பஞ்சாக்ரி அருவி மற்றும் ஆற்றல் பூங்கா

ஆள்கூறுகள்: 27°21′03″N 88°36′13″E / 27.35083°N 88.60361°E / 27.35083; 88.60361
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
பஞ்சாக்ரி அருவி மற்றும் பூங்கா
Ban Jhakri Falls - Gangtok.jpg
பஞ்சாக்ரி அருவி
பஞ்சாக்ரி அருவி மற்றும் ஆற்றல் பூங்கா is located in சிக்கிம்
பஞ்சாக்ரி அருவி மற்றும் ஆற்றல் பூங்கா
Map
அமைவிடம்காங்டாக், சிக்கிம், இந்தியா
ஆள்கூறு27°21′03″N 88°36′13″E / 27.35083°N 88.60361°E / 27.35083; 88.60361
மொத்த உயரம்100 அடி

பஞ்சாக்ரி அருவி மற்றும் ஆற்றல் பூங்கா (Banjhakri Falls and Energy Park) என்பது இந்தியாவின் சிக்கிம் மாநிலம் கேங்டாக் அருகில் உள்ள பொழுதுபோக்கு மையம் மற்றும் சுற்றுலாத் தலம் ஆகும். பூங்காவில் உள்ள சிலைகளும் காட்சிப்பொருட்களும் இந்த அருவியினைச் சுற்றியுள்ள குகைகளில் வாழும் ஆவிகளை வணங்கும் பான் ஜாக்ரி அல்லது பாரம்பரிய மருத்துவரான ஷாமானிக் குணப்படுத்துபவர்களைக் குறிப்பதாக உள்ளது. இதில் பான் என்றால் "காடு" என்றும், ஜாக்ரி என்றால் "குணப்படுத்துபவர்" என்றும் பொருள்படுகிறது.[1] [2]

இந்த பூங்கா காங்டாக்கிலிருந்து 7 கிலோமீட்டர்கள் (4.3 mi) தொலைவில் வடக்கு சிக்கிமின் தேசிய நெடுஞ்சாலை 31இல் இராணுவ முகாமிற்கு அடுத்து அடர்வனப் பரப்பில் அமைந்துள்ளது.[3]

அமைப்பு[தொகு]

பஞ்சாக்ரி அருவியானது உயரமான இடத்தில் உள்ள ஊற்றுகளிலிருந்து தோன்றிய இயற்கையாக அமைந்த அருவி ஆகும். இதன் உயரம் சுமார் 30 மீட்டர்கள் (98 ft) ஆகும்.[4] இந்தப் பூங்கா 2 ஏக்கர்கள் (0.81 ha) வனப்பகுதி அகற்றப்பட்டு உருவாக்கப்பட்டது. 2004ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 28ஆம் நாளன்று ரங்கா மடாலயத்திற்கு சிக்கிம் முதல்வர் பவன் குமார் சாம்லிங் வருகை தந்தபோது நீர்வீழ்ச்சியைப் பார்வையிட்டார். அச்சமயம் இந்த தீம் பார்க் கருத்தானது உருவாக்கப்பட்டது. பாரம்பரிய ஷாமானிக் நம்பிக்கைகளில் மக்களின் ஆர்வத்தைப் புதுப்பிக்க அவர் விரும்பினார். எனவே குடிமக்களிடமிருந்து பூங்காவிற்கான கருப்பொருள்களைப் பரிந்துரைக்க அழைப்பு விடுவிக்கப்பட்டது. இதன் விளைவாக சிக்கிம் மக்களின் ஷாமானிக் மரபுகளைக் கொண்டாடும் விதமாக இந்த பூங்கா உருவாக்கப்பட்டது.

பார்வையாளர்களைக் கவரும் விதமாகப் பூங்காவின் செயற்கையாக உருவாக்கப்பட்ட ஏரியின் நடுவில் டிராகன்-கேசிபாசு ஒன்று வடிவமைக்கப்பட்டுள்ளது. ஜாக்ரியின் சிலைகள்; மற்றும் சிக்கிமின் லியாம் லைமே, மங்பாஸ் மற்றும் லெப்சா மக்களின் மூதாதையர்களின் சிலைகள் வடிவமைக்கப்பட்டு காட்சிப்படுத்தப்பட்டுள்ளன. [2] [4] ஜாக்ரி, போங்திங், பெடங்பா, மற்றும் பிஜுவா ஆகியோரின் சிற்பங்கள் அறைகளில் வைக்கப்பட்டுள்ளன. நடைபாதை பாதைகள் மற்றும் நடைபாலங்கள் முதலியன அர்டெசியா, அலங்கார மரங்கள் மற்றும் மலர்களால் (ஏசர், போய் செட்டியா (மண்டியிட்ட அழகான), கமேலியா, ஆஞ்சலிகா , கைட்ரன்சியா, மற்றும் டெபுசினினே)அலங்கரிக்கப்பட்டுள்ளது.

பூங்கா நுழைவாயில்
(November 2011)
காசிபா மாடம்
(November 2011)
சாக்ரி சிலைகள்
(May 2010)

பூங்கா முழுவதும் கேசிபாசு அமைக்கப்பட்டுள்ளது. சிக்கிம் கிராமப்புற எரிசக்தி மேம்பாட்டு முகமையால் (SREDA) புதுப்பிக்கத்தக்க ஆற்றல் குறித்த காட்சிகளைக் கொண்ட அருங்காட்சியம் நிறுவப்பட்டுப் பராமரிக்கப்படுகிறது.[2] [4] சூரிய நீர் படுத்திகள், சூரிய சக்தியில் இயங்கும் வாகனம், எரிசக்தி டிரம்ஸ் உள்ளிட்ட பல புதுப்பித்தல் ஆற்றல் பற்றிய கண்காட்சிகளையும் இங்குக் காணலாம். இந்த பூங்காவில் சூரிய சக்தியால் இயங்கும் விளக்குகள் அமைக்கப்பட்டுள்ளன.

மேற்கோள்கள்[தொகு]

  1. "Banjhakri Falls and Energy Park". Sikkim Tourism Development Corporation. 12 March 2016 அன்று பார்க்கப்பட்டது.
  2. 2.0 2.1 2.2 "Bhanjhakri Falls Energy Park". Tourism and Civil Aviation Department, Government of Sikkim. 13 மார்ச் 2016 அன்று மூலம் பரணிடப்பட்டது. 12 March 2016 அன்று பார்க்கப்பட்டது. பிழை காட்டு: Invalid <ref> tag; name "Tour" defined multiple times with different content பிழை காட்டு: Invalid <ref> tag; name "Tour" defined multiple times with different content
  3. "Bakthang Waterfalls". Sikkin Tourism Development Corporation. 12 March 2016 அன்று பார்க்கப்பட்டது.
  4. 4.0 4.1 4.2 "This holiday season, enjoy a Yak Safari near Lake Tsongmo in Sikkim". Economic Times. 8 January 2015. 12 March 2016 அன்று பார்க்கப்பட்டது.