உள்ளடக்கத்துக்குச் செல்

படர் அத்தி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/வார்ப்புரு:Taxonomy/Ficus subg. Synoecia|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}} |machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}} |machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}

படர் அத்தி
படர் அத்தி இலைகள்
உயிரியல் வகைப்பாடு e
Unrecognized taxon (fix): Ficus subg. Synoecia
இனம்:
இருசொற் பெயரீடு
Ficus pumila
L. 1753 not Thunb. 1786
வேறு பெயர்கள் [1]
பட்டியல்
  • Ficus hanceana Maxim.
  • Ficus longipedicellata H.Perrier
  • Ficus pumila var. lutchuensis Koidz.
  • Ficus repens var. lutchuensis Koidz.
  • Ficus scandens Lam.
  • Ficus stipulata Thunb. 1786
  • Ficus stipulata Lem. 1843
  • Ficus vestita Desf.
  • Plagiostigma pumila Zucc.
  • Plagiostigma stipulata Zucc.
  • Tenorea heterophylla Gasp.
  • Urostigma scandens (Lam.) Liebm.
  • Varinga repens Raf.

படர் அத்தி அல்லது ஏறு அத்தி (Ficus pumila) என்பது மல்பெரி குடும்பத்தைச் சேர்ந்த ஒரு பூக்கும் தாவர இனமாகும். இது கிழக்காசியாவை (தெற்கு சீனம், தெற்கு யப்பான், வியட்நாம்) பூர்வீகமாகக் கொண்டதுடன், தென்கிழக்கு மற்றும் தென்-மத்திய அமெரிக்காவின் சில பகுதிகளில் இயற்கையாகவே பரவி நிலைபெற்றுள்ளது. இது வீடுகளில் அலங்காரத் தாவரமாகவும் வளர்க்கப்படுகிறது. இதன் இலத்தீன் இருசொற் பெயரான புமிலா (pumila) என்பதன் பொருள் "குள்ளன்" என்பதாகும். [2] இது இத்தாவரத்தின் மிகச் சிறிய இலைகளைக் குறிப்பதாக உள்ளது.

விளக்கம்

[தொகு]

படர் அத்தியானது அடர்ந்த பசுமை மாறா மரமயவேறி ஆகும். இது 2.5–12 மீ (8–39 அடி) உயரம் வரை வளரக்கூடியது. இதன் இளம் இலைகள் தாவரம் வயதாகும்போது உருவாகும் முதிர்ந்த இலைகளை விட மிகச் சிறியதாகவும் மெல்லியதாகவும் இருக்கும். இலைகள் நீள்வட்ட, இதய வடிவ, சமச்சீரற்ற, எதிர் நரம்புகளுடன் இருக்கும். இது தொற்றி செல்லும் அல்லது மரமயவேறி போல ஏறும். இது 4 மீ அல்லது அதற்கு மேற்பட்ட உயரம் வரை மரங்கள், பாறைகள் போன்றவற்றில் தொற்றி ஏறும். இதன் காற்று வேர்கள் ஒளி ஊடுருவக்கூடிய ஒருவித மரப்பாலைச் சுரக்கின்றன, அந்தப் பால் உலரும்போது கடினமாகிறது. இதனால் தண்டுகள் அவற்றின் ஆதரவுடன் பாறை, மரம் உள்ளிட்டவற்றின் மேல் நன்கு ஒட்டிக்கொள்கின்றன. [ மேற்கோள் தேவை ]

இதன் இலைகள் இரு அளவுகளில் இருக்கும். காய்கள் உண்டாகாத இலைகள் சிறியதாகவும், காய்கள் உண்டாகும் இலைகள் பெரியதாகவும் இருகும். இதனால் இருவேறு தாவரங்கள் ஒன்றாக இருப்பது போன்ற தோற்ற மயக்கத்தை ஏற்படுத்தக்கூடும். இதன் காய்கள் பச்சை நிறத்தில் இருக்கும். அது பழுக்கும்போது கருஞ்சிவப்பு நிறத்துக்கு மாறும். வைபீசியா புமிலே (சின். பிளாஸ்டோபாகா புமிலே ) என்ற சிறுகுளவியின் உதவியால் மகரந்தச் சேர்க்கை செய்கிறது. மேலும் இதன் இலைகள் சிவப்பு குத்துவாள் சிறகி என்ற பட்டாம்பூச்சியின் குடம்பிகளால் உண்ணப்படுகிறது. [ மேற்கோள் தேவை ]

சாகுபடி

[தொகு]

படர் அத்தி என்ற இதன் பொதுப் பெயர் குறிப்பிடுவது போல, இந்த தாவரம் தொற்றி செல்லும் பண்பைக் கொண்டுள்ளது. மேலும் இது பெரும்பாலும் தோட்டங்கள் மற்றும் நிலப்பரப்புகளில் வளர்க்கப்படுகின்றது. அங்கு இது தரையை மூடி மரங்கள், சுவர்கள் போன்றவற்றில் தொற்றி ஏறுகிறது. இது 1 °C (34 °F) வரை வெப்பத்தைத் தாங்கும் தன்மை கொண்டது. [3] ஆனால் உறைபனியை தாங்காது. எனவே மிதவெப்பமண்டலப் பகுதிகளில் இது பெரும்பாலும் வீட்டு தாவரமாகவே காணப்படுகிறது. படர் அத்தி வேகமாக வளரக்கூடியது, சிறிதளவே பராமரிப்பு தேவைப்படும். சுற்றுச்சூழல் நிலைமை சாதகமாக இருந்தால் இது ஊடுருவக்கூடியதாகவும் இருக்கலாம். இதன் இரண்டாம் நிலை வேர்கள், தளிர்கை போன்றவை வலுவற்ற சாந்து கொண்ட கட்டிடங்களுக்கோ அல்லது எளிதில் உடையக்கூடிய பொருட்களால் ஆன கட்டமைப்புகளுக்கோ கட்டமைப்பு ரீதியான சேதத்தை ஏற்படுத்தக்கூடும்.

இது ராயல் தோட்டக்கலை சங்கத்தின் தோட்டத் தகுதி விருதைப் பெற்றுள்ளது. [4]

சமையலறை

[தொகு]

இந்த தாவரத்தின் கனிகள் சமையலில் பயன்படுத்தப்படுகின்றன. தைவானில், இதன் பழம் உள்ளிருந்து வெளியே திருப்பப்பட்டு உலர்த்தப்படுகிறது. அதிலிருந்து விதைகள் சுரண்டி நீக்கப்பட்டு, அவற்றின் மேற்பரப்பிலிருந்து நீரின் உதவியுடன் ஒரு கூழ் பிரித்தெடுக்கப்படுகிறது;. இது கெட்டியாகி, தைவானில் 'ஐயு ஜெல்லி' (அல்லது ஐயுசி愛玉子) என்றும் சிங்கப்பூரில் ஐஸ் ஜெல்லி (文頭雪) என்றும் அழைக்கப்படும் ஒரு வகைக் கூழ்மமாக மாறுகிறது.

நச்சுத்தன்மை

[தொகு]

மொரேசி குடும்பத்தில் உள்ள மற்ற தாவர இனங்களைப் போலவே, படர் அத்தியின் பால் போன்ற சாற்றைத் தொடுவது பைட்டோஃபோட்டோடெர்மடிடிஸை ஏற்படுத்தும், [5] இது ஒரு தீவிரமான தோல் அழற்சியாகும். இந்த தாவரம் நச்சுத்தன்மை கொண்டதல்ல என்றாலும், படர் அத்தி எப்.டி.ஏ நச்சு தாவரங்களின் தரவுத்தளத்தில் பட்டியலிடப்பட்டுள்ளது. [6]

காட்சியகம்

[தொகு]

மேற்கோள்கள்

[தொகு]
  1. The Plant List, Ficus pumila L.
  2. Gaffiot, Félix (1934). Dictionnaire illustré Latin-Français (in பிரெஞ்சு). Paris: Librairie Hachette. p. 1278. Retrieved 23 October 2016.
  3. "AGM Plants - Ornamental" (PDF). Royal Horticultural Society. July 2017. p. 39. Retrieved 27 February 2018.
  4. "Ficus pumila AGM". Royal Horticultural Society. Retrieved 4 July 2020.
  5. Rademaker, M.; Derraik, J. G. (July 2012). "Phytophotodermatitis caused by Ficus pumila". Contact Dermatitis 67 (1): 53–56. doi:10.1111/j.1600-0536.2012.02026.x. பப்மெட்:22681467.
  6. "FDA Poisonous Plant Database". U.S. Food & Drug Administration. Archived from the original on 4 October 2022. Retrieved 11 December 2018.
"https://ta.wikipedia.org/w/index.php?title=படர்_அத்தி&oldid=4488999" இலிருந்து மீள்விக்கப்பட்டது