பச்சை வால்வெள்ளி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
பச்சை வால்வெள்ளி
C/2022 E3 (ZTF)
கண்டுபிடிப்பு
கண்டுபிடித்தவர்(கள்): ஸ்விக்கி டிரான்சிண்ட் ஸ்பெசலிட்டி
கண்டுபிடித்த நாள்: 2 மார்ச் 2022[1]
சுற்றுவட்ட இயல்புகள் A
ஞாயிற்றுச்சேய்மைத் தூரம்: ≈2800 AU (பேரிசென்ட்ரிக் சகாப்தம் 1950)[2]
ஞாயிற்றண்மைத் தூரம்: 1.112 AU
மையப்பிறழ்ச்சி: 1.00002 (சூரிய மைய சகாப்தம் 2495)
0.999992 (பேரிசென்ட்ரிக் சகாப்தம் 2050)[2]
சுற்றுக்காலம்: ≈50,000 yr (முகப்புக் கற்கள்)[2]
பல மில்லியன் ஆண்டுகள் (வெளிச்செல்லும்)
சாய்வு: 109.17°
கடைசி அண்மைப்புள்ளி: 12 சனவரி 2023

பச்சை வால்வெள்ளி (C/2022 E3 (ZTF) என்பது ஓர்ட் மேகக் கூட்டத்தில் இருந்து வரும் ஒரு வால்வெள்ளி ஆகும். இது 2022 மார்ச் இரண்டாம் நாள் ஸ்விக்கி டிரான்சிண்ட் ஸ்பெசலிட்டி என்ற ஆய்வுக் கருவி வழியாக கண்டறியப்பட்டது. [1] இந்த வால்மீனின் மையப்பகுதியைச் சுற்றி பிரகாசமான பச்சை நிற ஒளியைக் கொண்டுள்ளது. இதன் மையப்பகுதியில் இரு கரிம அணுக்கள் சேர்ந்த டைகார்பன் மூலக்கூறுகள் நிறைந்துள்ளன. இங்கு நடக்கும் வேதிவினைகளால் இதில் பச்சை நிற ஒளி உண்டாகிறது எனவே இது பொதுவாக பச்சை வால்வெள்ளி என்று அழைக்கப்படுகிறது. [3] [4]:{{{3}}} இந்த வால்வெள்ளியானது சுமார் 5000 ஆண்டுகளுக்கு ஒரு முறை புவிக்கு அருகில் வரக்கூடியது ஆகும்.[5]

இந்த வால்வெளிக்கு C/2022 E3 (ZTF) என்று வானியலாளர்கள் பெயர் இட்டுள்ளனர். இந்தப் பெயரில் இடம்பெற்றுள்ள C என்பது comet (வால் மீன்) என்பதைக் குறிக்கிறது. 2022 மார்ச் முதல் பாதியில் ஸ்விக்கி டிரான்சிண்ட் ஸ்பெசலிட்டி என்ற ஆய்வுக் கருவி வழியாக கண்டறியப்பட்ட மூன்றாவது (3) வால்வெள்ளி என்பதை குறிப்பதாக "2022 E3" என்பது உள்ளது. [4]

வால்வெள்ளியின் மையப்பகுதியானது ஒவ்வொரு 8.7 மணி நேரத்திற்கும் சுழலக்கூடியதாகவும்[4]:{{{3}}} [6], ஒரு கிலோமீட்டர் அளவுள்ளதாக இருக்கும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது. இதன் வால்களானது தூசி மற்றும் வாயுக்கள் அடங்கி மில்லியன் கணக்கான மைல்களுக்கு நீண்டுள்ளன. 2022 சனவரியில், மூன்றாவது சூரியன்நோக்கு வால் காணப்பட்டது. [7]

வால்வெள்ளி 2013 சனவரி 12 அன்று 1.11 AU (166 மில்லியன் km; 103 மில்லியன் mi) தொலைவில் அதன் சுற்றுப்பாதை வீச்சை அடைந்தது. அங்கிருந்து சுற்றுப்பாதையில் நகர்ந்து புவிக்கு மிக நெருக்கமாக 2023 பெப்ரவரி முதல் நாளன்று 0.28 AU (42 மில்லியன் km; 26 மில்லியன் mi) தொலைவுக்கு நெருங்கியது. மேலும் வால்வெள்ளியின் தோற்ற ஒளிப்பொலிவெண் 5 ஐ எட்டியது இச்சமயத்தில் நிலவு இல்லாத இருண்ட வானத்தில் வெறும் கண்ணுக்குத் தெரியும் நிலையை எட்டியது. [8] [9]

காட்சியகம்[தொகு]

குறிப்புகள்[தொகு]

  1. 1.0 1.1 Bolin, B.; et al. (21 March 2022). "MPEC 2022-F13 : COMET C/2022 E3 (ZTF)". Minor Planet Electronic Circular. Minor Planet Center. Archived from the original on 25 March 2022. பார்க்கப்பட்ட நாள் 2022-08-24.
  2. 2.0 2.1 2.2 Horizons output. "Barycentric Osculating Orbital Elements for Comet C/2022 E3 (ZTF)". Archived from the original on 15 சனவரி 2023. பார்க்கப்பட்ட நாள் 2022-08-24. (Solution using the Solar System's barycenter (Sun+Jupiter). Select Ephemeris Type:Elements and Center:@0) Epoch 1950 has PR= 1.887E+07 / 365.25 = 51700 ஆண்டுகள்
  3. Georgiou, Aristos (2023-01-10). "What makes the green comet green?". Newsweek (in ஆங்கிலம்). Archived from the original on 2023-01-25. பார்க்கப்பட்ட நாள் 2023-01-25.
  4. 4.0 4.1 4.2 "A rare green comet is becoming visible in northern skies. How to see it without a telescope". www.usatoday.com (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2023-02-02.
  5. "மீண்டும் கற்கால வால்நட்சத்திரம்!". Hindu Tamil Thisai. பார்க்கப்பட்ட நாள் 2023-02-02.
  6. "ATel #15879: Rotation period of comet C/2022 E3 ZTF from CN morphology". The Astronomer's Telegram. 30 January 2023. பார்க்கப்பட்ட நாள் 2 February 2023.
  7. "Understanding the Tails of Comet ZTF (C/2022 E3)". Sky & Telescope (in அமெரிக்க ஆங்கிலம்). 2023-02-01. பார்க்கப்பட்ட நாள் 2023-02-02.
  8. "COBS: Comet C/2022 E3 (ZTF) observation list". Archived from the original on 1 February 2023. பார்க்கப்பட்ட நாள் 31 January 2023.
  9. Mack, Eric (2023-01-23). "Bright Green Comet Passing Earth Is Visible Now in Dark Skies". CNET (in ஆங்கிலம்). Archived from the original on 2023-01-23. பார்க்கப்பட்ட நாள் 2023-01-24.

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=பச்சை_வால்வெள்ளி&oldid=3788475" இலிருந்து மீள்விக்கப்பட்டது