பஜ்ர் தொழுகை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

பஜ்ர் தொழுகை (அரபு மொழி: صلاة الفجر ṣalāt al-faǧr) (சுபஹ் தொழுகையென பரவலாக அறியப்படுகிறது) என்பது முஸ்லிம்களது நாளாந்த ஐவேளை தொழுகைகளில் ஒன்றாகும். இது இரண்டு ரக்அத்துக்களைக் கொண்டது. அரபு மொழியில் பஜ்ர் என்பது விடியலைக் குறிக்கிறது. ஐவேளை தொழுயானது இஸ்லாமிய மார்க்க கடமைகள் ஐந்தில் இரண்டாவதாகும்.

வயது வந்த எல்லா முஸ்லிம்களும் தினமும் ஐந்து வேளை அல்லாஹ்வைத் தொழ வேண்டும். இஸ்லாத்தின் முக்கிய கடமைகளுள் தொழுகை ஒன்றென்பதால் மிகச் சில சந்தர்ப்பங்களிலேயே இதற்கு விலக்களிக்கப்படுகிறது. தொழுகையின் முக்கிய நோக்கம் இறைவனை நினைவு கூறுவதாகும்

புனித ரமழான் மாதத்தில் முஸ்லிங்கள் பஜ்ர் அதானைத் தொடர்ந்துந்து நோன்பினை கடைபிடிப்பார்கள்.அல் பஜ்ர் என்ற பெயரில் குர்ஆன் சூரா ஒன்றும் காணப்படுகிறது[1].

தொழுகையில் பஜ்ர் அதிகாலை சூரியன் உதிப்பதற்கு முன்னும், ளுஹர் என்பது மதியம் சூரியன் உச்சி சாய்ந்ததும், அஸர் என்பது மாலை நிழல் இரு மடங்காக உயரும் போதும், மஃரிப் என்பது சூரியன் அஸ்தமனம் ஆன உடனும், இஷா என்பது இரவு ஆரம்பமானதும் நடைபெறுவதாகும். ஐவேளை தொழுகைக்கான அழைப்பான அதான்(தொழுகைக்கான அழைப்பு) பள்ளிவசலால் நியமக்கப்பட்டிருக்கும் முஅத்தின் என்பவரால் சொல்லப்படும். அதற்காக பள்ளிவாயல்களில் மினாராக்கள் அமைக்கப்படுகின்றன. எனினும் ஒலிபெருக்கிகள் பயன்பாட்டுக்கு வந்த பின்னர், நேரடியாக மினார்மீது ஏறித் தொழுகைக்கு அழைப்பதில்லை. ஒலிபெருக்கிகள் மட்டுமே மினார்கள் மீது பொருத்தப்படுகின்றன. இதனால் இன்றைய மினார்கள் செயற்பாட்டுத் தேவைகளுக்காகவன்றி, ஒரு மரபுவழி அடையாளமாகவும், அழகியல் அம்சமாகவுமே பயன்படுகின்றன.

சுபஹ் தொழுகைக்கான அதான் ஏனைய 4 நேரங்களிலும் சொல்லப்படும் அதானில் தூக்கத்தை விட தொழுகை மேலானது என்ற சொற்தொடர் சொல்லப்படுகிறது.[1] மேலும், வழமையாக சுபஹ் தொழுகையில் குனூத் ஓதப்படும்.

நாடு மொழி முதன்மை
அரபு உலக அரபு صلاة الفجر(Ṣalāt al-Fajr)
பாரசீகம் பாரசீக , தாரி , தாஜிக் نماز صبح
(Namâz-e Sobh)
ஹிந்துஸ்தான் உருது نماز فجر

(Fajar namaaz)
துருக்கி துருக்கிய Sabah namazı
அஜர்பைஜான் அஜெரி Sübh namazı
அல்பேனியா , கொசோவோ அல்பேனிய Namazi i sabahut, Namaz i mëngjesit
பால்கன் செர்பிய-குரோஷியன் , போஸ்னியன் Sabah-namaz
வங்காளம் பெங்காலி ফজর (Fojor)
போலந்து போலிஷ் Fadżr
கிரேட்டர் சோமாலியா சோமாலி Salaada Fajar, Salaada Subax
மலாய் தீவு இந்தோனேஷியன் , மலாய் , ஜாவானீஸ் , சுடனீஸ் Salat subuh, Solat subuh
உஸ்பெகிஸ்தான் உஸ்பெக் Bomdod namozi
ஈராக் குர்திஸ்தான் சொரானி نوێژی بەیانی

இவற்றையும் பர்க்கவும்[தொகு]

Notes[தொகு]

  1. {{cite web}} வார்ப்புருவை பயன்படுத்துகையில் title = , url = என்பவற்றைக் கட்டாயம் குறிப்பிடவேண்டும்."".
"https://ta.wikipedia.org/w/index.php?title=பஜ்ர்_தொழுகை&oldid=2734067" இருந்து மீள்விக்கப்பட்டது