உள்ளடக்கத்துக்குச் செல்

பஞ்சதசி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
(பஞ்சதசி (நூல்) இலிருந்து வழிமாற்றப்பட்டது)

பஞ்சதசி எனும் வடமொழி அத்வைத வேதாந்த நூலை இயற்றியவர் சிருங்கேரி சாரதா மடத்தின் 12வது ஜெகத்குருவாக இருந்த வித்யாரண்யர் ஆவார்[1]. உபநிடதங்களின் அத்வைத சாரத்தை எளிமையாக்கி வேதாந்த பிரகடனம் எனும் தலைப்பில் 15 அத்தியாயங்களில் 1500க்கும் மேற்பட்ட உரைநடை சுலேகங்கள் கொண்டுள்ளது. 15 அத்தியாங்கள் கொண்டுள்ளதால் இந்நூலை பஞ்சதசி (தசி எனில் 10, பஞ்ச எனில் 5) என்று அழைக்கப்படுகிறது.

இந்நூல் பஞ்ச பூதவிவேகம், மகாவாக்கிய விவேகம், நாடக தீபம், வித்தியானந்தம், அத்வைதானந்தம் முதலிய 15 தலைப்புகளில் உரைகள் கொண்டது.

வடமொழியில் உள்ள இந்நூலை தமிழ் மொழியில் பஞ்சதசி எனும் தலைப்பில் மூலமும், உரையுடன் கோவிலூர் மடாலயத்தினர் 2021ஆம் ஆண்டில் வெளியிட்டுள்ளனர்.[2]

வெளி இணைப்புகள்

[தொகு]

மேற்கோள்கள்

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=பஞ்சதசி&oldid=4281202" இலிருந்து மீள்விக்கப்பட்டது