பச்சை தண்ணீர் பாம்பு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
பச்சை தண்ணீர் பாம்பு
OliveKeelback.jpg
உயிரியல் வகைப்பாடு
திணை: விலங்கு
தொகுதி: முதுகுநாணி
வகுப்பு: முதுகெலும்பி
வரிசை: ஊர்வன
துணைவரிசை: செதிலுடைய ஊர்வன
குடும்பம்: பாம்பு
பேரினம்: Atretium
இனம்: A. schistosum
இருசொற் பெயரீடு
Atretium schistosum
(Daudin, 1803)

கோரைப்பாம்பு அல்லது பச்சை தண்ணீர் பாம்பு (Atretium schistosum) என்பது ஒரு நஞ்சில்லாத தண்ணீர் பாம்பு இனமாகும் இது தெற்கு ஆசியாவில் காணப்படுகிறது.

பரவல்[தொகு]

இப்பாம்புகள் இலங்கை, இந்தியா, வங்கதேசம்,நேபாளம், இந்தியாவில் தெற்கு அட்சரேகை தீபகற்ப இந்தியாவில் 15 பாகை வடக்கிலும், கிழக்கு கடற்கரையில் இருந்து உத்தரகாண்ட் மநிலம்வரையிலும், பெங்களூரை சுற்றி பொதுவான இருக்கும் என அறியப்ப்படுகிறது. தமிழகத்தின் வட ஆற்காடு மாவட்டம், ஆந்திரத்தின் காக்கிநாடா பகுதிகளில் கடல் மட்டத்திலிருந்து 1000மீ (3280அடி) உயரம் வரை காணப்படுகிறது. பெரும்பாலும் வட இந்தியாவில் காணப்படுவதில்லை.

விளக்கம்[தொகு]

இதன் தலை மெல்லியதாக இருக்கும். நிறம் ஆலிவ் பச்சை நிறத்துடனும் அடிப்பகுதி ஆரஞ்சு அல்லது மஞ்சள் நிறத்தில் இருக்கும். சில நேரங்களில் பக்கவாட்டில் இளஞ்சிவப்பு அல்லது ஊதா கோடுகள் இருக்கும். வால் நீளம் மொத்த நீளத்தில் நான்கில் ஒரு பங்காகவோ மூன்றில் ஒரு பங்காகவோ இருக்கும்.

பெண் பாம்புகள் 70 முதல் 75 செ.மீ.நீளமும் , ஆண் பாம்புகள் 50 முதல் 60 செமீ நீளம் இருக்கும். இப்பாம்பிகளில் 87 செ.மீ. நீளமானதுவரை அளவிடப் பட்டுள்ளது.

நீர் தேங்கிய குளம் குட்டை அருகில் அல்லது சுற்றியுள்ள தாவரங்கள் மத்தியில் காண முடியும்.

பழக்க வழக்கங்கள்[தொகு]

தண்ணீரிலோ அல்லது சுற்றியுள்ள தாவரங்களுக்கு இடையிலோ வாழ்கின்றன. பகளில் இரை தேடக்கூடி பாம்பு இது என்றாலும், இரவிலும் காணப்படுகிறது. கையாளும் போது இந்த பாம்புகள் அரிதாகவே கடிக்கும் என்று அறியப்படுகிறது. கோடை காலத்தில் வளையில் நீண்ட துயில் கொள்கின்றன.

இதன் முதன்மையான உணவு தவளைகள், தலைப்பிரட்டைகள், மீன்கள், நண்டுகள் போன்றவற்றை ஆகும். இதன் இரையை பக்கவாட்டில் தாக்கி பிடிக்கும் இந்த பாம்பு இரையை விரைவாக கடந்து சென்று திடீரென்று தனது தலையை திருப்பி இரையைக் கவ்வும். இப்பாம்புகள் கொசுக்களின் குடம்பிகளை சாப்பிடுவதாக அறியப்படுகிறது.

இனப்பெருக்கம்[தொகு]

இது பருவ மழைக்காலத்தில் முட்டையிட்டு குஞ்சு பொரித்து தன் இனத்தை பெருக்குகிறது. இதன் முட்டைகள் வெள்ளையாகவும், மென்மையாகவும் இருக்கும் 30 இருந்து 35 மி.மீ நீளம் கொண்டவை. இவை முட்டை இடும் காலம் சனவரி முதல் ஏப்ரல் மாதம் வரையாகும். புதிதாகப் பிறந்த பாம்புகளின் நீளம் 16.6 செ.மீ தொடக்கம் 17.5 செ.மீ நீளம் வரை இருக்கும்.

பிறமொழிகளில்[தொகு]

  • கன்னடம் - பர்ம்யா (Barmmya).
  • தெலுங்கு - நல்ல வச்லகில்லீ (Nalla wahlagillee)
  • சிங்களம் - தியா வர்ணயா (Diya Warnaya)

மேற்கோள்கள்[தொகு]

  • Boulenger, George A. 1890 The Fauna of British India, Including Ceylon and Burma. Reptilia and Batrachia. Taylor & Francis, London, xviii, 541 pp.
  • Cantor, T. E. 1839 Spicilegium serpentium indicorum [parts 1 and 2]. Proc. Zool. Soc. London, 7: 31-34, 49-55.
  • Daudin 1802 Histoire Naturelle, Générale et Particulière des Reptiles. vol. 7. Paris: Dufart [1802], 436 pp.
  • Günther, A. 1898 Notes on Indian snakes in captivity. Ann. Mag. Nat. Hist. (7) 1: 30
  • Wall, FRANK 1921 Ophidia Taprobanica or the Snakes of Ceylon. Colombo Mus. (H. R. Cottle, govt. printer), Colombo. xxii, 581 pages
"https://ta.wikipedia.org/w/index.php?title=பச்சை_தண்ணீர்_பாம்பு&oldid=2672148" இருந்து மீள்விக்கப்பட்டது