படந்தாலுமூடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

படந்தாலுமூடு தமிழ்நாட்டின் கன்னியாகுமரி மாவட்டத்தில் அமைந்துள்ளது. படந்தாலுமூடு என்னும் ஊர் தேசிய நெடுஞ்சாலை 47-ல், விளவங்கோடு வட்டத்தில் அமைந்துள்ளது. இவ்வூரின் அஞ்சல் குறியீட்டு எண் 629163 ஆகும். இது மார்த்தாண்டத்தில் இருந்து வட மேற்கு நோக்கி 5.5 கிமீ தொலைவிலும், களியக்காவிளை என்னும் ஊரிலிருந்து தென் கிழக்கு நோக்கி சுமார் 2கிமீ தொலைவிலும் அமையப் பெற்றுள்ளது. தமிழ்நாட்டின் தலைநகரான சென்னை நகரிலிருந்து 750 கி.மீ. தொலைவில் உள்ளது. இந்த ஊர், ஒரு கிளை விரித்து பரப்பிய "படர்ந்த ஆலமரம்" இப்பகுதியின் நடுவே இருந்ததால், அந்த மரத்தின் பெயரைக் கொண்டு அழைக்கப் பெற்று வந்ததுவுமாகும். இந்த மரமானது, படந்தாலுமூட்டிலிருந்து கொக்குடிவிளை சந்திப்புக்கு செல்லும் சாலை துவங்கும் இடத்தில், அச்சாலைக்கு மேற்காக நின்றிருந்தது! இம் மரம், தேசிய நெடுஞ்சாலை எண்-47 விரிவாக்கத்தின் போது, முற்றிலுமாக பெயர்த்து களையப்பட்டது. இப்பொழுது அந்த மரம் அந்த இடத்தில் இல்லை! இவ்வூர் தேசிய நெடுஞ்சாலைக்கு தெற்கே 3 கிளைச் சாலைகளையும், வடக்கே 4 கிளைச் சாலைகளையும் கொண்டு அமையப் பெற்றதுவுமாகும். தற்பொழுது இந்த ஊரின் மத்தியில் தமிழ்நாடு அரசின் "நேசமணி போக்குவரத்துக் கழக பணிமனை" அமையப் பெற்றுள்ளது! இவ்வூரின் மேற்கு எல்லையான "கருப்பட்டியாலு மூட்டிலிருந்து" தான் கேரள மாநிலத்தின், எல்லை துவங்குகிறது என்பது இவ்வூரின் தனிச் சிறப்பு. இங்கு பெரும்பான்மையாக தமிழர்களே வாழ்கிறார்கள்!

வரலாறு[தொகு]

முதலில் படந்த ஆலுமூடு என்ற பெயரில் இவ்வூர் வழங்கப்பட்டது. இவ்வூரில் முன்பு ஒரு பெரிய ஆல மரம் இருந்ததால் இப்பெயர் வழங்கப்பட்டது. கிராமத்தின் புறநகர்ப் பகுதிகளில் மற்றும் நாகர்கோவில் மற்றும் திருவனந்தபுரம் இடையே தேசிய நெடுஞ்சாலை அமைக்கப்பட்டதாலும், காலநிலை மாற்றத்தாலும் இம்மரம் அழிந்தது . வர்த்தக மற்றும் கற்றல் நிகழ்வுகளுக்காக மக்கள் இந்தப் பனை மரத்தைப் பயன்படுத்தினர். காலம் காரணமாக படந்த ஆலுமோடு என்றபெயர் இணைந்து படந்தாலுமூடு என்றாயிற்று. தற்பொழுது ஒரு ஆல மரம் இந்நகர சந்திப்பில் உள்ளது இது ஆலுமூடு என்று அழைக்கப்படுகிறது. 

கலாச்சாரம்[தொகு]

கேரளாவின் எல்லையோரமாக இருப்பதால் தமிழ் மற்றும் மலையாளம் மொழிகள் இங்குள்ள மக்களால் பரவலாகப் பேசப்படுகிறது. இங்குள்ள கலாச்சாரம், தமிழ் கலாச்சாரம் மற்றும் மலையாள கலாச்சாரம் மற்றும் பாரம்பரியங்களின் கலவையாகும். இந்து மதம் மற்றும் கிறித்துவ மதம் ஆகியவை நகரத்தில் உள்ள முக்கிய மதங்களாகும்.

"https://ta.wikipedia.org/w/index.php?title=படந்தாலுமூடு&oldid=3319869" இலிருந்து மீள்விக்கப்பட்டது