பஞ்சாப் வேளாண் பல்கலைக்கழக விளையாட்டரங்கம்
பஞ்சாப் வேளாண் பல்கலைக்கழக விளையாட் ரங்கம்Punjab Agricultural University Stadium | |
---|---|
பஞ்சாப் வேளாண் பல்கலைக்கழக மைதானம் | |
முழு பெயர் | பஞ்சாப் வேளாண் பல்கலைக்கழக விளையாட்டு வளாகம் |
இடம் | லூதியானா, இந்தியா |
எழும்பச்செயல் ஆரம்பம் | 1962 |
எழும்புச்செயல் முடிவு | 1989 |
திறவு | 1989 |
சீர்படுத்தது | 2001 |
பரவு | 2001 |
உரிமையாளர் | பஞ்சாப் வேளாண் பல்கலைக்கழகம் |
ஆளுனர் | பஞ்சாப் வேளாண் பல்கலைக்கழகம் |
குத்தகை அணி(கள்) | |
அமரக்கூடிய பேர் | 10,000 |
பஞ்சாப் வேளாண் பல்கலைக்கழக விளையாட்டரங்கம் (Punjab Agricultural University Stadium) இந்தியாவின் பஞ்சாப் மாநிலத்திலுள்ள லூதியானா நகரில் அமைந்துள்ள விவசாய பல்கலைக்கழக வளாகத்தில் இருக்கிறது. இதுவொரு பல்நோக்கு அரங்கமாகும். இந்த அரங்கம் பஞ்சாப் வேளாண் பல்கலைக்கழகத்திற்கு சொந்தமானது. துடுப்பாட்டம், கால்பந்து, வளைகோல் பந்தாட்டம், போன்ற பல்வேறு விளையாட்டுகளுக்கான வசதிகள் இங்குள்ளன. வளைகோல் பந்தாட்டத்திற்காக செயற்கையாக உருவாக்கப்பட்ட புல்வெளி ஆடுகளம் ஒன்று இங்குள்ளது. இதனால் பல்வேறு வளைகோல் பந்தாட்டப் போட்டிகள் இங்கு நடைபெறுகின்றன.[1] இதை தவிர நீச்சல் குளம் மற்றும் மிதிவண்டியோட்ட அரங்கு போன்றவை இங்கு இடம்பெற்றுள்ளன.[2][3]
கூடைப்பந்தாட்டம், இறகுப்பந்தாட்டம், சீருடற்பயிற்சிகள், எறிபந்தாட்டம், கைப்பந்தாட்டம், டென்னிசு, மேசைப்பந்தாட்டம், பாரம் தூக்குதல் மற்றும் சடுகுடு போன்ற விளையாட்டுகள் நடைபெறுவதற்கான உள் விளையாட்டரங்கமும் இங்குள்ளது. ஓர் இறுதிப் போட்டி உட்பட 10 பத்து ரஞ்சிக் கோப்பை போட்டிகள் இப் பல்கலைக்கழக விளையாட்டரங்கில் நடைபெற்றுள்ளன. இராணி கோப்பை போட்டிகள் 1987 முதல் 1999 வரை இங்கு நடத்தப்பட்டன. [4]. 10 பட்டியல் அ வகை துடுப்பாட்டங்களும் இங்கு நடந்துள்ளன.[5]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "Hockey Ground". Archived from the original on 2015-08-21. பார்க்கப்பட்ட நாள் 2020-12-01.
- ↑ "District Sports Office". Archived from the original on 9 August 2013. பார்க்கப்பட்ட நாள் 2 June 2015.
- ↑ "Punjab's tribute to hockey wizard Dhyan Chand". Archived from the original on 2018-01-20. பார்க்கப்பட்ட நாள் 2020-12-01.
- ↑ First-class matches
- ↑ List A matches