பஜ்ரங் புனியா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
பஜ்ரங் புனியா
தனிநபர் தகவல்
தேசியம்இந்தியர்
பிறப்பு26 பெப்ரவரி 1994 (1994-02-26) (அகவை 30)
ஜாஜ்ஜார், ஹரியானா, இந்தியா
உயரம்5 அடி 5 அங் (1.65 m)
எடை61 கிலோகிராம்கள் (134 lb)
விளையாட்டு
விளையாட்டுமற்போர்
நிகழ்வு(கள்)மற்போர்
பயிற்றுவித்ததுஷாகோ பெனிடிடஸ்

பஜ்ரங் புனியா என்பவர் இந்திய நாட்டின் ஒரு மற்போர் வீரர். இவர் பிறந்த தேதி பிப்ரவரி 26, 1994

வாழ்க்கை[தொகு]

இந்தியாவில், ஹரியானா மாநிலத்தில் ஜாஜ்ஜார் மாவட்டத்தில் உள்ள கெளடான் கிராமத்தில் புனியா பிறந்தார்.[2][3] இவர் தனது ஏழு வயதில் மற்போர் கற்கத் தொடங்கினார் மற்றும் அவரது தந்தை விளையாட்டை கற்க இவரை ஊக்கப்படுத்தினார்.[4] இந்திய விளையாட்டு ஆணையத்தின் பிராந்திய மையத்தில் சேர்ந்து கற்பதற்காக இவரது குடும்பம் சோனாபாட்டிற்கு 2015 ஆம் ஆண்டு குடிபெயர்ந்தனர். தற்போது இவர் இந்திய இரயில்வேயில் இரயில் பயணச்சீட்டு பரிசோதகர் (TTE) பதவியில் பணியாற்றுகிறார். அவரது குடும்பத்தினர் புனியாவை ஹரியானா காவல்துறையின் துணை கண்காணிப்பாளர் பணியில் சேர விரும்பம் தெரிவித்துள்ளன்ர்.[3]

2013 ஆசிய மற்போர் போட்டி[தொகு]

இந்தியாவின் புதுதில்லியில் நடைபெற்ற 60 கி எடைப்பிரிவிற்கான மற்போர் அரையிறுதிச் சுற்றில் புனியா 3-1 என்ற புள்ளிகளில் தென் கொரிய வீரர் ஹவாங் ரயாங் ஹாக்கிடம் தோற்று வெண்கலப் பதக்கம் பெற்றார்.

2014 பொதுநலவாய விளையாட்டுக்கள்[தொகு]

கிளாஸ்கோவ், ஸ்காட்லாந்தில் நடைபெற்ற பொதுநலவாயப் போட்டியில், 61 கி எடைபிரிவில் மற்போர் போட்டியில் புனியா வெள்ளிப் பதக்கம் வென்றார்.

2018 பொதுநலவாய விளையாட்டுக்கள்[தொகு]

ஆஸ்திரேலியாவில் உள்ள கோல்ட்கோஸ்ட் நகரத்தில் நடைபெற்ற 65 கி எடைப்பிரிவிற்கான மற்போர் இறுதிப் போட்டியில் புனியா தங்கம் வென்றார்.

2018 ஆசிய விளையாட்டுக்கள்[தொகு]

ஆகத்து 19 ஆம் தேதி அன்று இந்தோனேசியாவில் நடைபெற்ற 65 கி எடைப்பிரிவிற்கான மற்போர் இறுதிப் போட்டியில் புனியா, சப்பான் வீரரை வென்று தங்கம் வென்றார்.[5]

உலக மல்யுத்தப் போட்டி[தொகு]

2018 அக்டோபரில் அங்கேரியில் நடந்த மல்யுத்தப் போட்டியில் வெள்ளிப்பதக்கம் வென்றார். இந்தப் போட்டியில் அரை இறுதியில் கியூபாவின் வால்டெல் டோபியரை வீழ்த்தி இறுதிப்போட்டிக்குள் நுழைந்தார். இறுதிப்போட்டியில் சப்பானிய வீரர் டகுடோ ஒடோகுரோவை எதிர்கொண்ட இவர் தோல்வியடைந்தார். முன்னதாக இவர் 2013 ஆம் ஆண்டில புடாபெஸ்டில் நடந்த உலக மல்யுத்தப்போட்டியில் வெண்கலப் பதக்கம் வென்றுள்ளார்.[6]

2021 டோக்கியோ ஒலிம்பிக் போட்டி[தொகு]

2020 டோக்கியோ ஒலிம்பிக் போட்டியில் 7 ஆகஸ்டு 2021 அன்று ஆண்கள் 65 கிலோ எடைப் பிரிவில் வெண்கலப் பதக்கம் வென்றார்.[7][8]

மேற்கோள்கள்[தொகு]

  1. "India dominates". தி இந்து. 7 November 2016 இம் மூலத்தில் இருந்து 8 November 2016 அன்று. பரணிடப்பட்டது.. http://www.thehindu.com/todays-paper/tp-sports/india-dominates/article9313172.ece. பார்த்த நாள்: 8 November 2016. 
  2. Saini, Ravinder (31 July 2014). "Silver medallist Bajrang’s native village erupts in joy". The Tribune. Tribune News Service இம் மூலத்தில் இருந்து 3 March 2018 அன்று. பரணிடப்பட்டது.. http://www.tribuneindia.com/2014/20140801/haryana.htm#5. பார்த்த நாள்: 6 April 2018. 
  3. 3.0 3.1 Wins gold medal in Asian Wrestling Championship; father seeks DSP’s post for grappler, The Tribune, 14-May-2017
  4. "Glasgow 2014 - Bajrang Bajrang Profile". g2014results.thecgf.com. பார்க்கப்பட்ட நாள் 2015-10-30.
  5. "Wrestler Bajrang Punia brings India first Asian Games gold" (in en-US). The Indian Express. 2018-08-20. https://indianexpress.com/article/sports/asian-games/asian-games-2018-wresting-day-wrestler-bajrang-punia-wins-gold-5314833/. 
  6. http://sports.dinamalar.com/2018/10/1540202323/worldwrestlingchampionshipindiaBajrangPunia.html
  7. Tokyo Olympics: Bajrang Punia wins bronze medal in men's 65kg wrestling
  8. பஜ்ரங் புனியா: பள்ளியை தவிர்க்க மல்யுத்தம் பயின்றது முதல் ஒலிம்பிக் பதக்கம் வென்றது வரை
"https://ta.wikipedia.org/w/index.php?title=பஜ்ரங்_புனியா&oldid=3792058" இலிருந்து மீள்விக்கப்பட்டது