படகு மெயில் விரைவுத் தொடருந்து

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
படகு மெயில் விரைவுவண்டி
Boat Mail Express with a TNP WDM3A
கண்ணோட்டம்
வகைவிரைவுந்து
நிகழ்நிலைஇயங்கு நிலை
நிகழ்வு இயலிடம்தமிழ்நாடு
முதல் சேவை24 பெப்ரவரி 1914; 110 ஆண்டுகள் முன்னர் (1914-02-24)
நடத்துனர்(கள்)தென்னக இரயில்வே
வழி
தொடக்கம்Chennai Egmore (MS)
இடைநிறுத்தங்கள்22
முடிவுRameswaram (RMM)
ஓடும் தூரம்665 km (413 mi)
சராசரி பயண நேரம்14.00 மணி நேரம்
சேவைகளின் காலஅளவுதினசரி
தொடருந்தின் இலக்கம்16101/16102
பயணச் சேவைகள்
வகுப்பு(கள்)முதல் வகுப்பு குளிர்சாதன வசதி, இரண்டாம் வகுப்பு குளிர்சாதன வசதி, மூன்றாம் வகுப்பு குளிர்சாதன வசதி, படுக்கை வசதி, முன்பதிவற்ற இருககை வசதி
இருக்கை வசதிஆம்
படுக்கை வசதிஆம்
உணவு வசதிகள்இல்லை
காணும் வசதிகள்பெரிய சன்னல்கள்
பொழுதுபோக்கு வசதிகள்இல்லை
தொழில்நுட்பத் தரவுகள்
சுழலிருப்புMS-VM (WAP 7/WAP 4, AJJ/RPM), VM-RMM (TNP WDM 3A/WDM-2)
பாதை1,676 mm (5 ft 6 in)
மின்சாரமயமாக்கல்25 kV AC, 50 Hz
வேகம்47 km/h (29 mph) average with halts
வழிகாட்டுக் குறிப்புப் படம்

இந்தோ-சிலோன் எக்ஸ்பிரஸ் என்று அழைக்கப்படும் படகு மெயில் விரைவுத் தொடருந்து, இந்திய இரயில்வேயின் தெற்கு ரயில்வே பிரிவில் இயக்கப்படும் ஒரு தொடருந்து ஆகும். இது சென்னை எழும்பூரில் மாலை 7.15 மணிக்கு புறப்பட்டு, அடுத்த நாள் காலை 09:25 மணிக்கு ராமேஸ்வரம் வந்தடைகிறது.

வரலாறு[தொகு]

Passengers changing their mode of journey at Dhanushkodi

செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர், சிதம்பரம், மயிலாடுதுறை, கும்பகோணம், தஞ்சாவூர், திருச்சிராப்பள்ளி, புதுக்கோட்டை, காரைக்குடி, சிவகங்கை மற்றும் ராமநாதபுரம் வழியாக சென்னை எழும்பூர் மற்றும் தனுஷ்கோடி இடையே இயக்கப்பட்டு வருகிறது. இந்தத் தொடருந்தின் பெயர் 19 ஆம் நூற்றாண்டின் தமிழ்நாடு மற்றும் ஸ்ரீலங்கா (பின்னர் இலங்கை) இடையே அஞ்சல் சேவையை நினைவூட்டுகிறது. இது இந்திய இரயில்வேயின் மிக உயர்ந்த மதிப்புமிக்க தொடருந்துகளில் ஒன்றாகும். இது 2014 ஆம் ஆண்டில் 100 ஆண்டுகள் சேவையை நிறைவு செய்தது.[1]

இழுவை[தொகு]

தற்போது ராமேஸ்வரம்-திருச்சி இடையேயான பிரிவு WAPM3A / 2 டீசல் எஞ்சின் லோகோ மற்றும் திருச்சி, சென்னை எழும்பூருக்கு WAP7 எலக்ட்ரிக் எஞ்சின் லோகோ மூலம் இயக்கப்படுகிறது[2]. அதே வாகனங்களின் வகைகள் திரும்ப பயணத்தில் பயன்படுத்தப்படுகின்றன. திருச்சிராப்பள்ளி மற்றும் தாம்பரம் இடையே, இந்த ரயிலின் அதிகபட்ச வேகம் 110 கிமீ / மணி ஆகும்.

Boatmail Express halting at a station

பெட்டிகள் விவரம்[தொகு]

இந்தத் தொடருந்து 19 பெட்டிகளால் ஆனது. தினமும் இயங்கி 667 கிமீ (414 மைல்) தொலைவு பயணிக்கிறது. பயணத்தின் அதிகபட்ச வேகம் 110 கிமீ / மணி ஆகும்.

மேற்கோள்கள்[தொகு]

  1. Saqaf, Syed Muthahar (June 14, 2010). "'Boat Mail' to run on main line from August 1". Archived from the original on ஜூன் 18, 2014. பார்க்கப்பட்ட நாள் ஜூன் 29, 2017. {{cite web}}: Check date values in: |access-date= and |archivedate= (help)
  2. "16102/Boat Mail(Rameswaram Express) - Rameswaram/RMM to Chennai Egmore/MS". பார்க்கப்பட்ட நாள் November 11, 2015.