பஞ்ச பாத்திரம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

பஞ்ச பாத்திரம் எனப்படுவது இந்து சமய கோயில்களிலும், வீடுகளில் பூஜைக்கு பயன்படுத்தப்படும் பாத்திரமாகும். [1] இது ஆரம்ப காலத்தில் பஞ்சபத்ரபாத்திரம் என அழைக்கப்பட்டது. ஆயினும் இன்று பஞ்ச பாத்திரம் எனும் பெயரில் அழைக்கப்படுகின்றது. இதில் ஐவகை இலைகளை இட்டுப் பூஜைக்குப் பயன்படுத்துவர். அவையாவன துளசி, அருகு, வேம்பு, வில்வம், வன்னி என்பனவே.

உத்திரிணி கரண்டி எனப்படும் கரண்டியின் மூலமாக பஞ்ச பாத்திரத்தில் உள்ள தீர்த்த நீர் பக்தர்களுக்கு தரப்படுகிறது. பொதுவாக பஞ்ச பாத்திரம் மற்றும் உத்திரிணி கரண்டி ஆகியவை செம்பினால் செய்யப்படுகின்றன.

மகாளய அமாவாசையில் பஞ்ச பாத்திரம் ஆகியவற்றை தானம் வழங்குதலை நன்மையாக கருதுகிறார்கள். [2]

இவற்றையும் காண்க[தொகு]

ஆதாரங்கள்[தொகு]

  1. https://web.archive.org/save/http://www.dinamani.com/all-editions/edition-chennai/thiruvallur/2015/aug/27/%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%8B%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%82%E0%AE%9C%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%86%E0%AE%B0-1173313.html
  2. https://web.archive.org/save/http://www.nakkheeran.in/users/frmArticles.aspx?A=7174


"https://ta.wikipedia.org/w/index.php?title=பஞ்ச_பாத்திரம்&oldid=3694404" இலிருந்து மீள்விக்கப்பட்டது