படலை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
திடல் முற்ற மரப் படலை (படல்)
படலைக் கூடை
பூப் படலை

படலை என்பது மதில் அல்லது வேலியால் சூழப்பட்ட ஒரு இடத்துக்குள் நுழைவதற்கான வாயிலை அல்லது அவ்வாயிலில் திறந்து மூடத்தக்கவகையில் அமைக்கப்படும் கதவைக் குறிக்கும். படலை ஒரு குறிப்பிட்ட பகுதிக்குள் நுழைவதையோ வெளியேறுவதையோ கட்டுப்படுத்துவதற்குப் பயன்படுகின்றது. படல் என்பதற்கு "பனையோலையாலேனும் முள்ளாலேனும் செய்யப்பட்ட அடைப்பு", "மறைப்புத் தட்டி" என்று பொருள் தருகிறது மதராசுப் பல்கலைக் கழகத் தமிழ் அகராதி. படலை என்னும் சொல்லும் படல் என்பதிலிருந்து பெறப்பட்ட ஒரு சொல்லாகும்.

முற்றப் படலை

 • முற்ற வாயிலை மூடிவைக்கும் படல் [1]
 • ஒடுவந்தழைக் கோல்களால் செய்யப்பட்ட படல் [2]
 • கோங்கம் பூவோடு கூடிய சிம்புகளால் செய்யப்பட்ட படல் [3]

படலைப் பந்தல்

 • கீற்றுப் பந்தல் [4]

பூப் பறித்துப் போடும் கூடை

 • பனையோலையால் பின்னிய படலைக் கூடை [5]

பூமாலை

 • படலைக் கண்ணி [6]
 • நடுகல்லுக்குச் சூட்டும் மாலை [7]

முற்காலத்தில் படலைகள் பனை ஓலை, பனம் மட்டை, மரக்கழிகள் போன்றவற்றைப் பிணைத்துக் கட்டுவதன் மூலம் அமைக்கப்படன. இன்றும் இவ்வாறான படலைகளைக் காண முடியும் ஆயினும் தற்காலத்துப் படலைகள் மரப்பலகை, இரும்பு, அலுமினியம் போன்றவற்றால் செய்யப்படுகின்றன.

அடிக்குறிப்பு[தொகு]

 1. படலை முன்றில் சிறு தினை உணங்கல் (புறம் 319)
 2. ஒடுங் காழ்ப் படலைச் சீறில் முன்றில் (புறம் 325)
 3. வண் சினைக் கோங்கின் தண் கமழ் படலை இருஞ் சிறை வண்டின் பெருங் கிளை மொய்ப்ப, (ஐங்குறுநூறு 370)
 4. படலைப் பந்தர்ப் புல் வேய் குரம்பை, (அகநானூறு 87)
 5. முல்லை; பல் ஆன் கோவலர் படலைக் கூட்டும் (ஐங்குறுநூறு 476)
 6. படலைக் கண்ணி, பரு ஏர் எறுழ்த் திணி தோள், முடலை யாக்கை, முழு வலி மாக்கள் (நெடுநல்வாடை 31)
 7. பல் ஆன் கோவலர் படலை சூட்ட, கல் ஆயினையே கடு மான் தோன்றல்! (புறநானூறு 265)
"https://ta.wikipedia.org/w/index.php?title=படலை&oldid=1418663" இருந்து மீள்விக்கப்பட்டது