உள்ளடக்கத்துக்குச் செல்

படகைக்கா பள்ளம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
படகைக்கா பள்ளம், நாசாவின் படிமம், 2016.
படகைக்கா பள்ளம், சகா குடியரசுவின் படிமம்.

படகைக்கா பள்ளம் (Batagaika crater), உருசியம்: Батагайский кратер, உருமானியம்: Batagaysky krater) என்பது, செர்சுகி மலைத்தொடர் பகுதியில் உள்ள ஒரு வெப்பக் கரைவு நிலப்பரப்பு பகுதியின் தாழ்வுப் பள்ளமாகும். உலகில் அறியப்பட்ட மிகப்பெரிய நிலத்தடி உறைபனி பள்ளமாக உள்ள இது, உருசியாவின் சகா குடியரசின் வெர்கோயன்சுகி மாவட்டத்தில் உருவாகியுள்ளது.[1] பூமியின் நரகத்திற்கான நுழைவாயில் வர்ணிக்கப்படும் இப்பள்ளம், கோடைக்காலத்தில் அடிக்கடி பாறைகளின் ஓரங்களில் தண்ணீர் கொட்டும் சத்தத்தாலும், பூமி இடிந்துவிழும் சத்தத்தாலும், மோதலாலும் “இது மிகவும் சத்தமாக இருக்கிறது” என்று இங்கிலாந்தின் சசெக்சு பல்கலைக்கழகத்தின் புவியியலாளர் ஜூலியன் மர்டன் கூறுகிறார், அவர் தனது ஆராய்ச்சியின் ஒரு பகுதியாக அந்த இடத்தைப் பார்வையிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.[2]

விளக்கம்

[தொகு]
படகைக்கா பள்ளத்தின் பரிணாமம் 1999-2013.

இந்தப் பள்ளமானது, 100 மீட்டர் (328 அடி) ஆழம் வரை ஒரு கிலோமீட்டர் நீளமுள்ள வெட்டுக்காயம் போல் உருவாகி, கிழக்கு சைபீரியாவின் டைகா வரை வளர்ந்து வருகிறது. மேலும் இது படகைக்காவின் தென்கிழக்கே 10 கிமீ (6.2 மைல்) தொலைவிலும், தலைநகர் யாகுட்சுக்குக்கு வடகிழக்கே சுமார் 660 கிமீ (410 மைல்) தொலைவிலும், எசே-கய்யா குடியேற்றத்திலிருந்து வடகிழக்கே 5 கிமீ (3.1 மைல்) தொலைவிலும் அமைந்துள்ளது. இந்த அமைப்பு, யானா ஆற்றின் வலது துணை ஆறான படகைக்காவின் பெயரால் அழைக்கப்படுகிறது. 1960களில் சுற்றியுள்ள காடுகள் அழிக்கப்பட்ட பிறகு, உருகும் நிரந்தர உறைபனி காரணமாக இந்த நிலம் மூழ்கத் தொடங்கிதாகவும், மேலும் வெள்ளப்பெருக்கும் பள்ளத்தின் விரிவாக்கத்திற்கு பங்களித்ததாகவும், பள்ளத்தின் விளிம்பைச் சுற்றியுள்ள சேற்றில் புதைப்பட்ட பனியுக பழங்கால புதைபடிவங்களை ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்துள்ளனர்.இந்தப் பள்ளத்தில் தொடர்ந்து நிலச்சரிவுகள் ஏற்படுவதாலும், நிரந்தர உறைபனி தொடர்ந்து உருகி வருவதாலும், விளிம்பு மிகவும் நிலையற்றதாக உள்ளது. மேலும் இந்தப் பள்ளம் தற்போது அளவு அதிகரித்து வருவதாகவும் கருதப்படுகிறது.[1][3][4]

சில நேரங்களில் ஒரு திருக்கை மீன் அல்லது தலைப்பிரட்டை போல விவரிக்கப்படும் படகைக்கா பள்ளம், சைபீரியாவில் விரிவடைந்து வரும் உலகின் மிகப்பெரிய நிரந்தர பனிப் பள்ளம் ஆகும். கடந்த 60 ஆண்டுகளில் தொடர்ச்சியான காட்சியை உருவாக்க, 1960 களில் சேகரிக்கப்பட்ட வகைப்படுத்தப்படாத செயற்கைக்கோள் படங்கள் முதல் லாண்ட்சட் மற்றும் ஐரோப்பாவின் கோப்பர்நிக்கசு சென்டினல்-2 செயற்கைக் கோளிலிருந்து தற்போதைய பன்நிறைமாலைக் கூறாக்க உணரியின் படங்கள் வரை பல செயற்கைக்கோள்கள் பள்ளத்தின் வளர்ச்சியைப் பதிவு செய்துள்ளன.[5]

முக்கியத்துவம்

[தொகு]

படகைக்கா பள்ளத்தாக்கு சுவரில் வெளிப்படக்கூடிய ஒவ்வொரு அடுக்கும் காலப்போக்கில் எடுக்கப்பட்ட ஒரு ஒளிப்படம் போன்றது, இது விஞ்ஞானிகள் கடந்த கால காலநிலையைப் புரிந்துகொள்ள உதவுகிறது. அடிப்பகுதியில் வெளிப்படும் நிரந்தர உறைபனி அடுக்குகள் 650,000 ஆண்டுகள் பழமையானதாக இருக்கலாம். பள்ளத்தாக்கில் மம்மியிடப்பட்ட வனவிலங்குகளையும் விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர். 2018 ஆம் ஆண்டில், அழிந்துபோன குதிரை இனத்தின் 42,000 ஆண்டுகள் பழமையான குட்டியின் எச்சங்கள் கண்டுபிடிக்கப்பட்டன. மேலும் உறைந்த நிரந்தர உறைபனி மண் உருகும்போது, ​​அவை புவி வெப்பமடைதலைத் தூண்டும் [பைங்குடில் விளைவு|பசுமை இல்ல வாயுக்களான கார்பனீராக்சைடு, மீத்தேன் மற்றும் நைட்ரசு ஆக்சைடு வெளியிடுகின்றன.[5]

வெளி இணைப்புகள்

[தொகு]

சான்றுகள்

[தொகு]
  1. 1.0 1.1 "Batagaika Crater Expands". earthobservatory.nasa.gov (ஆங்கிலம்) - 2017. Retrieved 2025-11-23.
  2. Earth’s ‘Gateway to Hell’ is growing - Jun 4, 2024
  3. "Siberia's 'Doorway To The Underworld' Is Rapidly Growing In Size". www.forbes.com (ஆங்கிலம்) - Feb 28, 2017. Retrieved 2025-11-23.
  4. [https://www.sciencealert.com/siberian-doorway-to-the-underworld-so-huge-millennia-old-forests-and-carcasses-climate-change There's a 'Doorway to The Underworld' in Siberia So Big It's Uncovered Ancient Forests - 23 February 2018 ByFiona MacDonald]
  5. 5.0 5.1 "Batagaika Crater, Russia". www.forbes.com (ஆங்கிலம்) - 2025. Retrieved 2025-11-24.
"https://ta.wikipedia.org/w/index.php?title=படகைக்கா_பள்ளம்&oldid=4412298" இலிருந்து மீள்விக்கப்பட்டது