உள்ளடக்கத்துக்குச் செல்

பஞ்ச் குணாளன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
டத்தோ
பஞ்ச் குணாளன்
தனிநபர் தகவல்
பிறந்த பெயர்குணாளன் பஞ்சாட்சரம்
Punch Gunalan Panchacharan
தேசியம்மலேசியர்
பிறப்பு(1944-02-04)4 பெப்ரவரி 1944
ஈப்போ, பேராக், மலேசியா
இறப்பு15 ஆகத்து 2012(2012-08-15) (அகவை 68)
பெட்டாலிங் ஜெயா, சிலாங்கூர், மலேசியா
விளையாட்டு
விளையாட்டுபூப்பந்து
நிகழ்வு(கள்)ஒலிம்பிக்
தென்கிழக்கு ஆசிய விளையாட்டுகள்
பொதுநலவாய விளையாட்டுக்கள்
ஆசிய விளையாட்டுப் போட்டிகள்
பதக்கத் தகவல்கள்
பூப்பந்து விளையாட்டுக்கள்
நாடு  மலேசியா
தாமஸ் கோப்பை
வெள்ளிப் பதக்கம் – இரண்டாமிடம் 1970 கோலாலம்பூர் {{{3}}}
ஆசிய விளையாட்டுப் போட்டிகள்
தங்கப் பதக்கம் – முதலிடம் 1970 பாங்காக் - இரட்டையர் {{{3}}}
தங்கப் பதக்கம் – முதலிடம் 1970 பாங்காக் - ஒற்றையர் {{{3}}}
வெண்கலப் பதக்கம் - மூன்றாமிடம் 1970 பாங்காக் - அணி {{{3}}}
பொதுநலவாய விளையாட்டுக்கள்
தங்கப் பதக்கம் – முதலிடம் 1970 எடின்பர்க் - இரட்டையர் {{{3}}}
தங்கப் பதக்கம் – முதலிடம் 1974 கிறிஸ்ட்சர்ச் - ஒற்றையர் {{{3}}}
வெண்கலப் பதக்கம் - மூன்றாமிடம் 1974 கிறிஸ்ட்சர்ச் - இரட்டையர் {{{3}}}
தென்கிழக்கு ஆசிய விளையாட்டுகள்
தங்கப் பதக்கம் – முதலிடம் 1969 யங்கூன் - ஒற்றையர் {{{3}}}
தங்கப் பதக்கம் – முதலிடம் 1969 யங்கூன் - இரட்டையர் {{{3}}}
தங்கப் பதக்கம் – முதலிடம் 1971 கோலாலம்பூர் - இரட்டையர் {{{3}}}
தங்கப் பதக்கம் – முதலிடம் 1971 கோலாலம்பூர் - அணி {{{3}}}
தங்கப் பதக்கம் – முதலிடம் 1973 சிங்கப்பூர் - ஒற்றையர் {{{3}}}
வெள்ளிப் பதக்கம் – இரண்டாமிடம் 1971 கோலாலம்பூர் - ஒற்றையர் {{{3}}}
வெள்ளிப் பதக்கம் – இரண்டாமிடம் 1973 சிங்கப்பூர் - இரட்டையர் {{{3}}}
வெள்ளிப் பதக்கம் – இரண்டாமிடம் 1973 சிங்கப்பூர் - அணி {{{3}}}
வெண்கலப் பதக்கம் - மூன்றாமிடம் 1974 சிங்கப்பூர் - கலப்பு {{{3}}}
ஆசிய சாம்பியன்ஷிப்
தங்கப் பதக்கம் – முதலிடம் 1969 மணிலா - இரட்டையர் {{{3}}}
வெள்ளிப் பதக்கம் – இரண்டாமிடம் 1969 மணிலா - ஒற்றையர் {{{3}}}
வெள்ளிப் பதக்கம் – இரண்டாமிடம் 1969 மணிலா - அணி {{{3}}}

டத்தோ பஞ்ச் குணாளன் அல்லது பஞ்ச் குணாளன் பஞ்சாட்சரம் (பிறப்பு: 4 பெப்ரவரி 1944; இறப்பு: 15 ஆகஸ்டு 2012); (மலாய்: Punch Gunalan; ஆங்கிலம்: Punch Gunalan; சீனம்: 潘奇古納蘭) என்பவர் மலேசிய விளையாட்டுத் துறை வரலாற்றில் மிகவும் புகழ்பெற்ற பூப்பந்து விளையாட்டு வீரர்.[1]

பூப்பந்து போட்டியில் விரைந்து தாக்குவதில் (Smash) மிக வல்லவராக விளங்கிய காரணத்தினால் இவருக்குப் பஞ்ச் (Punch) என்ற சிறப்பு அடைமொழி அவரின் பெயருடன் ஒட்டிக் கொண்டது. அதுவே மலேசிய ஊடகங்கள் அவருக்கு வழங்கிய சிறப்புப் பெயராகவும் மாறியது.

பொது[தொகு]

தென்கிழக்கு ஆசிய விளையாட்டுகள் (Southeast Asian Games); பொதுநலவாய விளையாட்டுக்கள் (Commonwealth Games); மற்றும் ஆசிய சாம்பியன்ஷிப் போட்டிகள் (Asian Championships); ஆகிய விளையாட்டுப் போட்டிகளில் ஆண்கள் ஒற்றையர் மற்றும் ஆண்கள் இரட்டையர் பிரிவுகளில் தங்கப் பதக்கங்களைக் வென்ற ஒரே மலேசியர் எனும் பெருமை இவரையே சாரும்.[2]

பஞ்ச் குணாளன், 1960 - 1970-ஆம் ஆண்டுகளில் பூப்பந்து விளையாட்டுத் துறையில் உலக அளவில் மலேசியாவின் புகழை உயர்த்தி நிறுத்தியவர். அந்த வகையில் தேசிய பூப்பந்து ஜாம்பவான் என்று இன்றும் போற்றப் படுகிறார்.

ஆசியப் பூப்பந்து சம்மேளனத்தின் (Asian Badminton Confederation) செயலாளராகவும்; அனைத்துலகப் பூப்பந்து பேரவையின் (International Badminton Federation) தலைவராகவும் பொறுப்பு ஏற்ற பெருமையும் இவருக்கு உண்டு. மலேசியப் பூப்பந்து சங்கத்தின் தலைவராக 1985 முதல் 1997 வரை பன்னிரண்டு ஆண்டுகள் பணியாற்றி உள்ளார்.

பூப்பந்து வாழ்க்கை[தொகு]

1970-களின் முற்பகுதியில், பஞ்ச் குணாளனும் அவரின் நண்பர் இங் பூன் பி (Ng Boon Bee) என்பவரும் இணைந்து உலகின் முன்னணி ஆண்கள் இரட்டையர் அணியாக விளையாடி வந்தார்கள்.[3] உள்நாட்டு மக்களின் கவனத்தையும் பன்னாட்டு மக்களின் பார்வையையும் ஈர்த்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

இரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும் ஆசிய விளையாட்டுப் போட்டிகளில், 1970-ஆம் ஆண்டில் தங்கம்;

நான்காண்டுக்கு ஒருமுறை நடைபெறும் பொதுநலவாய விளையாட்டுக்கள் போட்டிகளில், 1970-ஆம் ஆண்டில் தங்கம் வென்றவர்.

1998-ஆம் ஆண்டில் பொதுநலவாய விளையாட்டுக்கள் தீபத்தை, பக்கிங்காம் அரண்மனையில் இங்கிலாந்து மகாராணியார் எலிசபெத்திடம் இருந்து பெற்றுக் கொள்ளும் மிக உயரிய தகுதிப்பாட்டை இவர் பெற்று இருக்கிறார்.

அனைத்து இங்கிலாந்து பட்டம்[தொகு]

ஆசிய சாம்பியன்ஷிப் போட்டிகளில், 1969-ஆம் ஆண்டில் தங்கம்; வென்றனர். அவர்கள் இருவரும் 1971-ஆம் ஆண்டில், உலகப்புகழ் அனைத்து இங்கிலாந்து (All England Open Badminton Championships) பட்டத்தையும் கைப்பற்றினர்.

1970-இல் தாமஸ் கோப்பை இறுதிப் போட்டிக்குச் சென்றதன் மூலம் மலேசியாவை உலக அளவில் அறியச் செய்தார். 1974-இல் அனைத்து இங்கிலாந்து ஒற்றையர் இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றார். இருப்பினும் இறுதி ஆட்டங்களில் உலகின் முதல்தர ஆட்டக்காரர் ரூடி அர்த்தோனோவிடம் தோல்வியுற்றார்.[4]

ஆசிய இளைஞர் பூப்பந்து போட்டி[தொகு]

1960-ஆம் ஆண்டில் நெகிரி செம்பிலான் மாநிலத்தில் நடந்த ஒரு பூப்பந்து போட்டியில் முதன் முதலாக வாகையர் பட்டத்தை வென்று பூப்பந்து துறையில் பெயர் பதித்தார்.[5]

பின்னர் 1962-ஆம் ஆண்டில் கோலாலம்பூரில் நடந்த ஆசிய இளைஞர் பூப்பந்து போட்டியில் வென்றதன் மூலமாக நாட்டின் நம்பிக்கை நட்சத்திரமாக மிளிரத் தொடங்கினார்.[6]

பூப்பந்து வாகையர் பஞ்ச் குணாளன்[தொகு]

பத்தாண்டுகள் கழித்து 1970-ஆம் ஆண்டு எடின்பர்க் மாநகரில் நடந்த பொதுநலவாய விளையாட்டுக்கள் போட்டியில் தங்கப் பதக்கம் வென்று சாதனைப் படைத்தார். அதே ஆண்டில் பாங்காக்கில் நடந்த ஆசிய விளையாட்டுகள் போட்டியில் தங்கம் வென்றார்.[7]

பின்னர் 1971-ஆம் ஆண்டில் தாமஸ் கோப்பை போட்டியில் இரட்டையர் பிரிவில் வாகையர் பட்டத்தை வென்றார். 1974-இல் நியூசிலாந்து நாட்டில் நடந்த பொதுநலவாய விளையாட்டுக்கள் போட்டியில் தனியாள் பிரிவில் தங்கமும் இரட்டையர் பிரிவில் வெண்கலமும் வெற்றி கொண்டு தம் திறனைப் பறைசாற்றினார்.[7]

மலேசியச் சாதனையாளர் விருது[தொகு]

பூப்பந்து விளையாட்டுத் துறையில் இவருடைய சாதனைகளுக்கு மதிப்பளித்து 1969, 1974 ஆகிய இரண்டு ஆண்டுகளில் மலேசிய அரசாங்கம் இவருக்கு மலேசியாவின் சிறந்த விளையாட்டு வீரர் விருது வழங்கிச் சிறப்பு செய்தது.[7]

பூப்பந்து விளையாட்டுத் துறையில் இருந்து ஓய்வுபெற்ற பின்னர் இவர் தம்முடைய பட்டறிவையும் விளையாட்டு நுணுக்கங்களையும் இளம் விளையாட்டாளர்களுக்குப் பயிற்றுவிக்கத் தொடங்கினார்.

மலேசிய பூப்பந்து கழகத்தின் பயிற்றுனாராகப் பணியாற்றி 1992-ஆம் ஆண்டில் தாமஸ் கோப்பையைக் கைப்பற்றும் அளவுக்கு நாட்டின் பூப்பந்து குழுவினரை உருவாக்கிய பெருமை இவரையே சாரும். அனைத்துலகப் பூப்பந்து சம்மேளனத்தின் (International Badminton Federation) (இப்போது உலகப் பூப்பந்துக் கூட்டமைப்பு - Badminton World Federation) அதிகாரியாகவும் பணியாற்றி உள்ளார்.[8]

மலேசிய நாட்டின் புகழ்பெற்ற பூப்பந்து வீரர்களான இரசிட் சிடேக், இரசிவ் சிடேக், பூ கொக் கியாங் போன்றோர் பஞ்ச் குளாளனிடம் பயிற்சி பெற்றவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

சாதனைகள்[தொகு]

ஒலிம்பிக் விளையாட்டுகள்[தொகு]

ஆண்கள் இரட்டையர்

ஆண்டு இடம் இணையர் எதிர்த் தரப்பு புள்ளிகள் முடிவு
ஒலிம்பிக் 1972 ஒலிம்பியா பூங்கா, முனிச், மேற்கு ஜெர்மனி மலேசியா இங் பூன் பி இந்தோனேசியா ஆதி சந்திரா
இந்தோனேசியா கிறிஸ்டியன் ஹதினாட்டா
4–15, 15–2, 11–15 வெள்ளி

ஆசிய விளையாட்டுகள்[தொகு]

ஆண்கள் ஒற்றையர்

ஆண்டு இடம் எதிர்த் தரப்பு புள்ளிகள் முடிவு
ஆசிய விளையாட்டுகள் 1970 கிட்டிகச்சோர்ன் மைதானம், பாங்காக், தாய்லாந்து இந்தோனேசியா முல்ஜாடி 4–15, 15–3, 15–12 Gold தங்கம்

ஆண்கள் இரட்டையர்

ஆண்டு இடம் இணையர் எதிர்த் தரப்பு புள்ளிகள் முடிவு
ஆசிய விளையாட்டுகள் 1970 கிட்டிகச்சோர்ன் மைதானம், பாங்காக், தாய்லாந்து மலேசியா இங் பூன் பி சப்பான் சுஞ்சி ஓமா
சப்பான் சொய்ச்சி தகானு
5–15, 15–8, 15–7 Gold தங்கம்

ஆசிய சாம்பியன்ஷிப்[தொகு]

ஆண்கள் ஒற்றையர்

ஆண்டு இடம் எதிர்த் தரப்பு புள்ளிகள் முடிவு
ஆசியப் பூப்பந்து சாம்பியன்சிப் 1969 ரிசால் நினைவு விளையாட்டு அரங்கம், மணிலா, பிலிப்பைன்ஸ் இந்தோனேசியா முல்ஜாடி 11–15, 3–15 Silver 'வெள்ளி'

ஆண்கள் இரட்டையர்

ஆண்டு இடம் இணையர் எதிர்த் தரப்பு புள்ளிகள் முடிவு
ஆசியப் பூப்பந்து சாம்பியன்சிப் 1969 ரிசால் நினைவு விளையாட்டு அரங்கம், மணிலா, பிலிப்பைன்ஸ் மலேசியா இங் பூன் பி சப்பான் இப்பி கோஜிமா
சப்பான் உக்கினோரி
15–8, 5–15, 15–11 Gold தங்கம்

தென்கிழக்கு ஆசிய விளையாட்டுகள்[தொகு]

ஆண்கள் இரட்டையர்

ஆண்டு இடம் இணையர் எதிர்த் தரப்பு புள்ளிகள் முடிவு
1969 யங்கோன், மியான்மர் மலேசியா உய் செங் ஹோ தாய்லாந்து தோங்சாய் போங்புல்
தாய்லாந்து சிங்கா சிரிபான்தெங்
Gold தங்கம்
1971 தேசிய அரங்கம் (மலேசியா), கோலாலம்பூர், மலேசியா மலேசியா இங் பூன் பி மலேசியா இங் தாட் வாய்
மலேசியா ஓ கிம் கூய்
Gold தங்கம்
தென்கிழக்கு ஆசிய விளையாட்டுகள் 1973 சிங்கப்பூர் பூப்பந்து அரங்கம், சிங்கப்பூர் மலேசியா டோமினிக் சூங் தாய்லாந்து சங்கோப் ரத்தினசோர்ன்
தாய்லாந்து பண்டிட் ஜெயன்
10–15, 15–18 Silver வெள்ளி

ஆண்கள் ஒற்றையர்

ஆண்டு இடம் எதிர்த் தரப்பு புள்ளிகள் முடிவு
1969 யாங்கோன், மியான்மர் தாய்லாந்து சூன் அகயாபிசுட் Gold தங்கம்
1971 தேசிய அரங்கம் (மலேசியா), கோலாலம்பூர், மலேசியா மலேசியா தான் அயிக் குவாங் 12–15, 11–15 Silver 'வெள்ளி
தென்கிழக்கு ஆசிய விளையாட்டுகள் 1973 சிங்கப்பூர் பூப்பந்து அரங்கம் சிங்கப்பூர் மலேசியா தான் அயிக் மோங் 15–8, 15–11 Gold தங்கம்

கலப்பு இரட்டையர்

ஆண்டு இடம் இணையர் எதிர்த் தரப்பு புள்ளிகள் முடிவு
தென்கிழக்கு ஆசிய விளையாட்டுகள் 1973 சிங்கப்பூர் பூப்பந்து அரங்கம் சிங்கப்பூர் மலேசியா சில்வியா இங் சிங்கப்பூர் இயோ ஆ செங்
சிங்கப்பூர் தான் சோர் கியாங்
15–5, 15–6 Bronze வெண்கலம்

பொதுநலவாய விளையாட்டுக்கள்[தொகு]

ஆண்கள் இரட்டையர்

ஆண்டு இடம் இணையர் எதிர்த் தரப்பு புள்ளிகள் முடிவு
பொதுநலவாய விளையாட்டுக்கள் 1970 எடின்பர்க், ஸ்காட்லாந்து மலேசியா இங் பூன் பி மலேசியா இங் தாட் வாய்
மலேசியா தான் சூன் ஓய்
15–3, 15–3 Gold தங்கம்
பொதுநலவாய விளையாட்டுக்கள் 1974 கௌல்ஸ் அரங்கம், கிறிஸ்ட்சர்ச், நியூசிலாந்து மலேசியா டோமினிக் சூங் இசுக்காட்லாந்து ராபர்ட் எஸ். மெக்கோயிக்
இசுக்காட்லாந்து பிரேசர் கோவ்
17–18, 15–5, 15–7 Bronze வெண்கலம்

ஆண்கள் ஒற்றையர்

ஆண்டு இடம் எதிர்த் தரப்பு புள்ளிகள் முடிவு
பொதுநலவாய விளையாட்டுக்கள் 1974 கௌல்ஸ் அரங்கம், கிறிஸ்ட்சர்ச், நியூசிலாந்து கனடா ஜேமி பால்சன் 15–1, 15–6 Gold தங்கம்

அனைத்துலகப் போட்டிகள்[தொகு]

ஆண்கள் இரட்டையர்

ஆண்டு இடம் இணையர் எதிர்த் தரப்பு புள்ளிகள் முடிவு
1966 டச்சு பூப்பந்து போட்டி மலேசியா ஊன் சோங் ஆவ் டென்மார்க் ஆகே நீல்சன்
டென்மார்க் எலோ ஆன்சன்
15–4, 15–4 1st வெற்றியாளர்
1968 வட இந்தியா பூப்பந்து போட்டி மலேசியா தான் இ கான் இந்தோனேசியா ரூடி அர்த்தோனோ
இந்தோனேசியா இந்திராத்தினோ
15–3, 6–15, 7–15 2nd இரண்டாம் இடம்
1969 சிங்கப்பூர் பெஸ்தா பூப்பந்து போட்டி மலேசியா இங் பூன் பி இந்தோனேசியா Indratno
இந்தோனேசியா மிந்தராஜா
15–5, 15–5 1st வெற்றியாளர்
1969 அமெரிக்க ஓப்பன் பூப்பந்து போட்டி மலேசியா இங் பூன் பி சப்பான் இப்பெய் கொஜிமா
தாய்லாந்து சன்னரோங் ரத்தன் செங்சுவாங்
15–3, 15–7 1st வெற்றியாளர்
1971 பெல்ஜியன் அனைத்துலக பூனா ஓப்பன் பூப்பந்து போட்டி மலேசியா இங் பூன் பி மலேசியா லீ கோக் பெங்
மலேசியா லிம் சூக் கோங்
15–4, 15–5 1st வெற்றியாளர்
1971 ஜெர்மன் பூப்பந்து போட்டி மலேசியா இங் பூன் பி செருமனி ரோலாண்டு மேவால்டு
செருமனி வில்லி பிராவுன்
15–12, 15–8 1st வெற்றியாளர்
1971 டென்மார்க் பூப்பந்து போட்டி மலேசியா இங் பூன் பி இந்தோனேசியா ரூடி அர்த்தோனோ
இந்தோனேசியா இந்திரா குணவான்
11–15, 15–4, 15–8 1st வெற்றியாளர்
1971 அனைத்து இங்கிலாந்து சாம்பியன்சிப் மலேசியா இங் பூன் பி இந்தோனேசியா ரூடி அர்த்தோனோ
இந்தோனேசியா இந்திரா குணவான்
15–5, 15–3 1st வெற்றியாளர்
1971 கனடிய ஓப்பன் பூப்பந்து போட்டி மலேசியா இங் பூன் பி தாய்லாந்து எபி காஞ்சனாரபி
தாய்லாந்து சன்னரோங் ரத்தன் செங்சுவாங்
15–0, 15–11 1st வெற்றியாளர்
1971 அமெரிக்கா ஓப்பன் பூப்பந்து போட்டி மலேசியா இங் பூன் பி ஐக்கிய அமெரிக்கா டொனால்டு டோன் பாவுப்
ஐக்கிய அமெரிக்கா ஜேம்ஸ் ரிச்சர்ட் போல்
2–15, 18–13, 15–7 1st வெற்றியாளர்
1972 டென்மார்க் ஓப்பன் மலேசியா இங் பூன் பி தாய்லாந்து சங்கோப் இரத்தின சோர்ன்
தாய்லாந்து பண்டிட் ஜெயன்
15–6, 15–6 1st வெற்றியாளர்
1972 ஜெர்மன் ஓப்பன் பூப்பந்து போட்டி மலேசியா இங் பூன் பி இங்கிலாந்து டெரெக் தால்போட்
இங்கிலாந்து எலியோட் ஸ்டுவார்ட்
15–9, 15–12 1st வெற்றியாளர்
1972 சிங்கப்பூர் ஓப்பன் பூப்பந்து போட்டி மலேசியா இங் பூன் பி மலேசியா தான் அயிக் குவாங்
மலேசியா தான் அயிக் மோங்
11–15, retired 2nd இரண்டாம் இடம்
1974 ஸ்காட்லாந்து ஓப்பன் பூப்பந்து போட்டி டென்மார்க் தோம் பெச்சர் இங்கிலாந்து மைக் டிரெட்கெட்
இங்கிலாந்து ரேய் ஸ்டீவன்ஸ்
1st வெற்றியாளர்

ஆண்கள் ஒற்றையர்

ஆண்டு இடம் எதிர்த் தரப்பு புள்ளிகள் முடிவு
1974 அனைத்து இங்கிலாந்து சாம்பியன்சிப் இந்தோனேசியா ரூடி அர்த்தோனோ 15–8, 9–15, 10–15 2nd இரண்டாம் இடம்

குடும்ப வாழ்க்கை[தொகு]

இவர் தன் தொடக்கக் கல்வியை நெகிரி செம்பிலான், சிரம்பான் கிங் ஜார்ஜ் (KGV) பள்ளியில் பெற்றார். பள்ளியின் தலைமை மாணவராக விளங்கியவர். படிப்பில் சிறந்து விளங்கினார்.

இங்கிலாந்தில் பொறியியல் பட்டம் பெற்றவர். மலேசிய மின்சாரத் துறை வாரியத்தின் உதவித் தொகையைப் பெற்று இங்கிலாந்திற்கு சென்றவர்.

பஞ்ச் குணாளனின் மனைவியின் பெயர் விஜயகுமாரி. ஒரே மகன் ரோஷன் குணாளன். இவர் எலும்பு மூட்டு மருத்துவராகச் சேவை செய்கிறார்.[9][10]

விருதுகள்[தொகு]

மலேசியாவின் விருதுகள்[தொகு]

 •  மலேசியா :
  • மலேசிய அரச குடும்பத்தின் விசுவாச விருது (B.S.D.) (1988)
  • மலேசிய அரச குடும்பத்தின் விசுவாச விருது (P.S.D.) - டத்தோ (1992)

இறப்பு[தொகு]

பஞ்ச் குணாளன் புற்றுநோயால் பாதிக்கப்பட்டு 2012 ஆகத்து 15-ஆம் தேதி, காலை மணி 6.20-க்கு, கோலாலாம்பூர் சுபாங் ஜெயா மருத்துவமனையில் காலமானார். அப்போது அவருக்கு வயது 68.[11][12]

மேற்கோள்கள்[தொகு]

 1. "Malaysians remember Punch Gunalan". The Star (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 18 March 2022.
 2. "Punch Gunalan answers your 10 questions - Business News | The Star Online". www.thestar.com.my. பார்க்கப்பட்ட நாள் 2017-01-16.
 3. "Boon Bee recalls the joy of his partnership with Punch - Other Sports | The Star Online". www.thestar.com.my. பார்க்கப்பட்ட நாள் 2017-01-16.
 4. "Hartono remembers Malaysian great as an uncompromising competitor - Other Sports | The Star Online". www.thestar.com.my. பார்க்கப்பட்ட நாள் 2017-01-16.
 5. "Vice President of the International Badminton Federation". www.sports-chest.com. பார்க்கப்பட்ட நாள் 17 March 2022.
 6. Zhi, Zhi (23 April 2021). "Two M'sian badminton players won at the 1972 Olympics but didn't get medals. Here's why". பார்க்கப்பட்ட நாள் 18 March 2022.
 7. 7.0 7.1 7.2 "பூப்பந்து வாகையர் 'பஞ்ச்' குணாளன்". திருத்தமிழ். 15 August 2012. பார்க்கப்பட்ட நாள் 17 March 2022.
 8. "Razif: 1992 Thomas Cup winning team had all-round depth - Community | The Star Online". www.thestar.com.my. பார்க்கப்பட்ட நாள் 2017-01-16.
 9. "Lagenda Badminton Punch Gunalan Meninggal Dunia - Sukan | mStar". www.mstar.com.my (in ஆங்கிலம்). 15 August 2012. பார்க்கப்பட்ட நாள் 18 March 2022.
 10. Chee, Kee Hua (15 August 2012). "BYE, DATUK PUNCH GUNALAN...AND THANK YOU!". Kee Hua Chee Live!. பார்க்கப்பட்ட நாள் 18 March 2022.
 11. "Punch Gunalan passes away". பார்க்கப்பட்ட நாள் 15 August 2012.
 12. "Badminton legend Datuk Punch Gunalan passed away". peraktoday.com.my. 15 August 2012. பார்க்கப்பட்ட நாள் 18 March 2022.
"https://ta.wikipedia.org/w/index.php?title=பஞ்ச்_குணாளன்&oldid=3947440" இலிருந்து மீள்விக்கப்பட்டது