படத்தாளின் வேகம் (கதிரியல்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

ஊடுகதிரியலில் படத்தாளின் வேகம் (film speed) என்பது அதன் கதிர் உணர்ப் பண்பினைக் ((Sensitivity) குறிக்கும். ஒரு பொருளின் ஊடாகச் சென்று எக்சு-கதிர் படத்தாளினை அடைந்து படிமத்தினைப் பதிவு செய்கிறது. குறைந்த கதிர்களை ஏற்று அதிக ஒளியியல் அடர்த்தியினைக் (Optical density) கொடுக்கும் படத்தாள் அதிக உணர்திறனுடையது எனப்படும். இந்த வகைத் தாள் வேகத்தாள் (fast film) எனப்படும். மாறாக அதிக கதிர்களை ஏற்று அதே ஒளியியல் அடர்த்தியைக் கொடுக்கும் தாள் குறைந்த வேகத்தாள் (slow film) எனப்படும். இவ்விரண்டிற்கும் இடைப்பட்டது நடுத்தர வகைத்தாள் (medium speed film) எனப்படும். இந்நிகழ்விற்கு முக்கிய காரணம் வெள்ளி புரோமைடு (silver bromide) படிகங்களின் பருமனளவே ஆகும். இது சாதாரண ஒளிப்படத் தாட்களுக்கும் பொருந்தும். ஆக படத்தாட்கள்

  1. வேகத்தாட்கள்
  2. குறைவேகத் தாட்கள்
  3. நடுத்தர வேகத்தாட்கள்

என மூன்று வகையில் உள்ளன. அவை தேவைக்கு ஏற்ப தேர்வு செய்யப்படுகின்றன.

ஆதாரம்[தொகு]

  • Medical X ray manual-HPF MFG. CO Ltd.