பஞ்ச சீலம் (தத்துவம்)
Appearance
இந்தக் கட்டுரையில் மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகள் எதுவும் இல்லை. |
'பஞ்ச' என்றால் ஐந்து என்ற எண்ணைக் குறிக்கிறது. 'சீலம்' என்றால் ஒழுக்கம் என்பது பொருள். இந்த ஓழுக்கமானது, மூவகைப்படும். அவற்றில் ஒரு தத்துவத்தை, புத்தமதத்தில், பஞ்ச சீலம் என அழைக்கின்றனர். பஞ்சசீலம் என்பது புத்தமதத்தின் அடிப்படை கோட்பாடுகளாக அமைந்துள்ளது. இங்கு அக்கோட்பாடுகளின் விவரங்களைக் கீழே காணலாம்.
பஞ்ச சீலம்
[தொகு]- இல்லற வாழ்க்கையில் கடைபிடிக்க வேண்டிய ஒழுக்கங்கள் என பின்வருவன குறிக்கப்படுகின்றன. கீழ்கண்ட ஐந்து ஒழுக்கங்களைக் கொண்டதாக அமைந்துள்ளது. எனவே, இந்த ஓழுக்கங்கள் பஞ்ச சீலம் என்றழைக்கப்படுகிறது.
- ஓர் உயிரையும் கொல்லாமலும், தீங்கு செய்யாமலும் இருத்தல்.
- பிறர் பொருளைக் களவாடாது இருத்தல்.
- முறை தவறிய சிற்றின்பத்தை நீக்குதல்.
- மது வகைகளை உண்ணாது இருத்தல்.
- பொய் பேசாது இருத்தல்.
பஞ்ச சீலப் பார்வைகள்
[தொகு]- புத்தர்: "அறிவின் பயன்பாடு ஒழுக்கத்தைப் பொறுத்தது. ஒழுக்கத்திற்குப் புறம்பான அறிவு பயன் அற்றது."
- பஞ்சசீலத்தின், பொய்: திருக்குறளில் அறத்துப்பாலில் துறவற இயலில்,வாய்மை என்ற அதிகாரத்தில் பொய் பேசக்கூடாது என்பதை அழுத்தம் திருத்த மாகக் கூறும் திருவள்ளுவர்,பொய்ம்மையும், வாய்மையிடத்த புரைதீர்ந்த நன்மை பயக்குமெனின் -அதாவது பிறருக்குத் தீங்கு ஏற்படாமல் நன்மை செய்வதாக இருந்தால் பொய் பேசலாம். அந்தப் பொய் பொய்யா காது, மாறாக வாய்மை(உண்மை) என்றே கருதப்படும் என்று ஒரு விதிவிலக்கு தருகிறார். இதுவே பௌத்தத்தின் நிலைப்பாடு. அதனால்தான் பௌத்தத் துறவிகள் பொய் பேசக் கூடாது என்று சொன்ன புத்தர், இல்லறத்து மக்கள் அதை(பஞ்சசீலம்)விரும்பி ஏற்கலாம் என்றார். இதனை "பௌத்தத் துறவியும், கற்பழிக்கத் துரத்தப்பட்ட பெண்ணும்" என்ற கதை விவரிக்கிறது.
- அம்பேத்கரின் பார்வை:"பொய், காமம், களவு, மது, கொலை ஆகிய ஐந்து தீய ஒழுக்கங்களைத் தவிர்க்கும்படிப் புத்தத் துறவிகளுக்குக் கட்டளையிடும் புத்தர், அதை இல்லத்தாருக்குக் கட்டாயமாக்கவில்லை. அவர்கள் விரும்பி ஏற்கலாம் என்கிறார். இவ்வேறுபாட்டிற்கானக் காரணத்தை அவர் சொல்லவில்லை. அது மறைபொருள். அனுமானத்திற்கு உரியது. பஞ்சசீலத்தை மனிதர்களுக்குப் போதிப்பதனால் மட்டுமே, சமூகத்தில் நல்ல நெறிகளை உருவாக்கிவிட முடியாது. ஒரு குறிக்கோளுடன் செயல்படும் சமூகத்தைப் (ஆரியம்) படம் பிடித்துக் காட்டவும், அதை மக்களுக்கு உணர்த்தவும், புத்தர் முயன்றுள்ளார்."