பச்சை பெருந்தட்டான்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

தட்டான்கள் மற்றும் ஊசித்தட்டான்கள் ஒடொனஸ் என்ற குடும்பத்தில் அடங்கும். உலகளவில் 6,000 வகைகளாகவும், இந்திய நிலப்பரப்பில் சுமார் 500-க்கும் மேற்பட்ட வகைகளாகவும் பரவியுள்ளன. தமிழகத்தில் சில நூறு வகைகளாகக் காணப்படுகின்றன. தொன்மைக்கால பூச்சியினங்களில் ஒன்றாக தும்பிகள் காணப் படுகின்றன.

நிறத்தில் ஆணைப் போன்றே பெண் தும்பி காணப்படும். இதை இதன் அளவைக் கொண்டு ஆண் பெண் என்று வேறுபடுத்தலாம். பளிச்சிடும் மஞ்சள் மற்றும் பச்சைக் கலந்த நிறத்தில் முகமும், நீலம் மற்றும் மஞ்சள் கலந்த கருப்பு நிறத்தில் முகம் காணப்படும். கால்களின் உள் பக்கம் கருப்பாகவும் வெளிப் பக்கம் பச்சையாகவும் காணப்படும். முதுகின் மேல் பக்கத்தில் அமைந்திருக்கும். வயிற்றின் துவக்கப் பகுதியில் முழுமையான பச்சை நிறத்தில் காணப்படும். அதன் கீழே நீல நிறம் காணப்படும். தொட்ர்ந்து கருப்பு, பச்சை, மஞ்சள் வளையங்களுடன் பார்ப்பதற்கு அழகாக இருக்கும்[1]

மேற்கோள்கள்[தொகு]

  1. பூச்சிகள் ஓர் அறிமுகம், ஏ.சண்முகானந்தம் முதல் பதிப்பு, சனவரி 2017, வானம் பதிப்பகம்
"https://ta.wikipedia.org/w/index.php?title=பச்சை_பெருந்தட்டான்&oldid=3873370" இலிருந்து மீள்விக்கப்பட்டது