படச்சுருள்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ஃப்யூஜிஃபிலிம் - ஸ்ப்ளூல் 120 வகை எதிர்மறை படச்சுருள் வகை

படச்சுருள் (Roll film) என்பது ஒளிப்படம் எடுக்கும்போது படத்தை பதிவு செய்யும் ஒரு சுருளாகும். படச்சுருள் காமிராவில்[தெளிவுபடுத்துக] வைத்து படம் எடுப்பதற்கு முன்பும், பின்பும் அதனை இருட்டில் வைத்திருப்பது அவசியமாகும். ஒளி எதிா்பாராமல் சிறிது விழுந்தாலும் படச்சுருளில் பதிந்துள்ள காட்சி பாதிப்புக்குள்ளாகும். வெள்ளி புரோமைடு பூசப்பட்டுள்ள படச்சுருளில் படம் எடுக்கும்போது விழும் ஒளி, வேதி வினை காரணமாக அதனை வெள்ளியாகக் குறைக்கிறது. அப்போது ஒளிவிழுந்த பகுதியில் வெள்ளி புரோமைடும் காணப்படும். இவ்வாறு படம் எடுக்கப்பட்ட படச்சுருளை இருட்டறையில் வைத்து வேறு சில வேதி கரைசலில் கழுவி சீராக்குதல் ( PROCESSING ) வேண்டும். இந்தப் பணிக்கு பின்பே நமக்குத் தேவையான ஒளிப்படங்கள் கிடைக்கின்றன.[1]

படச்சுருளில் நிகழ்வது ஒளி வேதியியல் வினையாகும். படச்சுருள் இருட்டறையில் இல்லையெனில் ஒளிவிழக்கூடாத பகுதியில் கூட ஒளிபட்டு வெள்ளி புரோமைடு வேதிவினைபுாிந்து வெள்ளி அணு மட்டுமே மிஞ்சும்.

மேற்கோள்[தொகு]

  1. அனைவருக்கும் கல்வி இயக்கம் - தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் அனுமதி வெளியீட்டு நுால் 2010 - எதனாலே ? எதனாலே ? எதனாலே ?
"https://ta.wikipedia.org/w/index.php?title=படச்சுருள்&oldid=3718094" இலிருந்து மீள்விக்கப்பட்டது