படகுமெயில் விரைவுத் தொடருந்து

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

போட்மெயில் எக்ஸ்பிரஸ் இந்திய – இலங்கை எக்ஸ்பிரஸ் எனவும் அறியப்படும் விரைவு ரயில் சேவையாகும். இது தென்னிந்திய ரயில்வேயினால் செயல்படுத்தப்படும் ரயில்சேவை. இது முதலில் சென்னை எழும்பூர் முதல் தனுஷ்கோடி வரை செயல்பட்டது. தற்போது சென்னை எழும்பூர் முதல் இராமேஸ்வரம் வரை செயல்படுகிறது. இந்த வழித்தடத்தினில் உள்ள திருச்சிராப்பள்ளி, செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர், சிதம்பரம், கும்பகோணம், தஞ்சாவூர், புதுக்கோட்டை, காரைக்குடி, சிவகங்கை மற்றும் இராமநாதபுரம் ஆகிய ரயில் நிலையங்களை முக்கிய நிறுத்தங்களாகக் கொண்டுள்ளது. 19 ரயில் பெட்டிகள் கொண்ட இந்த ரயில் சேவை தினசரி செயல்படும் ரயில் சேவையாகும். இந்திய ரயில்வேயின் பெருமைக்குரிய ரயில் சேவைகளில் இதுவும் ஒன்று. கடந்த 2014 ஆம் ஆண்டின் மூலம், தனது நூறு ஆண்டு ரயில் சேவையினை போட்மெயில் ரயில் சேவை பூர்த்தி செய்துள்ளது.[1]

வழிப்பாதை மற்றும் நிறுத்தங்களுக்கான நேரங்கள்[தொகு]

எண் நிலையத்தின்

பெயர் (குறியீடு)

வரும்

நேரம்

புறப்படும்

நேரம்

நிற்கும்

நேரம் (நிமிடங்கள்)

கடந்த

தொலைவு (கிலோ மீட்டர்)

நாள் பாதை
1 சென்னை [2]

எழும்பூர் (MS)

தொடக்கம் 21:40 0 0 கி.மீ 1 1
2 தாம்பரம்

(TBM)

22:04 22:05 1 நிமி 25 கி.மீ 1 1
3 செங்கல்பட்டு

(CGL)

22:33 22:35 2 நிமி 56 கி.மீ 1 1
4 மேல்மருவத்தூர்

(MLMR)

23:04 23:05 1 நிமி 92 கி.மீ 1 1
5 விழுப்புரம்

சந்திப்பு (VM)

00:02 00:10 8 நிமி 159 கி.மீ 2 1
6 கடலூர்

(CUPJ)

00:59 01:00 1 நிமி 205 கி.மீ 2 1
7 சிதம்பரம்

(CDM)

01:37 01:38 1 நிமி 244 கி.மீ 2 1
8 சீர்காழி

(SY)

01:57 01:58 1 நிமி 261 கி.மீ 2 1
9 மயிலாடுதுறை

(MV)

02:33 02:35 2 நிமி 281 கி.மீ 2 1
10 கும்பகோணம்

(KMU)

03:04 03:05 1 நிமி 312 கி.மீ 2 1
11 தஞ்சாவூர்

(TJ)

03:38 03:40 2 நிமி 351 கி.மீ 2 1
12 திருச்சிராப்பள்ளி

(TPJ)

05:20 05:30 10 நிமி 401 கி.மீ 2 1
13 புதுக்கோட்டை

(PDKT)

06:24 06:25 1 நிமி 454 கி.மீ 2 1
14 செட்டிநாடு

(CTND)

06:54 06:55 1 நிமி 479 கி.மீ 2 1
15 காரைக்குடி

சந்திப்பு (KKDI)

07:10 07:15 5 நிமி 490 கி.மீ 2 1
16 தேவக்கோட்டை

சாலை (DKO)

07:20 07:21 1 நிமி 495 கி.மீ 2 1
17 கல்லால்

(KAL)

07:34 07:35 1 நிமி 508 கி.மீ 2 1
18 சிவகங்கை

(SVGA)

08:14 08:15 1 நிமி 531 கி.மீ 2 1
19 மானாமதுரை

சந்திப்பு (MNM)

08:45 08:50 5 நிமி 551 கி.மீ 2 1
20 பரமக்குடி

(PMK)

09:09 09:10 1 நிமி 575 கி.மீ 2 1
21 இராமநாதபுரம்

(RMD)

09:38 09:40 2 நிமி 611 கி.மீ 2 1
22 மண்டபம்

(MMM)

10:14 10:15 1 நிமி 648 கி.மீ 2 1
23 பாம்பன்

சந்திப்பு (PBM)

10:29 10:30 1 நிமி 654 கி.மீ 2 1
24 இராமேஸ்வரம்

(RMM)

11:45 முடிவு 0 665 கி.மீ 2 1

வண்டி எண் 16701[தொகு]

இது சென்னை எழும்பூரில் இருந்து, இராமேஸ்வரம் வரை செயல்படுகிறது. 14 மணி நேரம் மற்றும் 5 நிமிடங்கள் இதன் மொத்த பயண நேரம் ஆகும். இந்த வழித்தடத்தினில் 22 நிறுத்தங்களைக் கொண்டு செயல்படுகிறது. மணிக்கு சராசரியாக 47 கிலோ மீட்டர் வேகத்தில் சுமார் 667 கிலோ மீட்டர் தொலைவினை 14 மணி நேரம் மற்றும் 5 நிமிடங்களில் கடக்கிறது. இது சென்னை எழும்பூர் மற்றும் இராமேஸ்வரம் ஆகியவற்றிற்கு இடைப்பட்ட 122 ரயில் நிறுத்தங்களில் 22 நிறுத்தங்களை மட்டுமே கொண்டிருக்கிறது.[3]

வண்டி எண் 16702[தொகு]

இது இராமேஸ்வரத்தில் இருந்து சென்னை எழும்பூர் வரை செயல்படுகிறது. 13 மணி நேரம் 30 நிமிடங்கள் இதன் மொத்த பயண நேரம் ஆகும். இந்த வழித்தடத்தினில் 23 நிறுத்தங்களைக் கொண்டு செயல்படுகிறது. மணிக்கு சராசரியாக 49 கிலோ மீட்டர் வேகத்தில் சுமார் 667 கிலோ மீட்டர் தொலைவினை 13 மணி நேரம் 30 நிமிடங்களில் கடக்கிறது. இராமேஸ்வரம் மற்றும் சென்னை எழும்பூர் ஆகியவற்றிற்கு இடைப்பட்ட 122 ரயில் நிறுத்தங்களில் 23 நிறுத்தங்களை மட்டுமே கொண்டிருக்கிறது. புறப்படும் நேரத்திலும், சென்றடையும் நேரத்திலும் கிட்டத்தட்ட சரியாக சென்றடையும்படி செயல்பட்டு வருகிறது.[4]

குறிப்புகள்[தொகு]

  1. "Indian Railways Knowledge Portal Launched". ndtv.com. பார்க்கப்பட்ட நாள் 29 September 2015.
  2. "Boatmail Express Route". cleartrip.com. Archived from the original on 27 மே 2015. பார்க்கப்பட்ட நாள் 29 September 2015.
  3. "Chennai Egmore-Rameswaram ( Boat Mail ) Express-16701". indiarailinfo.com. பார்க்கப்பட்ட நாள் 29 September 2015.
  4. "Chennai Egmore-Rameswaram ( Boat Mail ) Express-16702". indiarailinfo.com. பார்க்கப்பட்ட நாள் 29 September 2015.