படல மறை

படல மறை (ஆங்கிலம்: Film Negative) என்பது நிலைத்த ஒளிப்படக் கருவியில் ஒளிப்படத்தைப் பதிவு செய்வதற்காகப் பயன்படுத்தப்படும் படலம் ஆகும். இது நெகிழியால் செய்யப்பட்டிருக்கும். அத்தோடு, இதன் மீது ஒளி உணர் ஹாலைடு உப்புக்கள் கொண்ட திரவக் குழம்பு பூசப்பட்டிருக்கும்.[1] இந்தத் திரவக் குழம்பின் மீது தேவையான அளவு ஒளி பட்டவுடன் படல மறையில் மறை விம்பம் உருவாகும். சில வேதியியல் செயன்முறைகள் மூலம் புலனுறு பிம்பத்தைப் பெற முடியும்.
கறுப்பு வெள்ளைப் படல மறையில் வெள்ளி உப்புக்கள் ஒரே படையில் காணப்படும். அதே நேரத்தில் நிறப் படலத்தில் குறைந்தது மூன்று படைகளாவது காணப்படும்.[2] கோடகலோர் 2 போன்ற நவீன நிறப் படலங்களில் 12 திரவக் குழம்புப் படைகள் காணப்படுகின்றன.[3] அத்தோடு ஒவ்வொரு படையிலும் 20 வெவ்வேறு வேதியியல் பதார்த்தங்கள் காணப்படுகின்றன.
ஒளிப்படவியலின் நீண்ட வரலாறு காரணமாகப் படல மறையில் அல்லது ஒளிப்படத் தாளில் இது வரை ஏறத்தாழ ஒரு டிரில்லியன் ஒளிப்படங்கள் உள்ளன. அவற்றின் மூலம் ஏறத்தாழ 10000 சதுர கிலோமீற்றர் (4000 சதுர மைல்) பிரதேசத்தை (வேல்சின் அரைவாசி) மறைக்க முடியும்.
படலத்தின் பொதுவான அளவுகள்[தொகு]
- 135
- மேம்பட்ட ஒளிப்பட முறைமைப் படலம்
- 110
- 126
- 127
- 120/220
நிறுவனங்கள்[தொகு]
டாய் நிப்பான் பிரிண்டிங், ஃப்யூஜி பிலிம், கோடாக், லக்கி, மிட்சுபிசி, போலராய்டு, சோலாரிஸ் முதலிய நிறுவனங்கள் படல மறைகளைத் தயாரிக்கின்றன.[4]
மேற்கோள்கள்[தொகு]
- ↑ வெள்ளி ஹாலைடு (ஆங்கில மொழியில்)
- ↑ ["படலக் கட்டமைப்பு (ஆங்கில மொழியில்)" இம் மூலத்தில் இருந்து 2012-06-01 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20120601090706/http://motion.kodak.com/motion/uploadedFiles/US_plugins_acrobat_en_motion_newsletters_filmEss_04_How-film-makes-image.pdf. படலக் கட்டமைப்பு (ஆங்கில மொழியில்)]
- ↑ படல மறை (ஆங்கில மொழியில்)
- ↑ ஒளிப்படவியல் நிறுவனங்கள் (ஆங்கில மொழியில்)