படமாத்தூர்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

படமாத்தூர் (Padamathur), தமிழ்நாட்டின் சிவகங்கை மாவட்டம், திருப்புவனம் வட்டம், திருப்புவனம் ஊராட்சி ஒன்றியம், படமாத்தூர் ஊராட்சியில் அமைந்த வருவாய் கிராமம் ஆகும். மதுரை - சிவகங்கை மாநில நெடுஞ்சாலையிலிருந்து தெற்கே இரண்டு கிமீ தொலைவில் அமைந்த படமாத்தூர் துணை அஞ்சலகத்தின் அஞ்சல் சுட்டு எண் 630562; தொலைபேசி குறியீடு எண் 04575 ஆகும். திருப்பாச்சேத்தி - படமாத்தூர் சாலையில் அமைந்த சிறீ சக்தி சர்க்கரை ஆலையின் இரண்டாம் அலகு படமாத்தூரில் உள்ளது. [1]

அமைவிடம்[தொகு]

சிவகங்கையிலிருந்து மேற்கே 12 கிமீ தொலைவிலும், மதுரையிலிருந்து 35 கிமீ தொலைவிலும், திருப்பாச்சேத்தியிலிருந்து 5 கிமீ தொலைவிலும் படமாத்தூர் உள்ளது. அருகமைந்த கிராமங்கள், பில்லூர், முடிகண்டம், மாத்தூர், அரசனூர், இலுப்பைக்குடி மற்றும் திருப்பாச்சேத்தி ஆகும். அருகமைந்த நகரங்கள் மதுரை மற்றும் சிவகங்கை ஆகும்.

படமாத்தூர் கிராமத்தின், கிழக்கில் சிவகங்கை ஊராட்சி ஒன்றியம் தெற்கில் மானாமதுரை ஊராட்சி ஒன்றியம், வடக்கில் மேலூர் ஊராட்சி ஒன்றியம், மேற்கில் மதுரை கிழக்கு ஊராட்சி ஒன்றியம் அமைந்துள்ளது. [2]

மக்கள்தொகை பரம்பல்[தொகு]

2011ம் ஆண்டின் மக்கட்தொகை கணக்கெடுப்பின்படி, படமாத்தூர் கிராமத்தின் மொத்த மக்கள்தொகை 2,080 ஆகும். ஒடுக்கப்பட்டோர் எண்ணிக்கை 482 (23.17 %) ஆக உள்ளது. இங்கு 580 வீடுகள் உள்ளது. ஆறு வயதிற்குட்பட்ட குழந்தைகள் 227 ஆவர். சராசரி எழுத்தறிவு 82.95% ஆகும்.[3]

போக்குவரத்து[தொகு]

மதுரையிலிருந்து சிவகங்கை செல்லும் பேருந்துகள் படமாத்தூரில் நின்று செல்கிறது. அருகமைந்த தொடருந்து நிலையம், திருப்பாச்சேத்தி மற்றும் மதுரை ஆகும்.

மேற்கோள்கள்[தொகு]

  1. "Sakthi Sugars Limited". Archived from the original on 2018-05-12. பார்க்கப்பட்ட நாள் 2018-04-26.
  2. Padamathur
  3. Padamathur Population - Sivaganga, Tamil Nadu

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=படமாத்தூர்&oldid=3561625" இலிருந்து மீள்விக்கப்பட்டது