உள்ளடக்கத்துக்குச் செல்

பச்சை பூட்சு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
எவரெசுட்டு மலையேறி ஒருவரால் எடுக்கப்பட்ட பச்சை பூட்சின் ஒளிப்படம்

பச்சை பூட்சு அல்லது பச்சைப் பூட்டணி என்பது இமயமலையில் இறந்து கிடக்கும் ஒரு அடையாளம் தெரியாத மலையேறியின் உடலைக் குறிக்கிறது. இது இமயமலையின் எவரெசுட்டுக் கொடுமுடிக்குச் செல்லும் வடகிழக்கு முகட்டு வழியில் ஒரு இடக்குறியீடாக விளங்குகிறது.[1][2] இந்த உடல் யாருடையதென்று அலுவலகப்பூர்வமாக தெரியவில்லையெனிலும் இது 1996-இல் மலையேறும் போது இறந்த சேவாங் பல்ச்சோர் என்னும் ஒரு இந்திய மலையேறியின் உடலாக இருக்கலாம் என்று நம்பப்படுகிறது. அந்த உடலில் இருந்த பச்சை நிறக் காலணியே பச்சை பூட்சு என்ற பெயர் வரக் காரணமாக இருக்கிறது. வடக்குப் பக்கமாக எவரெசுட்டில் ஏறிய மலையேற்றக் குழுக்கள் அனைத்தும் 8500 மீட்டர் (27,900 அடி) உயரத்தில் இந்த உடலை ஒரு சுண்ணாம்புக்கல்லால் ஆன குகைக்கருகில் கண்டுள்ளனர்.

2014 மே மாதம் இந்த பச்சைப் பூட்சு காணப்படவில்லை என்று கூறப்பட்டாலும் 2017-இல் மலையேறிகள் அதே உயரத்தில் அதனை மீண்டும் கண்டனர். காணப்படாத சமயத்தில் அந்த உடல் கற்களால் மூடப்பட்டிருக்கலாம் என்று கருதுகிறார்கள்.

வரலாறு

[தொகு]

பியர் பேப்பரோன் எனும் பிரெஞ்சு மலையேறி ஒருவரே 2001 மே 21-இல் இந்த உடலைக் காணொளிப் பதிவு செய்தார். செர்ப்பாக்கள் பியரிடம் அந்த உடலானது ஆறு மாதங்களுக்கு முன் ஏறிய ஒரு சீன மலையேறியின் உடல் என்று கூறியதாகப் பதிவு செய்துள்ளார். நாளடைவில் இந்த உடலானது வடக்குப் பக்கம் மலையேறுபவர்களுக்கு ஒரு இடக்குறியீடாக மாறிப்போனது.

பச்சைப் பூட்சும் மற்றோரும்

[தொகு]

21-ஆம் நூற்றாண்டின் துவக்கத்தில் எவரெசுட்டுச் சிகரத்தில் கிடக்கும் கிட்டத்தட்ட 200 உடல்களில் ஒன்றாக பச்சை பூட்சும் ஆனது.[3][4] எப்போதிருந்து இந்தச் சொல் வழக்கில் வந்ததென்று தெரியவில்லை. எனினும் வடக்கு வழியில் ஏறிய அனைத்துக் குழுக்களும் இந்த உடலை 8500 மீட்டர் உயரத்தில் உள்ள ஆக்சிசன் புட்டிகள் கிடக்கும் அந்தக் குகையில் கண்டுள்ளனர்.

மற்றொரு பெயர் பெற்ற உடலானது பிரான்சிசு திசுட்டெபானோ அர்செண்டீவு (Francys Distefano-Arsentiev) என்னும் பெண்மணியுடையது. இந்த உடல் தூங்கும் அழகி (slepping beauty) என்னும் பெயரால் வழங்கப்படுகிறது. இவர் 1998-இல் சிகரத்தின் உச்சியை அடைந்து இறங்குகையில் இறந்தவர். 2007-வரை அந்த உடல் காணப்பட்டது.

வானவில் பள்ளத்தாக்கு என்னும் உச்சிக்கு சற்று கீழே உள்ள பகுதியில் பல உடல்கள் பல எடுப்பான வண்ணங்களால் ஆன மலையேறும் ஆடைகளுடன் கிடக்கின்றன.[5]

2006-இல் டேவிட் சார்ப்பு என்னும் பிரித்தானிய மலையேறி இந்த பச்சை பூட்சு குகையில் உடல் வெப்பம் குறைந்த நிலையில் கிடந்ததை மார்க்கு இங்கிலிசு என்னும் மலையேறியும் அவரது குழுவினரும் கண்டுள்ளனர். எனினும் அவர்கள் எந்த உதவியும் செய்யாமல் தொடர்ந்து மலையேறியுள்ளனர். டேவிட் அதற்குப் பின் சில மணிநேரங்களில் இறந்து விட்டனர். மேலும் அந்நாளில் கிட்டத்தட்ட 36 பேர் மலையேறுகையில் அவரைப் பாரத்துள்ளனர். எனினும் அவர் பச்சை பூட்சாக இருக்கும் என்றெண்ணி கூர்ந்து நோக்கவில்லை என்று கூறப்படுகிறது.[3][6]

மேற்கோள்கள்

[தொகு]
  1. Nuwer, Rachel (8 October 2015). "The tragic tale of Mt Everest’s most famous dead body". BBC Future. http://www.bbc.com/future/story/20151008-the-tragic-story-of-mt-everests-most-famous-dead-body. 
  2. Johnson, Tim (20 May 2007). "Everest's Trail of Corpses". The Victoria Advocate. https://news.google.com/newspapers?id=Q6Y_AAAAIBAJ&sjid=c1YMAAAAIBAJ&pg=1200,2723423&dq=green-boots+everest&hl=en. 
  3. 3.0 3.1 Nuwer, Rachel (28 November 2012). "There Are Over 200 Bodies on Mount Everest, And They're Used as Landmarks". Smithsonian Magazine இம் மூலத்தில் இருந்து 30 நவம்பர் 2012 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20121130191240/http://blogs.smithsonianmag.com/smartnews/2012/11/there-are-over-200-bodies-on-mount-everest-and-theyre-used-as-landmarks. 
  4. Johnson, Tim (7 June 2007). "Corpses litter the 'death zone' near Everest's summit, frozen for eternity". McClatchy Newspapers இம் மூலத்தில் இருந்து 1 மே 2015 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20150501221227/http://www.mcclatchydc.com/2007/05/16/16188/corpses-litter-the-death-zone.html. 
  5. Parker, Alan (24 May 2012). "Everest: 'The open graveyard waiting above'". Maclean's.
  6. Breed, Allen G.; Gurubacharya, Binaj (18 July 2006). "Part II: Near top of Everest, he waves off fellow climbers: 'I just want to sleep'". Oh My News இம் மூலத்தில் இருந்து 24 ஏப்ரல் 2014 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20140424133320/http://english.ohmynews.com/articleview/article_view.asp?menu=c10400&no=305837&rel_no=1. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=பச்சை_பூட்சு&oldid=3376393" இலிருந்து மீள்விக்கப்பட்டது