத்திரி
கதைKamal K.M.
இசைவிஷ்ணு விஜய்
நடிப்பு
ஒளிப்பதிவுசமீர் தாகிர்
கூடுதல் ஒளிப்பதிவு:[1]
கிரீசு கங்காதரன்
சுரேசு இராசன்
வினோத் இளம்பள்ளி
ரெனடைவ்
மது நீலகண்டன்
படத்தொகுப்புசான் முகமது
கலையகம்இ4 எண்டர்டெயின்மெண்ட்
ஏவிஏ தயாரிப்பு
வெளியீடு10 மார்ச்சு 2022
நாடுஇந்தியா
மொழிமலையாளம்


படா என்பது 2022 ஆம் ஆண்டு வெளியான இந்திய மலையாள மொழி அரசியல் சமூக-கிளர்ச்சி திரைப்படமாகும் (Political social-thriller film). இது கமல் கே.எம் ( ஐ.டி யை இயக்கியவர்) இயக்கிய திரைப்படமாகும். குஞ்சாக்கோ போபன், ஜோஜு ஜார்ஜ், விநாயகன் மற்றும் திலீஷ் போத்தன் ஆகியோர் இப்படத்தில் நடித்துள்ளனர். [2] 1996 ஆம் ஆண்டில் அப்போதைய பாலக்காடு ஆட்சியரை பணயக்கைதியாக பிடித்து வைத்திருந்த உண்மை சம்பவத்தை அடிப்படையாக வைத்து இப்படம் உருவாகியுள்ளது. [3] [4] [5] [6] [2] இப்படம் மார்ச் 11, 2022 ஆம் தேதியன்று வெளியிடப்பட்டது. விமர்சன ரீதியான பாராட்டையும் பெற்றது. [7]

அனுமானம்[தொகு]

1996 ஆம் ஆண்டில், அப்போதைய பாலக்காடு மாவட்ட ஆட்சியரை பணயக்கைதியாக பிடித்து வைத்திருந்த உண்மை சம்பவத்தை அடிப்படையாக வைத்து இப்படம் உருவாகியுள்ளது. ஒரு புரட்சியைத் தூண்டக்கூடிய பெரிய ஒன்றைச் செய்ய வெவ்வேறு இடங்களில் இருந்து ஐந்து பேர் எப்படித் திட்டமிடுகிறார்கள் என்பதைக் காட்டுவதன் மூலம் படா திரைப்படம் தொடங்குகிறது. இந்தக் குழுவினர், அவர்களுடைய சேருமிடத்திற்கு வந்து, கலெக்டர் வருவதற்காகக் காத்திருக்கிறார்கள். ஒரு நாள் காத்திருப்புக்குப் பிறகு, அவர்கள் ஆட்சியரின் அறைக்குள் நுழைந்து, அவரைச் சுற்றியுள்ள மற்றவர்களைத் துரத்திய பின்னர், வலுக்கட்டாயமாக அவரைக் கயற்றால் கட்டுகிறார்கள். ஆட்சியரின் வற்புறுத்தலின் பேரில், தங்களை பழங்குடியினர் நலனுக்காக பாடுபடும் 'அய்யன்காளி படை' என அடையாளப்படுத்திக் கொள்வதுடன், ஆட்சியரை பணயக்கைதியாக வைத்து, சர்ச்சைக்குரிய ஆதிவாசி நிலத் திருத்த மசோதாவை ரத்து செய்ய தற்போதைய அரசிடம் பேரம் பேசுவதே அவர்களின் தற்போதைய முடிவு. ஆட்சியருக்கும் ஐந்து பேருக்கும் இடையேயான பரிமாற்றங்கள் மூலம் ஆதிவாசி சமூகத்தின் பரிதாபகரமான அவலநிலை திரையில் இன்னும் தெளிவாக விவரிக்கப்படுகிறது. ஆட்சியர் அவர்களின் அவலநிலையை அனுதாபத்துடன் பார்ப்பது மட்டுமின்றி, அவர்களுடைய கோரிக்கையான ஆதிவாசி நிலத் திருத்த மசோதாவை ரத்து செய்வதற்கு தன்னுடைய ஆதரவையும் தெரிவிக்கிறார்.

நடிகர்கள்[தொகு]

  • ராகேஷ் கன்ஹாங்காடாக குஞ்சாக்கோ போபன் (ரமேஷ் கன்ஹாங்காட்டை அடிப்படையாகக் கொண்டது)
  • அரவிந்தன் மண்ணூராக ஜோஜு ஜார்ஜ் (அஜயன் மண்ணூரை அடிப்படையாகக் கொண்டது)
  • பாலு கல்லராக விநாயகன் (பாபு கல்லரை அடிப்படையாகக் கொண்டது)
  • திலீஷ் போத்தன் "குட்டி"/நாராயணன்குட்டியாக (விளையோடி சிவன்குட்டியை அடிப்படையாகக் கொண்டது)
  • பிரகாஷ் ராஜ் தலைமைச் செயலாளர் என். ராஜசேகரன் ஐ.ஏ.எஸ்
  • குட்டியின் மனைவி மினி கே.எஸ் ஆக உன்னிமய பிரசாத்
  • அஜய் ஸ்ரீபாத் டாங்கே, பாலக்காடு ஆட்சியராக அர்ஜுன் ராதாகிருஷ்ணன் (WR ரெட்டியை அடிப்படையாகக் கொண்டது)
  • இந்திரன்ஸ் தோழர். கண்ணன் முண்டூர் (முண்டூர் ரவுன்னியை அடிப்படையாகக் கொண்டது)
  • சலீம் குமார் அமர்வு நீதிபதியாக, நீதிபதி தங்கப்பன் ஆச்சாரி
  • பி.கிருஷ்ணகுமார் ஐஏஎஸ் ஆக ஜெகதீஷ்
  • டி.ஜி.ரவி வழக்கறிஞர். ஜெயபாலன், இடைத்தரகர்
  • குஞ்சியாக சாவித்திரி ஸ்ரீதரன்
  • அப்போதைய கேரள முதல்வராக வி.கே.ஸ்ரீராமன் இ.கே.நாயனார்
  • சாதிக் ஹாசனார், கலெக்டரின் கன்மேனாக ஷைன் டாம் சாக்கோ
  • உஸ்மானாக கோபாலன் அடத்
  • பிரான்சிஸ் சாக்கோ ஐபிஎஸ் ஆக சுதீர் கரமனா
  • குமரனாக தாசன் கோங்காட்
  • பாலுவின் மனைவி ஷீஜா பிகேவாக கனி குஸ்ருதி
  • ஹரி கோங்காட்
  • கே ராஜேஷ்
  • சிபி ஜாய் ஜோசப்பாக சிபி தாமஸ்
  • DySP கேபி தாமஸாக பிட்டோ டேவிஸ்
  • சச்சின் அகர்வால் ஐபிஎஸ் ஆக விவேக் விஜயகுமாரன்
  • கே சந்திரன் ஐபிஎஸ் ஆக ஜேம்ஸ் எலியா
  • பத்மினி ராமச்சந்திரனாக சஜிதா மடத்தில்
  • கே.ரவியாக கோபன் மங்காட்
  • கோட்டயம் ரமேஷ்
  • சங்கர் ராமகிருஷ்ணன்
  • தேவேந்திரநாத் சங்கர்நாராயணன்
  • உன்னி விஜயன்
  • கண்ணன் நாயர்
  • சுனில் அன்னூர்
  • ராஜீவன் வெள்ளூர்
  • ஹரிஸ் சலீம்
  • நிதின் ஜார்ஜ்
  • பாலுவின் மகள் ரோசாவாக இஷிதா சுதீஷ்
  • பாலுவின் மகன் ஆசாத் வேடத்தில் மாஸ்டர் டாவிஞ்சி
  • என்.பி.ரவிச்சந்திரன் ஐ.ஏ.எஸ் ஆக சந்தோஷ் கீழத்தூர்

ஒலிப்பதிவு[தொகு]

அசல் ஒலிப்பதிவை விஷ்ணு விஜய் இசையமைத்துள்ளார்.

Pada (Original Motion Picture Soundtrack)[8]
# பாடல் நீளம்
1. "Bus Scene"   01:32
2. "Intro"   01:14
3. "Planning"   01:09
4. "Vinayakan Intro"   01:01
5. "Bomb Making"   01:12
6. "Chackochan"   01:21
7. "Collector Gun Point"   02:03
8. "Collector Intro"   01:01
9. "Interval"   01:16
10. "Collector At Gunpoint When Door Opens Scene"   01:59
11. "Crowd & Indrans Scene"   01:31
12. "Dileesh Pothen Talks To Collector Being Tied Scene"   01:11
13. "Drinking Water & Eating Banana Scene"   01:15
14. "Higher Officials & Prakash Raj Meeting Scene"   03:10
15. "Indrans & Police Group Scene"   01:10
16. "Prakash Raj Office Scene"   01:42
17. "All Sitting Idle Scene"   01:32
18. "Crowd & Police Tries To Break In Scene"   01:06
19. "Police Planning With Map Scene"   01:02
20. "Prakash Raj Talking To Adv On Phone Scene"   02:00
21. "Adv Going Upstairs"   01:49
22. "Adv Sits For Discussion Scene"   03:10
23. "Collector Coming Out Scene"   01:56
24. "Travel With Adv In Car Scene"   05:58
மொத்த நீளம்:
42:31

தயாரிப்பு[தொகு]

குஞ்சாக்கோ போபன், ஜோஜு ஜார்ஜ், விநாயகன் மற்றும் திலீஷ் போத்தன் ஆகியோர் இப்படத்தில் இணைந்த பின்னர், 2019 ஆண்டில் படத்தயாரிப்பு தொடங்கியது. [9] மம்முட்டி ஒரு முக்கிய வேடத்தில் நடிக்கவுள்ளதாக தகவல் வெளியானது. [10] 2019 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதத்தில் படப்பிடிப்பு நிறைவடைந்தது. [11]

வரவேற்பு[தொகு]

இப்படம் வெளியாகி நேர்மறையான விமர்சனங்களைப் பெற்றது. [12] [13] டைம்ஸ் ஆஃப் இந்தியாவின் அன்னா மேத்யூஸ் படத்திற்கு ஐந்தில் நான்கு மதிப்பீட்டை அளித்து வெளியிட்ட விமரிசனம்:

"அடிப்படையில், எழுத்தாளரும் இயக்குனருமான கமல் கே.எம் மாநிலத்தின் அரசியல் வரலாற்றில் ஒரு வியத்தகு சம்பவத்தைப் பயன்படுத்தி, அழுத்தமான, சிந்தனையுடன் நல்ல சினிமாவாக மாற்றியுள்ளார். ஆத்திரமூட்டும் திரைக்கதை, மிக வித்தியாசமான காலகட்டங்களை மட்டுமல்ல, நமது அரசு அலுவலகங்களின் பணிகளையும் வெளிப்படுத்தும் காட்சிகள், சிறப்பான நடிப்பு. இது அனைவருக்கும் மிகவும் பரிந்துரைக்கப்பட்ட படம்." [14]

தி இந்துவின் எஸ்.ஆர்.பிரவீன், "ஒடுக்கப்பட்டவர்களின் நியாயமான கோபத்தின் அனுதாபமான சித்தரிப்பு" என்று விமரிசனம் செய்தார். [15]

தி இந்தியன் எக்ஸ்பிரஸின் கௌதம் VS இது குறித்துக் கருத்துத் தெரிவிக்கையில்,

"இந்தத் திரைப்படம் ஒரு சக்திவாய்ந்த அரசியல் அறிக்கை மற்றும் ஆட்சி மாற்றத்திற்குப் பிறகு மாற்றம் காணும் அரசாங்கங்களின் கொள்கைகளை வெளிச்சம் போட்டுக் காட்டுகிறது. இடது அல்லது வலது என்று எந்த அணியாக வேண்டுமானாலும் இருக்கட்டும். காடுகளின் மீது பழங்குடி சமூகங்களின் உரிமைகளைப் பறித்துக் கொண்டு, பல ஆண்டுகளாக பழங்குடியினரின் சட்டங்களை கார்ப்பரேட் நலன்களுக்கு ஆதரவாக நீர்த்துப்போகச் செய்தது குறித்து இப்படம் பேசுகிறது. ". [16] லேட்டஸ்ட்லியின் (LatestLY) ஸ்ரீஜு சுதாகரன் படத்திற்கு 4/5 மதிப்பீடு வழங்கியுள்ளார். "குஞ்சாகோ போபன் மற்றும் விநாயகனின் மலையாளப் படம் தைரியமானது, அமைப்பு ரீதியான அலட்சியத்திற்கு எதிரான கிளர்ச்சிக்கு மீண்டும் அழைப்பு விடுக்கிறது" என்று எழுதினார். [17]

மேற்கோள்கள்[தொகு]

  1. "Revision of പട from Sat, 02/04/2022 - 15:02".
  2. 2.0 2.1 "Pada is a question directed at society: Kamal KM". March 10, 2022.
  3. Nagarajan, Saraswathy (February 24, 2022). "Director Kamal KM makes his comeback to cinema with the multi-starrer 'Pada', based on a real-life incident that shook Kerala". The Hindu.
  4. "Pada Movie Review & Rating: ശക്തമായ രാഷ്ട്രീയ ചിത്രം; പട റിവ്യൂ".
  5. "PADA MOVIE | സെന്‍സറിങ് പൂര്‍ത്തിയായി; U/A സര്‍ട്ടിഫിക്കറ്റുമായി 'പട' മാര്‍ച്ച് 11ന് തിയേറ്ററുകളില്‍". News18 Malayalam. March 9, 2022.
  6. "Pada First Review : 'കാഴ്ച്ചയുടെ ഗംഭീര പടവെട്ട്'; പടയുടെ ആദ്യ പകുതി പ്രതികരണം ഇങ്ങനെ". Zee News Malayalam. March 11, 2022.
  7. "Kunchacko Boban-starrer 'Pada' to release on March 11 - Times of India". The Times of India (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2022-03-24.
  8. https://open.spotify.com/album/1CqbW5kwbYNZ2JIClHOK46
  9. "Evolving as an actor with each film: Interview with Kunchacko Boban". OnManorama.
  10. "Mammootty to make cameo appearance in 'Pada'". The News Minute. December 12, 2019.
  11. "Kunchacko Boban's 'Pada' wrapped up". The News Minute. August 5, 2019.
  12. "Loved 'Pada'? Check out these Malayalam movies based on real events". The Times of India. March 15, 2022.
  13. "Director Pa. Ranjith heaps praise on 'Pada', says he is impressed by the screenplay". The Times of India.
  14. "Pada Movie Review: A gripping story of '90s activism". The Times of India.
  15. Praveen, S. r (March 12, 2022). "'Pada' movie review: A sympathetic portrayal of the anger of the oppressed". The Hindu.
  16. "Pada movie review: An enraged fist raised at apathetic state regimes". March 11, 2022.
  17. "Pada Movie Review: Kunchako Boban and Vinayakan's Malayalam Film Is Bold, Arresting Callback to a Revolt Against Systemic Indifference". LatestLY. 31 March 2022. பார்க்கப்பட்ட நாள் 31 March 2022.

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=படா_(திரைப்படம்)&oldid=3841070" இலிருந்து மீள்விக்கப்பட்டது