பஞ்சவடீ

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

பஞ்சவடீ, புதுச்சேரியிலிருந்து (10 கி.மீ) திண்டிவனம் செல்லும் வழியில் அமைந்துள்ள ஓர் ஊராகும். இந்த இடம் அருள்மிகு ஜயமங்கள பஞ்சமுக ஆஞ்சநேயர் திருகோயிலுக்கு புகழ் பெற்றது. இக்கோயிலிலுள்ள ஆஞ்சநேயர், ஆஞ்சநேயர், நரசிம்மர், வராஹர், ஹயகிரீவர், கருடர் ஆகிய ஐந்து முகங்களை கொண்டுள்ளார். இதில் கருடர் முகம் பின்புறம் உள்ளது.


தல சிறப்பு[தொகு]

இத்தலத்தில் உள்ள ஆஞ்சிநேயரை வழிபடுபவர்களுக்கு நரசிம்மரின் அருளால் எடுத்த காரியங்களில் வெற்றியும், லட்சுமி கடாட்சமும், ஹயக்கிரீவரின் அருளால் உண்மையான அறிவாற்றல், ஆன்மிக பலமும், வராகரின் அருளால் மனத்துணிவும், கருடனின் அருளால் அனைத்து விதமான நஞ்சின் ஆபத்து விலகும் தன்மையும், ஆஞ்சிநேயரின் அருளால் மன அமைதியும், சகல சவுபாக்கியங்களும் கிடைக்கும் என்பது நம்பிக்கை.

கோயில் அமைப்பு[தொகு]

12 ஏக்கர் நில்ப்பர்ப்பில தெற்கு பார்த்து கோயில் அமைந்துள்ளது. கோயிலில் நுழைந்தவுடன் வலதுபக்கத்தில் விநாயகரும், இடதுபக்கத்தில் ராமர், சீதை, லட்சுமணன், சத்ருகன், பரதன் ஆகியோரும் தனி சன்னிதியில் அருள்பாலிக்கின்றனர்.மூலவர் ஆஞ்சிநேயருக்கு மேல் 118 அடி கோபுரம். அதன் மீது 5 அடி உயர கலசம். மூலவர் 36 அடி உயரத்தில் நின்ற கோலம். இவருக்கு அபிஷேகம் மற்றும் அலங்கரம் செய்வதற்கு பிரமாண்டமான லிப்ட். இவருக்கு அபிஷேகம் செய்ய வேண்டுமானால் குறைந்தது 1008 லிட்டர் பால் தேவை. இங்கு 1200 கிலோ எடையுள்ள மணி உள்ளது. இதனை ஒலிக்கச்செய்தால் குறைந்தது 8 கி.மீ. தூரம் ஒலி கேட்கும். 18 மீட்டர் அகலமும்,40 மீட்டர் ஆழமும் கொண்ட பிரமாண்ட தீர்த்த கிணறு. காலை முதல் இரவு வரை தொடர்ந்து அன்னதானம்.பிரமாண்டமாக அமைக்கப்பட்டுள்ளது.

பஞ்சமுகத்திற்கான காரணம்[தொகு]

ஒரு முறை ராமருக்கும், ராவணனுக்கும் போர் நடந்தது. இதில் ராவணன் நிராயுதபாணியானான். இதனால் ராமர் ராவணனை கொல்ல மனமின்றி, 'இன்று போய் நாளை வா' என திருப்பி அனுப்பிவிட்டார். ராமர் இவ்வாறு செய்தது தன்னை திருத்துவதற்குதான் என்பதை ராவணன் உணரவில்லை. மீண்டும் ராமருடன் போர் செய்ய நினைத்த ராவணன், 'மயில் ராவணன்' என்ற மற்றொரு அசுரனது துணையுடன் போருக்கு கிள்ம்பினான். ராமரை அழிப்பதற்காக மயில் ராவணன் கொடிய யாகத்தை நடத்த திட்டமிட்டான். இந்த யாகம் நடந்தால் ராம-லட்சுமணானின் உயிருக்கு ஆபத்து ஏற்படும் என்பதை உணர்ந்த விபீஷணன், யாகத்தை தடுத்து நிறுத்த கிளம்பும் முன் நரசிம்மர், ஹயக்கிரீவர், வராகர், கருடன், ஆகியோரை வணங்கி ஆசி பெற்றார். இந்த தெய்வங்கள் அனைவரும் போரில் அனுமன் வெற்றிபெற தங்களின் உருவ வடிவின் சக்தியை அனுமனுக்கு அளித்தனர். இதன்மூலம் ஆஞ்சநேயர் பஞ்சமுகம் கொண்டு விஸ்வரூபம் எடுத்து மனித குல வாழ்விற்காக மயில் ராவணனை அழித்தார். இப்படி பஞ்ச முகத்தில் விசேஷ அவதாரம் எடுத்ததினால், பக்தர்களின் தீர்க்க முடியாத குறைகளை தீர்த்து வைப்பார் என்பது நம்பிக்கை.

ராமாயண கால மிதக்கும் கல்[தொகு]

சீதையை மீட்பதற்காக ராமர், ராமேஸ்வரத்தில் இருந்து இலங்கை சென்றபோது, சேது சமுத்திரத்தில் பாலம் அமைக்கப்பட்டது. நளன், நீலன் என்ற இரு வானரங்கள் இந்த பாலப்பணியை நடத்தின. இதில் நளன் என்பவன் தேவசிற்பியான விஸ்வகர்மாவின் மகன். விஸ்வகர்மா தன் மனைவிக்கு, "என்னைப் போலவே உனக்கொரு மகன் பிறப்பான். எனக்குரிய திறமை அனைத்தும் அவனிடமும் இருக்கும்," என வரம் கொடுத்தார். இதனால் நளன் தன் தந்தையைப்போல் சிற்ப பணியில் சிறந்து விள்ங்கினான். இவனால் கடலிலும் பாலம் கட்ட முடிந்தது. ராமருக்கு உதவி செய்ய, பாலம் கட்ட பயன்படுத்திய கற்களை மிதக்க செய்து, அசையாமல் பாதுகாத்தான் கடலரசன் சமுத்திர ராஜன். இவன் மகாலட்சுமியின் தந்தை ஆவான். எனவே சீதையை மீட்க இந்த உதவியை செய்தான் என கூறப்படுகிறாது. இப்படி ராமாயண காலத்தில் கட்டப்பட்ட பாலத்திற்கு பயன்படுத்திய மிதக்கும் கல்லின் ஒரு பகுதி இக்கோயிலில் தரிசனத்திற்கு வைக்கப்பட்டுள்ளது. எட்டு கிலோ எடையுள்ள இந்தக்கல்லை தண்ணீர் நிறைந்த ஒரு பெரிய பாத்திரத்தில் போட்டு பூக்களால் அலங்கரித்துள்ளார்கள்.

லட்டு லிங்கம்[தொகு]

ஆஞ்சிநேயர் சிவனின் அம்சம் என்பதற்கேற்ப இக்கோயிலில் 'லட்டு லிங்கம்' செய்து பக்தர்களின் தரிசனத்திற்காக வைக்கப்பட்டது. 2007 ஜனவரி 1 அன்று, புத்தாண்டை குறிக்கும் வகையில் 2007 கிலோ எடையில் லட்டு லிங்கம் செய்யப்பட்டு வழங்கப்பட்டது.

ராமர் பாதுகை[தொகு]

ராம பாத தரிசனம் என்பது விசேஸமானது. இக்கோயிலில் ராமரின் பாதுகைகள் வழிபாட்டிற்காக வைக்கப்பட்டுள்ளன. இது சுமார் 100 ஆண்டு பழமையான சந்தன மரத்தால் செய்யப்பட்டது. இதற்கு 1.25 கிலோ எடையுள்ள தங்க கவசம் போடப்பட்டுள்ளது.


பொது தகவல்கள்[தொகு]

    மூலவர்                         : ஜயமங்கள பஞ்சமுக ஆஞ்சநேயர்
    திருமேனி                       : 36 அடி உயர பிரமாண்ட திருமேனி
    ஊர்                             : பஞ்சவடீ
    மாவட்டம்                       : விழுப்புரம்
    திறப்பு நேரம்                    : காலை 7 முதல் இரவு 8 மணி வரை (இடையில் நடை அடைப்பு இல்லை)
    தொலைபேசி                    : 0413-267 1232, 267 1262, 267 8823
    அருகிலுள்ள ரயில் நிலையம்      : புதுச்சேரி, திண்டிவனம்
    அருகிலுள்ள விமான நிலையம்    : சென்னை.
"https://ta.wikipedia.org/w/index.php?title=பஞ்சவடீ&oldid=2226513" இருந்து மீள்விக்கப்பட்டது